Header Ads



மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில், ஜனாதிபதி கவனம் செலுத்துகிறார்

இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளதாக அரச தகவல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான குற்றவாளிகளுக்கு மாத்திரம் மரண தண்டனை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

போதைப்பொருள் குற்றங்களுக்கு தொடர்புடைய நபர்களுக்கு மரண தண்டனையை செயற்படுத்துவதற்கு பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போதை பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய நபர்கள் சிறையில் அடைக்கப்பட்ட போதும், அங்கிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகளை அடிப்படையாக வைத்து ஜனாதிபதி, மரண தண்டனை வழங்குவது தொடர்பில் கரிசனை கொண்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

ஈடுப்படுவதனை கருத்தில் கொண்டு ஜனாதிபதி இது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

6 comments:

  1. Mr President,

    Please execute it in a public open ground so that everybody can see that. If you delay this our country will be ruined.

    ReplyDelete
  2. முதுகெலும்பு உள்ள ஒரு ஆட்சியாளரால் மட்டும்தான் அத்ததைய சட்டத்தைச் சரியாக அமல்படுத்த முடியும்.

    ReplyDelete
  3. அப்போ கொலைக்குற்றவாழிகளுக்கு பொதுமன்னிப்பா. நீங்கள் எவ்வாறு சிந்தித்தாலும் ஷரீஆ சட்டத்தை அமுல் படுத்தாத வரை உங்களால் இலங்கையென்ன உலகையே காப்பாற்ற முடியாது. அது தான் சத்தியம்.

    ReplyDelete
  4. In the modern world sharia law is not acceptable and Sri Lanka is not a muslim country to implement it. However, rulers must take stern action against all murderers and law breakers.

    ReplyDelete
  5. @ Cruso
    Who ever the rulers must take stern action against all murderers and law breaker only if they follow the Same Action which is saying in the Sariya only. But if you guys does not like to have the Name As "Sariya" you can put any name (even your name like "Cruso") that is not the matter, but you must understand the fact what is the punishment it is saying, that's all.

    ReplyDelete
  6. 5:33 اِنَّمَا جَزٰٓؤُا الَّذِيْنَ يُحَارِبُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَيَسْعَوْنَ فِى الْاَرْضِ فَسَادًا اَنْ يُّقَتَّلُوْۤا اَوْ يُصَلَّبُوْۤا اَوْ تُقَطَّعَ اَيْدِيْهِمْ وَاَرْجُلُهُمْ مِّنْ خِلَافٍ اَوْ يُنْفَوْا مِنَ الْاَرْضِ‌ؕ ذٰ لِكَ لَهُمْ خِزْىٌ فِى الدُّنْيَا‌ وَ لَهُمْ فِى الْاٰخِرَةِ عَذَابٌ عَظِيْمٌ ۙ‏ 
    5:33. அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு.

    ReplyDelete

Powered by Blogger.