ஜனாதிபதியாக ராஜித்த - சுபசோபனம் தெரிவித்த மைத்திரி
சுகாதார அமைச்சர்களாக இருந்தவர்கள் நாட்டின் தலைவர்களாக வந்த வரலாறு இருப்பதனால், அமைச்சர் ராஜித சேனாரத்னவும் அந்த நிலைக்கு எதிர்காலத்தில் வருவார் என்ற சுபசோபனத்தை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
உலக சுகாதார நிறுவனத்தின் உப தலைவர் பதவியைப் பெற்ற அமைச்சர் ராஜித சேனாரத்னவைப் பாராட்டும் நிகழ்வு இன்று (31) ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
இந்த நாட்டின் முதலாவது சுகாதார அமைச்சராக இருந்த பண்டாரநாயக்க அவர்கள் இருந்த பதவியிலிருந்து வெளியே வந்து நாட்டின் தலைவராக பதவியேற்றார். தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சுகாதார அமைச்சராக இருந்துவிட்டு வெளியேறி நாட்டின் தலைவராக பதவியேற்றார் என இந்த நிகழ்வில் உரையாற்றும் போது டாக்டர் காலோ பொன்சேக கூறியது முக்கிய ஒன்று என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்த நேரத்தில் நானும் அதனையே ஞாபகப்படுத்துகின்றேன். இருந்த இடத்தில் இருந்துகொண்டோ அல்லது வெளியேறியோ அமைச்சர் ராஜித சேனாரத்னவும் நாட்டின் தலைவராக வரவேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.
Post a Comment