முஸ்லிம்களை எதிர்ப்பது, தேசப்பற்று அல்ல - பாராளுமன்றத்தில் அநுரகுமார முழக்கம்
வட மாகாணத்தை தெற்கிலிருந்து எதிர்ப்பதும், சிங்கள மக்கள் முஸ்லிம்களை எதிர்ப்பதும் தேசப்பற்றாக அமையாது என ஜே.வீ.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிகையில், சீன துறைமுக பொறியிலாளர் நிறுவனத்தினால் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு 7.6 மில்லியன் டொலர்கள் நிதி வழங்கப்பட்டதாக வெளியான செய்திகுறித்த விவாதம் இன்று நாடாளுமன்றில் இடம்பெற்றது.
இதில் உரையாற்றிய அனுரகுமார திசாநாயக்க, தேசப்பற்று என்ற விடயத்தை வலியுறுத்தி கோஷம் எழுப்புகின்றவர்கள் நாட்டின் இறைமையை கேள்விக்குறியாக்கியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் அதீத கடன்களின் மூலம் இலங்கையின் இறைமையை பாதித்துள்ளது.
ஆனால் விஜயகலா மகேஸ்வரனின் விடயத்தை முன்னிறுத்தி போராட்டம் நடத்தியும், முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டி விட்டும், வடக்கிற்கு எதிராக தெற்கிலிருந்து குரல் எழுப்பியும் தேசப்பற்றை வெளிப்படுத்த சிலர் முயற்சிக்கின்றார்கள்.
ஆனால் இலங்கை தற்போது பொருளாதார இறைமையை போராடி மீள பெற வேண்டிய நிலையில் இருப்பதாக ஜே.வீ.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
Great Leader
ReplyDeleteThis JVP hypocrite is after a portion of the Muslim vote bank.
ReplyDeleteMuslims have to be very careful about this guy and his political moves, Insha Allah.
Noor Nizam.
Convener - "The Muslim Voice".
hello Noor Nizam, Anura Kumara is a perfect politician, not like Rajapahshas ok, Muslims nothings to be careful about him, mind it.
ReplyDelete