விஜயகலாவுக்கு மன கஸ்டம் என்றால், மனநல வைத்தியசாலைக்கு அனுப்ப வேண்டும் - மரிக்கார்
பிரபாகரன் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா கூறிய கருத்து தொடர்பில் தான் அவரை தொடர்பு கொண்டு வினவியதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று -03- இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இராஜாங்க அமைச்சர் விஜயகலாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது தான் மன கஸ்டத்தில் இருந்ததால் தான் அவ்வாறு கூறியதாக தெரிவித்தார்.
இது தவறு எனில் ஹிட்லர் தொடர்பில் கூறப்பட்ட கருத்தும் இது போன்றதொன்றே என கூறியுள்ளார்.
இதற்கு பதில் கருத்து கூறிய மரிக்கார், அவ்வாறு அவருக்கு மன கஸ்டம் இருக்குமாயின் அவரை மனநல வைத்தியசாலைக்கு அனுப்ப வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் காரணமாக குழப்பம் ஏற்பட்ட நிலையில் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கண்டி திகன பிரச்னையில் வாய் முடி இருந்த நீயெல்லாம் அறிவுரை கூருகின்றாய் பாரு.
ReplyDeleteதனது கணவனை கொலை செய்த ஒரு பயங்கரவாத அமைப்பை ஆதரித்து பேசிய இவர் எவ்வாறு பத்தினியாக இருக்க முடியும்? அதிகார மோகத்தால் புலிகளுடன் இணைந்து இவரே அவரை கொலை செய்திருப்பார்... இவரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்..
ReplyDeleteDear Minister, விஐயகலாவின் கருத்தில் எனக்கும் உடன்பாடு இல்லை தான்.
ReplyDeleteஆனால். அதற்க்காக நீங்கள் சிவாஜி கணேசன் மாதிரி ஓவர் acting செய்யாதீர்கள்.
anusath போன்ற பாசிச புலி பயங்கரவாதிகளுக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு என்ன செய்யலாம் அனுசரித்துப் போக வேண்டும்
ReplyDelete