இலங்கையில் மின்சார, முச்சக்கர வண்டி தயாரிப்பு
2020ஆம் ஆண்டின் நடுப்பகுதியளவில் நாட்டில் தயாரிக்கப்படும் மின்சார முச்சக்கர வண்டிகளை சந்தையில் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்குமென நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு தெரிவிக்கின்றது.
நேற்றைய தினம் (23) கொழும்பில் இடம்பெற்ற மின்சார முச்சக்கர வாகன அறிமுக நிகழ்சில் அமைச்சர் மங்கள சமரவீர இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
ஜப்பான் போன்ற நாடுகளுக்கு மின்சார முச்சக்கர வாகனத்தை ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
புதிய கொள்கையின் கீழ் இந்தத் தொழிற்சாலை அமைக்கப்படுமெனவவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முச்சக்கர வண்டிகள் விசேட பங்களிப்பை வழங்குவதாகவும் தெரிவித்த அவர், இந்த தொழில்துறையில் ஈடுபட்டுள்ளவர்களை வலுவூட்டுவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் எனவும் வலியுறுத்தினார்.
குறிப்பாக சுற்றுலாத் துறைக்கான முறையான வேலைத்திட்டத்தின் கீழ் முச்சக்கர வண்டிகளைப் பயன்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
"Exporting Electric vehicles to Japan from Srilanka..."
ReplyDeleteHmmmm Someone please tell me 1 genuine reason why I should not Laugh at this plan.
இப்போ JMயில் அரைவாசிக்கு மேல் காமேடி நியூஸ் தான்.
ReplyDelete