மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில், சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும்
மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி தீர்மானிப்பது பொருத்தமானது என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வெல்லவாய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் குற்றவாளிகளுக்கு இவ்வாறான தண்டனை வழங்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் சரியான முறையில் அணி வகுத்தால், பொதுமக்களும் சரியான வழியில் அணி வகுப்பார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது-
ReplyDeleteசுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்; அடிமைக்கு அடிமை; பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.
நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம்.
(அல்குர்ஆன் : 2:178 - 179)
www.tamililquran.com
நீதிக்கான பெயரில் உள்ள அமைச்சருடன் இவரும் அதே அணியில் சேர்ந்துள்ளார். அடுத்த தேர்தல் வந்து இந்த எல்லாக் கள்ளச் சரக்குகளும் தூக்கி எறியப்படும்வரை தூக்குத்தண்டனை விடயம் பேசிக் கொண்டே இருந்து அடுக்க கள்வர்கூட்டத்துக்கு சந்தர்ப்பம் வரும் போது பேச விட்டுச் செல்லலாம். இந்த நாட்டு அப்பாவி மக்களின் செலவில் கூதல் காயும் கூட்டம். இந்த நாட்டு மக்களுக்கு சரியான புத்தியும், செயல்பாடும் வரும்வரை இந்த சூனில் கள்ளக்கூட்டங்களுக்கு இன்பம் அனுபவித்துக் கொண்டே இருக்கமுடியும்.
ReplyDelete