Header Ads



ஜனாதிபதியுடன் தூக்குத் தண்டனை, கைதிகளுக்கு இரவு உணவு - செல்பி அடிக்கவும் வாய்ப்பு, வெள்ளை அப்பமும் வழங்கப்படும்

இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களுக்கான தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மரண தண்டனை கைதிகள் 19 பேர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் ஐவருக்கு ஜனாதிபதியுடன் இரவு உணவு விருந்தில் கலந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குற்றச் செயல்களை குறைக்கும் வழியாக மரண தண்டனை செயற்படுத்துவதனை பிரபலப்படுத்தும் யோசனைகள் பல முன்வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் ஒன்றாக தூக்கிலிடப்படும் முதல் ஐவருக்கு நாட்டு ஜனாதிபதியுடன் இரவு உணவு பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளமையாகும்.

தூக்கிலிடப்படும் நபர்களின் குடும்ப உறுப்பினர்களும் இதில் கலந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்குவது தொடர்பில் ஆராயப்படுகின்றது.

ஜனாதிபதி மாளிகையில் வழங்கப்படும் இந்த உணவு நேரத்திற்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட வெள்ளை அப்பமும் உள்ளடக்கப்படவுள்ளதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இரவு உணவின் பின்னர் விருந்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஜனாதிபதியுடன் செல்பி புகைப்படம் எடுப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

தூக்கிலிடப்படுவதற்கு முதல் நாள் இரவு இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரவு உணவின் பின்னர் நாட்டின் எதிர்கால நிலைமையை தௌிவுபடுத்துவது தொடர்பில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. எந்தவிதமான ஆழமான ஆய்வு,சிந்தனையில்லாத ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமைதான் தோன்றுகின்றது.

    ReplyDelete
  2. எந்தவிதமான ஆழமான ஆய்வு,சிந்தனையில்லாத ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமைதான் தோன்றுகின்றது. உண்மையில் இந்த விவகாரத்தில் ஜனாதிபதியை மாட்டிவிட்டு மற்ற அனைவரும் தப்பும் ஒரு ஏற்பாடு போல்தான் தெரிகிறது. இதுபற்றி ஜனாதிபதி சிந்தித்து செயல்படுவது மிகவும் ஆரோக்கியமாக அமையும்.

    ReplyDelete
  3. பைத்தியம் பலவகை...

    ReplyDelete

Powered by Blogger.