"விஜயகலாவின் பொறுப்பற்ற கருத்து, அவர் சுயநினைவின்றி இருந்ததை உணர முடிந்தது"
இராஜாங்க அமைச்சர் விஜயகலா பிரபாகரன் வேண்டும் என பதற்றத்தில் தெரிவித்ததாக கூறுகிறார் என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று -03- ஊடகவியலாளர்களை சந்தித்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
விஜயகலாவின் பொறுப்பற்ற கருத்து பரிமாற்றமானது அவர் சுயநினைவின்றி இருந்ததை உணர முடிவதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான விடயத்தை பதற்றத்தில் கூறினாலும் அது பிழையான விடயமாகும். 30 வருட யுத்தத்தின் போது பல்வேறுபட்ட இன்னல்களுக்கு முகங்கொடுத்திருந்த நிலையில் தற்போது சுதந்திரமடைந்துள்ளோம்.
இந்த நிலையில் மீண்டும் அவ்வாறானதொரு சூழலை ஏற்படுத்த முயற்சிப்பது தவறாகும். எனினும் அவர் இப்படியொரு விடயத்தை தெரிவிப்பது இதுவல்ல முதல் தடவை.
இப்படியான கருத்துக்களை சிவாஜிலிங்கம், விக்னேஸ்வரன் போன்றோரும் கூறி வருகின்றனர். ஆனால் விஜயகலா போன்றோர் யாழில் ஒன்று சொல்கிறார்கள். கொழும்பில் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வேறொன்றை சொல்கிறார்கள் என கூறியுள்ளார்.
அத்துடன், சிலர் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனை ஐயா என அழைக்கிறாரகள். ஆனால் நான் தீவிரவாதிகளை ஒருபோதும் ஐயா என அழைக்கமாட்டேன். மகாத்மா காந்தி, ஆப்ரகாம் லிங்கன் போன்றோரையே நான் ஐயா என அழைப்பேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மதிப்புக்குரிய அமைச்சர் அவர்களே,
ReplyDeleteமகாத்மா காந்தியையும் பிரித்தானியர்கள் அவர்களுக்கு எதிராக போராடும் போது தீவிரவாதிகள் என தான் அழைத்திருந்தார்கள். இன்று அவர் எல்லோருக்கும் ஒரு எடுத்து காட்டு. அது போலவே தேசிய தலைவர் மேதகு ...............
புரிந்திருக்கும் என நம்புகின்றேன்