மஹிந்தவுக்கு சீனா, நற்சான்றிதழ் வழங்கக் கூடாது - மங்கள எச்சரிக்கை
ஊடகங்கள் மீதான வரையறைகளில் தமக்கு உடன்பாடு கிடையாது என ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இணையத் தளங்களோ அல்லது வேறு ஊடகங்களின் மீதோ கட்டுப்பாடுகள் வரையறைகள் விதிக்கப்படுவதில் உடன்பாடு கிடையாது என அவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் பூரண ஊடக சுதந்திரம் உறுதி செய்யப்பட வேண்டியது அவசியமானது.
ஊடக நிறுவனம் ஒன்று பொய்யான, சேறு பூசும் வகையிலான அல்லது மோசமான முறையில் செய்திகளை வெளியிட்டால் அதனை சரியானதா அல்லது பிழையானதா என்பதனை பிரித்து அறிந்து கொள்ளும் அளவிற்கு மக்களில் பெரும்பான்மையானவர்களுக்கு அறிவு உண்டு.
ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
மஹிந்த ஊழல் மோசடிகளில் ஈடுபடவில்லை என சீனா சான்றிதழ் வழங்கக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
நியூயோர்க் டைம்ஸ் ஊடகம் பிழையான செய்திகளை வெளியிட்டிருந்தால் அதற்கு எதிராக மஹிந்த ராஜபக்ச வழக்கு தொடர்ந்திருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment