தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக, மீண்டும் பேராசிரியர் நாஜீம்...?
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவிக்கான வாக்கெடுப்பில் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் 13 வாக்குகள் பெற்று முதலாமிடத்துக்கு தெரிவாகியுள்ளதாகவும் இறுதித் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்கிசையில் உள்ள கல்வி வள நிலையத்தில் நேற்று (28) பல்கலைக்கழகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரி உமா குமாரசாமி தலைமையில் வாக்கெடுப்பு இடம்பெற்றது. வாக்கெடுப்பில் 19 பேரவை உறுப்பினர் கலந்து கொண்டுள்ளனர்.
உபவேந்தர் பதவிக்காக போட்டியிட்ட கலாநிதி றமீஸ் அபூபக்கர் 11 வாக்குகளையும், கலாநிதி ரஸ்மி ஆதம்பாவா 10 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
இம்முறை உபவேந்தர் பதவிக்காக 21 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் இரண்டு பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஏனைய 19 பேர் உபவேந்தர் தேர்வுக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.
இருப்பினும், நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பு மற்றும் தேர்வுக்கான போட்டி என்பவற்றில் 10 பேர் மாத்திரம் கலந்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த தேர்தல் முடிவுகள் பல்கலைக்கழக பேரவையினால் உயர் கல்வியமைச்சர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரின் சிபாரிசுகளுடன் இறுதி முடிவெடுப்பதற்காக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Insa Allah he is the VC again
ReplyDelete