வாங்கிக் கட்டினார், விமல் வீரவன்ச
இராஜாங்க அமைச்சர் விஜயகலா வெளியிட்ட கருத்து தொடர்பில், நாடாளுமன்றத்தில் நேற்று பாரிய குழப்ப நிலை ஏற்பட்டது.
தாம் சுதந்திரமாக வாழ மீண்டும் விடுதலை புலிகள் அமைப்பை கட்டியெழுப்பப்பட வேண்டும் என அமைச்சர் விஜயகலா குறிப்பிட்டமையால் இந்த குழப்ப நிலை ஏற்பட்டது.
அவரின் கருத்து தொடர்பில் நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள், உறுப்பினர்கள் ஒருவருக்கு ஒருவர் தங்கள் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
இதன்போது இதுவொரு சட்டவிரோதமான கருத்து எனவும், விஜயகாலாவுக்கு நாடாளுமன்றத்தில் இடமளிக்க கூடாதெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குறிப்பிட்டிருந்தார்.
இதன் போது கோபமடைந்த சபாநாயகர் “இப்படி கூச்சலிட்டால் விமல் வீரவன்சவை சுட்டிக்காட்ட நேரிடும். நாடாளுமன்றத்தை வைத்தே நாட்டை ஆட்சி செய்ய வேண்டும். மக்களுக்கு சேவை செய்யவே நாடாளுமன்றம் உள்ளது. உங்கள் விருப்பத்திற்கமைய செயற்படுவதற்கல்ல.
இங்கு பலர் பல கருத்துக்களை வெளியிட்டவர்கள் உள்ளனர். விமல் வீரவன்ச எப்படி இவ்வாறு பேச முடியும். நாடாளுமன்றத்திற்கு குண்டு வைத்து தகர்க்க வேண்டும் என கூறிவிட்டு இன்று நல்லவர் போன்று காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றீர்களா? அமைதியாக அமருங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து வீரவன்ச அமைதியாக தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார்.
Post a Comment