ரணிலுடன் சிங்கப்பூர், பறக்கிறார் சஜித்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூரில் இடம்பெறும் ஆறாவது சர்வதேச நகர மாநாடு மற்றும் அதனுடன் இணைந்தவாறு இடம்பெறும் சிங்கப்பூர் சர்வதேச நீர் வார நிகழ்வு, தூய்மையான சூழல் மாநாடு ஆகிய மாநாடுகளில் கலந்துகொள்வதற்காக எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (08 ) பிற்பகல் சிங்கப்பூர் நோக்கிப் பயணிக்கவுள்ளார்.
பிரதமர் இந்த விஜயத்தின்போது சிங்கப்பூர் பிரதமர் லீ சின் லுங் , பிரதிப் பிரதமர் மற்றும் பொருளாதார, சமூகக் கொள்கைகள் தொடர்பான ஒருங்கிணைப்பு அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் , சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் கோ சொக் டொன் உள்ளிட்ட சிங்கப்பூர் அரசாங்கத்தின் உயர் மட்ட அமைச்சர்கள் பலரை சந்திக்கவுள்ளார்.
ஜூலை 09 ஆம் திகதி சர்வதேச நகர மாநாட்டின் ஆரம்ப அமர்வில் 'நகர அபிவிருத்தி மற்றும் சூழலைப் பாதுகாத்தல்' எனும் தலைப்பில் பிரதான உரையை பிரதமர் நிகழ்த்துவார்.
இம்முறை மாநாட்டின் கருப்பொருள் 'புத்தாக்கம் மற்றும் ஒத்துழைப்பு ஊடாக எதிர்காலத்திற்குப் பொருத்தமான நிலைபேறான நகரங்களை உருவாக்குதல்' என்பதுடன், முறையான நிர்வாகம் மற்றும் திட்டமிடல், தொழிநுட்பம் மற்றும் சமூகப் புதிய உற்பத்திகள், ஏனைய நகர மற்றும் பங்காளர்களுடன் முறையான தொடர்புகளைக் கட்டியெழுப்புவதன் மூலம் வாழ்வதற்குப் பொருத்தமான நகரங்களை உருவாக்கிக் கொள்வது தொடர்பாக இங்கு கவனம் செலுத்தப்படும்.
பேராசிரியர் மைத்திரீ விக்கிரமசிங்க, நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ, அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, கனிய வளங்கள் அபிவிருத்திப் பிரதியமைச்சர் அனோமா கமகே அவர்கள் ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
He can meet his best buddy Arjun Mahendaran......
ReplyDeleteஅரசாங்கம் மாறினாலும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் தந்திரோபாயங்களை கூட்டாளிக்கு எடுத்துரைக்க சந்தர்ப்பத்தை பெரியவர் நன்றாகப் பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ReplyDelete