புளிச்சாக்குளம் - புதுக்குடியிருப்பு ஜும்ஆ பள்ளிவாசல் முதலிடத்தை பெற்றது
ஆலோசனை மற்றும் நல்லிணக்கப் பேரவை (யுசுஊ) மூலமாக சென்ற வருடம் (2017) அகில இலங்கை மட்டத்தில் மஸ்ஜித்கள் இடையிலாக நடாத்தப்பட்ட போட்டி நிகழ்வு ஒன்றில் புளிச்சாக்குளம், புதுக்குடியிருப்பு ஜும்ஆ பள்ளிவாசல் புத்தளம் மாவட்டத்தில் முதல் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.
கடந்த 14.07.2018 அன்று அலரி மாளிகையில் இதற்கான பரிசளிப்பு நிகழ்வு நடாத்தப்பட்டு சான்றிதழும் வழங்கப்படடுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, சூறா சபை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து மேற்கொண்டிருக்கும் வினைத்திறன் மிக்க இந்த முன்னெடுப்பானது சமூகத்தினுள் மிக முக்கியமான ஓர் அங்கத்தை பொதுச் சேவை நிறுவனங்களைப் போல முஸ்லிம் மஸ்ஜித்களையும் வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் 'கல்வி, வாழ்வாதாரம், சமூக சேவை, சகவாழ்வு' போன்ற விடயங்களில் மதிப்பீடு செய்து மஸ்ஜித் முகாமையாளர்களையும், முஸ்லிம் மக்களையும் ஊக்கப்படுத்துவதற்காக இவ் விருது வழங்கல் நிகழ்ச்சித்திட்டம் கடந்த 2017 இல் ஆரம்பித்து நாடளாவிய ரீதியில் போட்டியொன்று நடாத்தியது.
புதுக்குடியிருப்பு ஜும்ஆப்பள்ளியின் முன்னால்; தலைவர் ஐ.டு.ஆ. உவைஸ் அவர்களின் ஒத்துழைப்புடன், பள்ளி நிர்வாகம், பைதுஸ்ஸகாத் நிதியம், அஸ்ஸபா சங்கத்தினர், மற்றும் ஊர் நலன் விரும்பிகளின் ஒன்றிணைந்த முயற்சியினால் ஊரில் மேற்குறிப்பிடப்பட்ட பல வேலைத்திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன.
இப்போட்டியில் எமது பள்ளிவாசலையும் இணைத்துக் கொள்வதற்காக சகல ஒருங்கிணைப்பும் செயலாளர் ஓய்வுபெற்ற அதிபர் யு.ஆ.ஆ.ஐ. மஸ்ஹுத் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலமாக புத்தளம் மாவட்டத்தில் எமது பள்ளிவாசல் மாத்திரம் சான்றிதழ் பெற்றுள்ளது.
இந்நிகழ்வுக்கு சுமார் 150க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் பங்குகொண்ட போதிலும் சுமார் 25 பள்ளிவாசல்களுக்கு மாத்திரம் பணப்பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.
Post a Comment