முஸ்லிம் கட்சிகளையும், முஸ்லிம் அரசியல்வாதிகளையும் மீண்டும் சாடுகிறார் பைஸர்
முனாபிக் அரசியல் செய்ய நான் விரும்பவில்லை. ஏனைய முஸ்லிம் அமைச்சர்களும் முனாபிக் அரசியலை தவிர்த்துக் கொள்ள வேண்டும். மாகாண சபைத் தேர்தல் புதிய தேர்தல் முறையின் கீழே நடத்தப்படும். அதில் எந்தவித மாற்றங்களுமில்லை.
மாகாண சபை திருத்தச் சட்டத்திற்கு கையுயர்த்தி வாக்களித்தவர்களே, புதிய தேர்தல் முறையை ஆதரித்தவர்களே அதை எதிர்க்கின்றனர். அமைச்சர்கள் ரவூப் ஹக்கீமும், ரிசாதும் அன்று ஆதரித்துவிட்டு இன்று புதிய தேர்தல் முறையை எதிர்ப்பது ஏன்?
மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயத்தில் முஸ்லிம் சமூகத்துக்குள்ள அநீதிகளை பாராளுமன்றக் குழு மூலம் தீர்த்துக் கொள்ளலாம் என மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
நேற்று மாலை விளையாட்டுத்துறை அமைச்சில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு மாகாண சபை தேர்தல் தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் விளக்கமளிக்கையில் தெரிவித்ததாவது;
புதிய தேர்தல் முறைக்கு அமைச்சர்கள் ரிசாத் பதியுதீனும், ரவூப் ஹக்கீமும் எதிர்ப்புத் தெரிவிப்பதென்றால் ஏன் அவர்கள் புதிய தேர்தல் முறையை ஆதரித்து கையுயர்த்தி வாக்களித்தார்கள்?
இப்போது இந்தத் தேர்தல் முறை முஸ்லிம் சமூகத்துக்குப் பாதிப்பானது. மீண்டும் விருப்பு வாக்கு தேர்தல் முறைக்குச் செல்ல வேண்டும் எனக் கூறுகிறார்கள்.
சிறுபான்மைக் கட்சிகள் தமது சமூகத்தை விற்று, பெரும்பான்மைக் கட்சிகளுடன் இணைந்து விருப்பு வாக்குகளைப் பழைய தேர்தல் முறை மூலம் பெற்றுக்கொள்கின்றன. புதிய தேர்தல் முறை மூலம் முஸ்லிம் கட்சிகள் தனித்துப் போட்டியிட்டு முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அவர்கள் பெற்றுக்கொள்ளும் வாக்குகளுக்கு அமைய ஆசனங்களும் கிடைக்கும். முஸ்லிம் கட்சிகள் தேசிய பெரும்பான்மைக் கட்சிகளுடன் புட்போட்டில் ஏறிப் பயணிப்பதென்றால் பிரச்சினை உள்ளது.
பழைய தேர்தல் முறையின் கீழ் முஸ்லிம் சமூகத்தை விற்று, வாக்குகளைப் பெற்று தமது விருப்பு வாக்குகளை அதிகரித்துக் கொண்டார்கள். இவ்வாறான தேர்தல் முறைமை நாட்டுக்குப் பயனுள்ளதல்ல. முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு அவர்களுக்குக் கிடைக்கும் வாக்குகளுக்கு ஏற்ப ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த விபரங்கள் மக்களுக்குத் தெரியாது.
நான் சவால் விடுகிறேன். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸோ, அகில இலங்கை மக்கள் காங்கிரஸோ தனித்துப் போட்டியிட்டு அவர்களுக்குக் கிடைக்கும் வாக்குகளுக்கு ஏற்ற ஆசனங்கள் கிடைக்காவிட்டால் தான் புதிய தேர்தல் முறைமை தவறானதாகும். ஆனால் அவர்கள் தேசிய கட்சிகளுடன் இணைந்து வாக்குகளைப் பெற்று விருப்புவாக்குகளையும் பெற்றுக்கொள்வதே அவர்களது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
உதாரணமாக 2010 ஆம் ஆண்டு கண்டி மாவட்டத்தில் ஐ.தே. கட்சியில் போட்டியிட்டவர்களில் 4 பேர் வெற்றிபெற்றனர். அவர்களில் மூவர் முஸ்லிம்கள், ஒருவரே சிங்களவர். விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக சிறுபான்மைக் கட்சிகள் பெரும்பான்மை தேசியக் கட்சிகளில் புட் போட்டில் ஏறிக்கொள்வது இங்கு தெளிவாகிறது.
புதிய முறையின் கீழ் இந்த வேலையைச் செய்ய முடியாது. இது நாட்டுக்கு உகந்ததல்ல. மிகவும் ஊழல் நிறைந்த தேர்தல் முறைமையே விருப்பு வாக்கு முறையாகும். இது நாட்டுக்கு உகந்ததல்ல.
முஸ்லிம்கள் நாட்டில் பரந்து வாழ்கிறார்கள். முஸ்லிம் காங்கிரஸ் புதிய முறைமையின் கீழ் தனித்துப் போட்டியிட்டு கிடைக்கும் வாக்குகளுக்கு அமைவாக ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயத்தில் முஸ்லிம்களுக்கு சில குறைபாடுகள் உள்ளன. பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனை நான் ஏற்றுக்கொள்கிறேன். இதற்காக ஊழல் நிறைந்த விருப்பு வாக்கு முறைமைத் தேர்தலுக்குச் செல்ல முடியாது.
நான் நியமித்த மாகாண சபை தொகுதி எல்லை நிர்ணயக் குழுவுக்கு ஒரு கோரிக்கை விடுத்திருந்தேன். எல்லை நிர்ணயம் அரசியல் கட்சிகளையும் ஆலோசித்தே மேற்கொள்ளும்படி வேண்டியிருந்தேன். ஆனால் அவர்கள் அவ்வாறு கலந்தாலோசிக்கவில்லை. ஆலோசித்திருந்தால் இந்தக் குறைபாடுகள் ஏற்பட்டிருக்காது.
மாகாண சபை தொகுதி எல்லை நிர்ணயத்தில் உள்ள குறைபாடுகளை பாராளுமன்றக்குழு ஒன்றினை நியமித்துத் தீர்த்துக்கொள்ள முடியும். ஜனாதிபதி மற்றும் பிரதமர் விருப்பு வாக்கு முறைமையை இல்லாதொழிப்பதாகக் கூறியே பதவிக்கு வந்தார்கள்.
கிழக்கு மாகாணத்தில் தேர்தல் காலத்தில் தீப்பெட்டிக்குள் 5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாளை வைத்து பகிர்ந்தளித்தவர்களே இன்று மீண்டும் விருப்பு வாக்கு முறைமைத் தேர்தலைக் கோருகிறார்கள். இது நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான முஸ்லிம் கட்சிகளே புதிய தேர்தல் முறையை எதிர்க்கின்றன. கிழக்கு மாகாணத்தில் தேர்தல் காலத்தில் பணம் பகிர்ந்தளித்தார்கள், முச்சக்கர வண்டி டயர்களும் பகிர்ந்தளித்தார்கள். இது மோசமான அரசியல்.
சாய்ந்தமருது, பிரதேச சபை விவகாரம் தொடர்பில் ரவூப் ஹக்கீமையும், ரிசாத் பதியுதீனையும் ஒன்றுபடுமாறும் நான் கசெட் பண்ணுவதாகவும் கூறினேன். ஆனால் அவர்கள் ஒற்றுமைப்படவில்லை. இது துரோகமாகும்.
வெட்கமில்லாமல் பாராளுமன்றத்தில் கையுயர்த்தியவர்களே விருப்பு வாக்கு தேர்தல் முறைமையைக் கோருகிறார்கள். இவர்கள் வாக்களித்திருக்காவிட்டால் 2/3 பெரும்பான்மை கிடைத்திருக்காதல்லவா? அதனால், என்னால் பழைய முறைமைக்குச் செல்ல முடியாது. 50 க்கு 50 கோரியவர்கள் அவர்கள். எல்லை நிர்ணய அறிக்கையை விவாதிக்க கோரியவர்கள் இவர்கள்.
எல்லை நிர்ணயத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தால் பாராளுமன்ற குழு ஒன்றின் மூலம் அதில் திருத்தங்களைச் செய்து கொள்ளலாம். கூக்குரலிடும் அமைச்சர்களிடம் நான் ஒன்று கேட்கிறேன். தேசிய கட்சியில் புட்போட்டில் சென்று பிரதிநிதித்துவம் பெறுவது சரியானதா?
என்னால் முனாபிக் அரசியல் செய்ய முடியாது. ஏனைய முஸ்லிம் கட்சிகளையும் முனாபிக் அரசியல் செய்ய வேண்டாம் என்று கூறுகிறேன்.
பேருவளை, கிரேண்ட்பாஸ், கிந்தோட்டை சம்பவங்களின்போது நானே முன் நின்றேன். ஆனால் சமூகத்தை விற்று நான் அரசியல் செய்ய விரும்பவில்லை. புதிய முறையில் விகிதாசாரத்தின் படியே ஆசனங்கள் பகிரப்படும். மாகாண சபை தேர்தலை இவ்வருடம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.
Adra sakkai endaanaam!
ReplyDeleteபைசர் முஸ்தபா உம்மால் முடியுமாயின் அம்பாரை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கு சென்று செய்தியாளர் மாநாடுகளை நடத்தி உமது கெட்டித்தனத்தை காட்டு பார்ப்போம்.
ReplyDeleteபுதிய தேர்தல் முறைக்கு, முஸ்லீம் அரசியல்வாதிகள் விரும்பி வாக்களிக்கவில்லை.
ReplyDeleteமுஸ்லீம் அரசியல்வாதிகள் மிரட்டப்பட்டு, அச்சுறுத்தப்பட்டனர்.
அதன் பிற்பாடே, அவர்கள் பயந்து வாக்களித்தார்கள்.
அதாவது, வாக்களிக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.
ஆக, பழைய தேர்தல் முறைக்கு ஏற்ப தேர்தல் நடத்த வேண்டும் என்று முஸ்லீம் அரசியல்வாதிகள் கோருவது நியாயமானது.
Well said Mr Musthafa. Future elections must be according to the new election system. No change.
ReplyDelete@sampanthan tna, ரணில்/மைதிரி கட்டளை இட்டால் ஏன் எதற்கு என்று கேட்காமல் அதை செய்வதற்காக தான் முஸ்லிம் தலைவர்களுக்கு அமைச்சர் பதவிகள் கொடுக்கபட்டன.
ReplyDeleteஅடிமைகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகளின் படி கையை உயர்த்தினார்கள்.
இதை தான் சொல்லுவது win-win deal.
அரசாங்கத்திற்கும், சிங்களவர்களுக்கும், முஸ்லிம் தலைவர்களுக்கும் Win, ஆனால் முஸ்லிம் மக்கள் losers
@sampanthan tna, உங்கள் கருத்து 100% உண்மை.
ReplyDelete(1) முஸ்லிம் MPகள் புதிய தேர்தல் முறைக்கு விரும்பி வாக்களிக்க வில்லை என்பது உண்மை. அவர்களுக்கு இதன் பாதகங்கள் பற்றி சில அமைப்பு எச்சரித்து இருந்தார்கள். தவிர, றஹிம், றிசாத் ஆகியோரின் தனிப்பட்ட சட்ட ஆலோசனைகளும் பெற்று இதன் பாதங்களை உறுதி செய்திருந்தார்கள். எனவே இதற்கு ஆதரவளிக்க முதலில் மறுத்தார்கள்.
(2) ஆனால், ரணில் முடிவாக சொல்லிவிட்டார், இதற்கு ஆதரவு அளிக்கா விட்டால், முஸ்லிம்கள் அரசாங்கத்திலிருந்து விரட்டபடுவார்கள், அமைச்சர் பதவிகள் பறிக்கபடுமென. உடனடியாக இரண்டு கையையும் தூக்கி ஆதரவு அளித்து விட்டார்கள்.
(3) இதிலிருந்து தமிழர்களுக்கு (TNA) க்கு கிடைக்கும் படிப்பினை என்ன? வட-கிழக்கு இணைப்பிற்கு தேவை அரசின் (சிங்களவர்கள்) சம்மந்தம் மட்டுமே. அது இருந்தால் ரணில் க்கு தெரியும் எப்படி முஸ்லிம் தலைவர்களை வெருட்டி, கையை தூக்க வைப்பது என.
எனவே, இதற்கு அரசை மசிய வைக்க தமிழர்களின் சர்வதேச காய் நகர்த்தல்கள் அவசியம்.
I cannot understand What is this guy is doing? and How he was elected and who voted for him?
ReplyDelete