இப்படி செல்பி எடுக்காதீர்கள்
விரலை காட்டி செல்பி எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றுவது மிகவும் தவறான விடயம் என்று ஐ.பி.எஸ்.ரூபா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சசிகலா அடைக்கப்பட்டு இருக்கும் பெங்களூர் பரப்பன அக்கிரகார சிறையில் நடக்கும் முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் ஐ.பி.எஸ்.ரூபா.
இந்த விடயத்தில் அவரின் அணுகுமுறை காரணமாக இந்தியா முழுக்க பலரது கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்தவர் இந்த பொலிஸ் அதிகாரி.
இந்த நிலையில் இவர் செல்பி குறித்து கூறிய விடயம் ஒன்று பலரது பாராட்டுதலையும் பெற்று வருகிறது.
சமூக வலைத்தளங்களில், கை விரல்கள் தெரியும்படி செல்பி எடுத்து போடக்கூடாது என்று சில தினங்களுக்கு முன்னர் தகவல் வெளியானது.
அப்படி செய்தால் நம்முடைய கைரேகை தகவல்கள் வெளியாகிவிடும் என்றும் கூறப்பட்டது. இதெல்லாம் வதந்தி என்றும் சிலர் மறுத்தனர்.
ஆனால் தற்போது இதே எச்சரிக்கையை ஐபிஎஸ் ரூபாவும் விடுத்துள்ளார். விரலை காட்டி செல்பி எடுத்து சமூக வலைதளத்தில் போடுவதும் மிகவும் தவறான விடயம் என்று ஐ.பி.எஸ்.ரூபா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விரல்களை காட்டி செல்பி எடுப்பதில் ஆபத்து உள்ளது, சைபர் குற்றவாளிகள் உங்கள் தகவலை திருடி விடுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
இதற்கு அவர் விளக்கமும் அளித்துள்ளார், நம்முடைய, செல்பியில் உள்ள கை விரல்களை ஜூம் செய்து அதை ஸ்கேன் செய்து பின் அதை வைத்து நமது கை ரேகையை எடுப்பார்கள். பின் அதை வைத்து பெரிய அளவில் மோசடிகளை செய்வார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் இதை வைத்து போலியான கைரேகை உருவாக்கி, தவறு நடக்கும் இடங்களில் நம்முடைய கைரேகையை விட்டு செல்ல வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனால் தயவு செய்து கைரேகை தெரியும்படி புகைப்படம் போட வேண்டாம் என்று ஐபிஎஸ் ரூபா கோரிக்கை வைத்துள்ளார்.
Post a Comment