Header Ads



இலங்கை இளைஞர்கள் பற்றி, சுவிஸ் யுவதிகளின் சிலாகிப்பு


ஸ்கொட்லாந்து பொலிஸாரை விட இலங்கை இளைஞர்கள் சிறப்பானவர்கள் என சுவிஸ் யுவதிகள் இருவர் கூறியுள்ளனர்.

ஜெனிபர் ஹெமில்டன் மற்றும் லின்ஸி ஹெமில்டன் என்ற இரண்டு யுவதிகளே இவ்வாறு கூறியுள்ளனர்.

குறித்த யுவதிகள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள வந்துள்ளனர். அவர்கள் எல்ல பகுதியை சுற்றி பார்ப்பதற்காக சென்றுள்ளனர்.

சற்று தூரம் பயணித்து கொண்டிருக்கும் போது 5 இளைஞர்கள் இந்த யுவதிகளிடம் பேச முற்பட்டுள்ளனர். எனினும் அவர்கள் அங்கிருந்து செல்ல முயற்சித்த போது, அவர்களின் பையை கொள்ளையடித்து கொண்டு அந்த இளைஞர் அவ்விடத்தை விட்டு ஓடியுள்ளனர்.

யுவதிகள் பொலிஸாரிடம் சம்பவத்தை கூற முயற்சித்துள்ளனர். எனினும் மொழி பிரச்சினை காரணமாக இதனை அவர்களால் கூற முடியவில்லை. பொலிஸாரும் பெரிதாக கண்டு கொள்ள வில்லை.

எனினும் சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் 12 இளைஞர்கள் அந்த பகுதியில் புகைப்படம் எடுத்து கொண்டிருந்துள்ளனர். அந்த இளைஞர்கள் ஒரளவிற்கு சம்பவத்தை புரிந்து கொண்டதுடன், யுவதிகளுக்கு உதவி இலங்கையின் பெயரை காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.

பையை கொள்ளையடித்தவர்கள் தப்பி ஓடும் போதும் இந்த யுவதிகள் அவர்களை புகைப்படம் எடுத்துள்ளனர். அதற்கமைய உடனடியாக செயற்பட்ட இளைஞர்கள் திருடர்களை தேட ஆரம்பித்தனர். அங்குள்ள முச்சக்கர வண்டி சாரதிகளின் உதவியை பெற்று கொண்ட இளைஞர்கள் திருடர்கள் ஒடிய திசையில் கிடைத்த தடயப்பொருட்களை வைத்து ஒன்றரை மணித்தியாளத்திற்கு திருடனை பிடித்துள்ளனர்.

அதற்கமைய திருடர்களினால் திருடப்பட்ட பணப்பை மீளவும் வெளிநாட்டு யுவதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இன்னமும் நல்லவர்கள் இருக்கின்றார்கள் எனவும், ஸ்கொட்லாந்து பொலிஸாரை விட இலங்கை இளைஞர்கள் சிறப்பானவர்கள் எனவும் வெளிநாட்டு யுவதிகள் கூறியுள்ளனர். இந்த உதவியை ஒரு போதும் மறக்க மாட்டோம் என்று கூறி கண்ணீருடன் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

No comments

Powered by Blogger.