விஜயகலாவின் உரையின் தொகுக்கப்படாத வீடியோக்களை, ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆற்றிய உரை அடங்கிய தொகுக்கப்படாத காணொளி காட்சிகளை திட்டமிட்ட குற்றச் செயல்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவினரிடம் கையளிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் 5 இலத்திரனியல் ஊடகங்ளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
திட்டமிட்ட குற்றச்செயல்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவு விடுத்த கோரிக்கையை ஆராய்ந்த பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சிஹல ராவய அமைப்பின் தேசிய அமைப்பாளர் மாகல்கந்தே சுதந்த தேரர், விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார்.
முன்னாள் ராஜாங்க அமைச்சர் வெளியிட்ட கருத்தால், இலங்கை அரசியலமப்புச் சட்டம் மீறப்பட்டுள்ளதால், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் தேரர் முறைப்பாட்டில் கோரிக்கை விடுத்திருந்தார்.
சொத்துக்கள் முடக்கப்படல், 7 வருட குடியுரிமை பறிப்பு தான் தண்டனைகள்.
ReplyDeleteஇதெல்லாம் நடக்கக் கூடியதா?
இந்த சிங்கள இனவாதிகள் இலங்கை தேசிய கொடிய யே மாற்றம் செஞ்சு பகிறங்கமா ஆர்ப்பாட்டம் செஞ்சாங்கள் இது இலங்கை அரசியலமைப்பு சட்டம் மீறப்படல்லயோ???
ReplyDelete@sampanthan tna, முஸ்லிம்கள் எல்லாரும் வீதியில் இறங்கி போராடினால், இது நிச்சயம் நடக்கும். பிலீஸ்... போராடுங்கள்.
ReplyDelete