தமிழ் நாடு சட்டமன்ற உறுப்பினர் ஒஸ்மானியாக் கல்லூரிக்கும், முஹம்மதியா பள்ளிவாசலுக்கும் யாழ்ப்பாணம்
-பாறுக் ஷிஹான்-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச் செயலாளரும் தமிழ் நாடு கடையநல்லூர் சட்ட மன்ற உறுப்பினருமான கே. எம்.ஏ.முஹம்மத் அபூபக்கர் யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் (23) விஜயம் செய்ததுடன் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வருகை தந்த அவர் மஸ்ஜிதுல் முஹம்மதியா பள்ளிவாசலில் யாழ்ப்பாணம் முஸ்லீம் பிரதிநிதிகள் சிலருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.
பின்னர் ஒஸ்மானியாக் கல்லூரி, யாழ் வணிகர் கழகம் ,உதயன் காரியாலயம், நல்லூர் பகுதி , மற்றும் யாழில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் பல தரப்பினரையும் சந்தித்துள்ளார்.
Post a Comment