மாறிவரும் தேசிய சர்வதேசிய அரசியல் சூழலும், இலங்கை இனப்பிரச்சினையும்...!!
-வ.ஐ.ச.ஜெயபாலன்-
அவுஸ்திரேலியாவுக்கு நன்றி, கனடாவை பின்பற்றி அவுஸ்திரேலியாவும் புலம் பெயர்ந்த தமிழர்களை அங்கீகரித்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இவற்றின் மகுடமாக அவுஸ்திரேலியா தமிழை தேசிய மொழியாக அங்கீகரித்தமையை கொண்டாடலாம். வாழும் நாடுகளில் உடலும் வடகிழக்கு இலங்கையில் மனசுமாக எழுச்சி பெறும் புலம் பெர்ந்த இளம் தமிழர் சக்தியை அரசியல் தீர்வுமூலம் இலங்கை அரசு அரவணைத்துக் கொள்ள வேண்டுமென்பது என்னுடைய கோரிக்கையாக உள்ளது. வடகிழக்கு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக புலம்பெயர்ந்த தமிழர்கள் பலப்பட்டு வருகிறார்கள். இந்திய தமிழர்களதும் இந்தியாவினதும் கரிசனை ஈழத் தமிழர்களை மட்டுமன்றி மலையக தமிழர்களையும் உள்ளடக்கியதாகும்.
வடகிழக்கு தமிழர்களும் புலம் பெயர்ந்த தமிழர்களும் இறுக கைகோர்த்துவிட்டனர். இந்த சூழலை இனி மாற்றுவதற்கான சாத்தியக் கூறுகளில்லை. ஆனால் அனைவரும் ஆச்சரியப் படும் வகையில் அடுத்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் இரண்டு புதிய அரசியல் சூழல்கள் உருவாகும் சாத்தியங்கள் உள்ளது.
அடுத்த தேர்தலில் சீன சார்பு அணி தோற்றால் இந்தியா மற்றும் மேற்க்கு நாடுகளின் அனுசரணையுடன் சிங்கள ஆழும் வர்கங்கள் அரசியல் தீர்வை முன்வைக்கும். ஏற்கனவே அரைகுறைத் தீர்வு வைக்கப்படிருந்தால் அதனை மேம்படுத்தும் சூழல் உருவாகும்.
அடுத்த தேர்தலில் சீன சார்பு அணி வெற்றி பெற்றால் வெளியார் தலையீடு தவிர்க்க முடியாத சூழல் உருவாகும். இந்தியா தனித்துத் தலையிட்ட 1987 நிலமை போலன்றி எதிர்காலத்தில் இந்தியாவும் மேற்க்குநாடுகளும் சேர்ந்து முடிவுகளை எடுக்கும் என்பதும் அதனை உலக தமிழர்கள் ஆதரிப்பார்கள் என்பதும் உறுதியாகியுள்ளது.
வெளியார் தலையீடு இல்லாத இலங்கை என்பது சிங்களவரும் தமிழரும் முஸ்லிம்களும் மலையக தமிழர்களும் ஒற்றுமைப் பட்டு நீதியும் சமத்துவமும் அதிகார பகிர்வும் உள்ள சமாதானத்தை நிலை நாட்டினால் மட்டுமே சாத்தியம். அத்தகைய சூழல் சீன சார்புச் சூழலை மட்டுபடுத்தும் என்பதாலும் இது சாத்தியமாகும்.
இந்த பின்னணியில்தான் நீதியும் சமத்துவமுமுள்ள அதிகார பகிர்வு அடிப்படையில் சிங்களவரும் தமிழர்களும் முஸ்லிம்களும் மலையக தமிழர்களும் புதிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டுமென விண்ணப்பம் செய்கிறேன்.
வடகிழக்கு தமிழர்களும் முஸ்லிம்களும் உட்கார்ந்து பேசுவது முக்கியமாகும். ஏனெனில் வடகிழக்கு முஸ்லிம்கள் தங்களை ஒரு தேசிய இனமாக அங்கிகரிகாத சிங்கள அதிகாரங்களிடமிருந்து அலகு ரீதியான அதிகார பங்கை பெறுகிற சாத்தியம் அதிகமில்லை. ஆனால் அதேசமயம் வடகிழக்கு முஸ்லிம்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரித்துள்ள தமிழர்களிடம் தேசிய இன அடிபடையிலான அதிகாரப் பகிர்வுக்கான ஆதரவையும் செயற்பாட்டையும் எதிர் பார்க்க முடியும்.
.
1976 களின் பின்னர் வடகிழக்கு முஸ்லிம்களின் தேசிய இன தன்மையை கோட்பாட்டு நீதியாக நிறுவுவதில் பங்களித்திருக்கிறேன். அதபின் துப்பாக்கிகளையும் மீறி வடகிழக்கு முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் என்கிற கருத்தை தமிழ் மக்களிடம் வெற்றிகரமாக எடுத்துப்போயிருக்கிறேன். அத்தகைய ஒரு அணுகுமுறையின் தொடற்ச்சியாக தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கு மிடையில் புதிதாக ஒரு பெரும் கதையாடல் உருவாக வேண்டும் என கனவு காண்கிறேன்.
.
1987ல் முஸ்லிம்கள் ஜே.ஆர் அரசில் அமைச்சர்களாக இருந்தும் அரசு அவர்களுடன் இந்திய வருகை பற்றியும் வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபை உருவாக்கம் பற்றியும் பேசவில்லை. இந்தியா புலிகள் உட்பட ஈழ தமிழர் தரப்புகளுடன் இணைந்த வடகிழக்கு மாகாணசபை அடிப்படையிலான தீர்வுத் திட்டம் பற்றி பேசினார்கள். புலிகளதும் அங்கீகாரத்துடந்தான் காரியம் நிறைவேறியது. பின்னர் பிரபாகரனும் இந்தியாவும் மோதிய ஒரே காரணத்தால் மட்டுமே நிலமை மாறியது. இந்தியாவும் பிரபாகரனும் மோதாமல் இருந்திருப்பின் இன்று வேறு சூழல் நிலவியிருக்கும்.
இப்ப இலங்கை தமிழர் தமிழகத் தமிழர் புலம்பெயர்ந்த தமிழர் மற்றும் ஏனைய நாடுகளில் வாழும் உலக தமிழர் அழுத்ததாலும் இலங்கை அரசியலில் சீன சார்பு அணிகள் பலப்படுவதனாலும் மீண்டும் வெளியார் தலையிடும் சூழல் உருவாகி வருகிறது. இம்முறை இந்தியாவும் மேற்க்கு நாடுகளும் ஒரு அணியாக உள்ளன அதற்க்கு உலக தமிழர் ஆதரவும் உள்ளது.
அடுத்த தேர்தலில் வெல்லப் போவது சீன ஆதரவு அணியா சீன எதிர் அணியா என்பதுதான் மேற்க்கு நாடுகள் மட்டத்தில் முக்கியமான கேழ்வியாக உள்ளது. சீன எதிர்ப்பு அணி வென்றால் பேச்சுவார்த்தை மூலமும் சீனச் சார்பு அணி வென்றால் 1987 பாணி தலையீடு மூலமும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்னும் அடிப்படையில்தான் சதுரங்கத்தில் காய்கள் நகர்த்தப் படுகிறது. வடகிழக்கு தீர்வு சீன செல்வாக்கை மட்டுப்படுத்துமென்கிற எதிர்பார்ப்பு பரவலாக உள்ளது,
எந்த சூழல் வந்தாலும் வடபகுதி தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் நீதியும் சமத்துவமும் உள்ள பேச்சுவார்த்தைகள் மட்டுமே உதவும்.
This essay is similar to Sri Lanka Government Gazette.
ReplyDeleteஆசிரியருக்கு, வடபகுதி என்பதை வடகிழக்குப் பகுதி என திருத்தவும்
ReplyDeleteSriLanka is one country with two nations. They are Tamil and Sinhala nation. There is nothing called Muslim nation in SriLanka. To be a nation they must meet these below
ReplyDelete1. Unique language
2. Continious land area
3.culture
But it sad to say, srilankan muslims are not qualified to meet atleast one of the above and they disqualify to being a nation. They minkled with Sinhalese and Tamils according to their trade and business purposes. Thatswhy muslims in Sinhala area speak Sinhala and rest of them speak Tamil as they live in tamil homeland.
Muslims should giveup the unnecessary demands without any validity.
SRI LANKA IS ONE COUNTRY.
ReplyDeleteSRI LANKA IS ONE NATION.
TAMILS DO NOT HAVE ANY RIGHT TO DIVIDE THE COUNTRY.
Sampanthan tna என்கிற தமிழ் மக்கள் தலைவரின் பெயரை நீதிக்கும் சட்டங்களுக்கும் தமிழ் முஸ்லிம் மக்கள் ஐக்கியத்துக்கும் எதிராக துஸ்பிரயோகம் செய்யபடுவதை அனுமதிப்பது கவலை தருகிறது. Sampanthan tna என்ற போலியை பதிவுகளில் இருந்து தயவு செய்து அகற்றிவிடுங்கள். எதிர்காலத்தில் அனுமதிக்கவும் வேண்டாம்.
ReplyDeleteSampanthan tna எனும் போலி பெயரை இவ்வளவு காலமும் அனுமதித்தினூடாக, தமிழர்களின் தலைவர் சம்பந்தன் ஐயாவை JM இணையத்தளம் அவமதித்து விட்டது. எனவே இதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும்
ReplyDelete