என்னை மலேசிய அரசாங்கம், கைது செய்ததாக அவதூறு பரப்புகிறார்கள் - ஜாகிர் நாயக்
ஜாகிர் நாயக்கின் மனம் திறந்த பேச்சின் சுருக்கம்!
'அஸ்ஸலாமு அலைக்கும்!
கடந்த இரண்டு வருடங்களாக என்னைப் பற்றி இந்திய மீடியாக்களான என்டிடிவி, டைம்ஸ் நவ், ஏபிபி, ஆஜ்தக், இந்தியா டுடே போன்றவை பல்வேறு அவதூறுகளை பரப்பிக் கொண்டுள்ளன.
என்னை மலேசிய அரசாங்கம் கைது செய்துள்ளதாகவும், இன்னும் 15 நாளில் நான் இந்தியா கொண்டு வரப்படப் போவதாகவும், செய்திகள் வெளியிட்டன.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மலேசிய பயணத்தின் முக்கிய நோக்கம் என்னை இந்தியா கொண்டு வருவதுதான் என்று டைம்ஸ் நவ் ஒரு படி மேலே சென்று அவதூறை பரப்பியது.
எனது மும்பை அலுவலகத்தில் 500 கோடி பிடி பட்டதாகவும் செய்தி வந்தது.
பங்களாதேஷில் யாரோ ஒருவன் குண்டு வைத்து 20 பேர் இறந்ததற்கு எனது பேச்சுக்கள்தான் காரணம் என்று உச்சகட்டமாக அவதூறை பரப்பின. தற்போது இவை அனைத்தும் பொய் என நிரூபணமாகியுள்ளது.
இறைவன் குர்ஆனிலே கூறுகிறான்....
49:6. முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; இல்லையேல் அறியாமையினால் குற்ற மற்ற ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக கவலைப்படுபவர்களாக ஆவீர்கள்.
இறைவனின் உதவி கொண்டு எனது மேல் உள்ள பழிகள் துடைக்கப்படும்... அவதூறுகளிலிருந்து நாம் தவிர்ந்து கொள்வோம்.
வஸ்ஸலாம்...."
Post a Comment