பௌத்தத்தை கடைப்பிடிக்கும் ஆட்சியாளர், எந்த சந்தர்ப்பத்திலும் சர்வாதிகாரியாக இருக்க மாட்டார்
பௌத்த தர்மத்தை கடைப்பிடிக்கும் ஆட்சியாளர் ஒருவர் எந்த சந்தர்ப்பத்திலும் சர்வாதிகாரியாக இருக்க மாட்டார் என பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.
கேகாலையில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டின் புகழானது பௌத்த தர்மம் மற்றும் பௌத்த குருகுல கல்வி மூலமே பரவியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை முன்னேற்ற சர்வாதிகார ரீதியில் ஆட்சி நடத்தும் ஹிட்லரை போல ஆட்சியாளர் தேவை என பௌத்த மதத் தலைவர் ஒருவர் அண்மையில கூறியிருந்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாப் கபீர் ஹாஷிம் அவர்களே,
ReplyDeleteபுத்த மதம் எதை போதிக்கின்றது என்ற சிற்றறிவாவது தங்களிடம் இருக்கிறதா?
ஆனால், அவர் ஒரு நேர்மையான சர்வ அதிகாரியாக இருக்கலாம்; ஹிட்லரைப் போன்றல்ல, உமரைப் போன்று!
ReplyDelete