புதிய உலகம் அமைப்பாரா அர்தோகன்...?
எஸ்.எம்.மஸாஹிம் (இஸ்லாஹி)
''முஸ்தபா கமால் அதா-துர்க்கை விடவும் துருக்கி பெரியதுபோன்று எர்தோகனை விடவும் துருக்கி பெரியது''- துருக்கிய எழுத்தாளர் முஸ்தபா அக்யோல்
துருக்கியில் கடந்த ஜூன் மாதம் 24 ஆம் திகதி நடந்து முடிந்த தேர்தல்களின் மூலமாக துருக்கியின் முதல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரஜப் தையூப் அர்தோகன் இம்மாதம் ஜீலை 9 ஆம் திகதி பதவியேற்றுகொண்டார் அவரின் பதவியேற்புடன் கடந்த 2017 ஏப்ரல் 16 அன்று மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் மூலமாக சட்டயாப்பின் ஊடாக ஏட்படுத்தப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித்துவ நிர்வாக முறைக்குள் துருக்கி நுழைந்துள்ளது ,
இதன் மூலம் துருக்கி புதிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ,புதிய அரசாங்கம் என்ற முற்றிலும் ஒரு புதிய வரலாற்று கட்டத்துக்குள் நுழைந்துள்ளதாக பார்க்கப்படுகின்றது
இவரின் இந்த வரலாற்று வெற்றிக்கு பல்வேறு கோணங்களில் காரணவிளக்கங்கள் முன்வைக்கப்படுகின்றது அவற்றுள்
அரசியல், பொருளாதார காரணங்கள் , தனிமனித உரிமை, சுதந்திரம், இஸ்லாமிய மரபுகள் ,விழிமியங்கள் என்ற காரணங்கள் துருக்கி மக்களை அர்தோகன் நோக்கி வேகமாக கவர்ந்திழுக்கும் காரணங்களாக இருக்கிறது என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்படுகின்றது
முதல் காரணமான அரசியல் ,பொருளாதார ,சமூக தளங்களில் எர்தோகனும் அவரின் கட்சியும் ஈட்டி வரும் சாதனைகள் குறிப்பாக 2004 வரை அதலபாதாளத்தில் இருந்த துருக்கியின் பொருளாதாரத்தை உலகின் வேகமான வளர்ச்சி கொண்ட ஒன்றாக மாற்றியுள்ளமை, பல சவால்களுக்கு மத்தியிலும் குறிப்பாக ஈராக்கிலும் ,சிரியாவிலும் இஸ்லாமிய தேசம் அமைப்பினதும் , குர்திஸ் பிராந்தியத்தில் குர்திஸ் அமைப்புக்களினதும் நடவடிக்கைகளினால் துருக்கியின் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவுகள் பதிவானாலும் எதிர் கட்சிகளினால் பொருளாதார காரணங்களை வைத்து ஆளும் தரப்பை குறைத்து மதிப்பிட முடியாது போனமை , மக்கள் மத்தியிலும் பொருளாதார காரணங்களை முன்வைத்து அர்தோகன் அரசை மக்கள் உள்ளங்களில் தரக்குறைவாக காட்சிப்படுத்த எதிர்கட்சிகளுக்கு முடியாது போனமை என்பன சுட்டிகாட்டப்படுகின்றது .
இரண்டாவது காரணமாக துருக்கியில் இஸ்லாமிய அடையாளங்களுக்கும் விழிமியங்களுக்கும் இருந்த தடைகள் அர்தோகனினால் அகற்றப்பட்டமை குறிப்பாக இஸ்லாமிய மரபுகளுக்கு , விழிமியங்களுக்கும் பொதுவாழ்வில் அங்கீகாரத்தை பெற்று கொடுத்தமை இங்கு பொது வாழ்வு என்று கூறும்போது தனிநபர்கள் தனது பொது வாழ்வில் கடைபிடிக்கும் ஹிஜாப் போன்ற வற்றுக்கு இருந்த தடைகளை நீக்கியமை குறிக்கின்றது மற்றும் உஸ்மானியா இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் அல்லது கிலாபத்தின் கூறுகளுடன் தொடர்பு படுத்தி அர்தோகனும் அவரின் கட்சியினரும் பழைய துருக்கியின் மரபுகளை அடைப்படியாக கொண்டு முன்வைத்து வரும் கருத்துக்கள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள பல்வேறு புரிதல்கள் என்பன இரண்டாவது காரணமாக உள்ளது
எர்தோகனுக்கும் அவரின் அரசுக்கு ஆதரவாக எழுதப்படும் ஆக்கங்களில் அவரும் அவரின் சாதனைக்ளும் பின்வருமாறு வர்ணிக்கப்படுகின்றது
''16 ஆண்டுகள் பிரதமராகவும் ,ஜனாதிபதியாகவும் செயல்பட்டு பொருளாதார ,அரசியல்,ரீதியில் பாதாளத்தில் கிடந்த துருக்கியை பொருளாதார எழுச்சியின் உச்சத்துக்கு கொண்டுவந்து நிறுத்தியுள்ளார். உலகில் பலமான பொருளாதாரத்தை கொண்ட 20 நாடுகளில் பட்டியலில் துருக்கி இணைக்கப்பட அவரின் பொருளாதார கொள்கைகள் பிரதான காரணமாக ஆகியது. உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரத்தை கொண்ட நாடு என்ற பெருமையையும் துருக்கி பெற்றுகொண்டது இவரின் பொருளாதார கொள்கையினால் , துருக்கியர்கள் தம் பொதுவாழ்வில் இஸ்லாத்தை கடைபிடிக்க இருந்த தடைகள் அகற்றப்பட்டுள்ளது . பல இஸ்லாமிய செயல்பாடுகளுக்கு போடப்பட்டிருந்த விலங்குகள் உடைக்கப்பட்டுள்ளது.துருக்கியில் இன்று இஸ்லாத்தை அறிவுபூர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும் அனுபவிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பலஸ்தீன் உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் முஸ்லிமக்ளுக்கு எதிரான அநீதிகளை எதிர்த்து வருகிறது" என அவர் புகழப்படுகிறார்
,'' இஸ்லாத்தின் எதிரிகளினாலும் ,சுதந்திரத்தின் எதிரிகளினாலும் அர்தோகனையும் அவரின் நீதிக்கும் , அபிவிருத்திக்குமான கட்சியையும் தோல்வியுறச் செய்யவேண்டும் என்ற நோக்கில் அரசியல் .பொருளாதரா , இராணுவ ரீதியாக முன்னெடுக்கப்பட்ட பல்வேறு உள்நாட்டு ,வெளிநாட்டு சக்திகளையெல்லாம் முறியடித்துக்கொண்டு ரஜப் தையூப் அர்தோகான் எழுந்து நிற்பதத்திற்கு மேற்றச்சொன்ன காரணிகள் நிச்சயமாக பிரதான பங்காற்றியுள்ளது'' அர்தோகனின் சாதனைகள் பற்றி கூறும் இந்த கூற்றுக்கள் நாம் மேற்கூறிய இரு காரணங்களையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது
ஏர்தோகன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்றிக்கும் நாளை பற்றி கம்ஸா தகீன் என்ற துருக்கி எழுத்தாளர் தனது அரபு மொழி ஆக்கம் ஒன்றில் குறிப்பிடும்போது .. சுமார் 100 ஆண்டுகளாக பலரும் காத்திருந்த வரலாற்று சிறப்பு மிக்க ஒரு நாளில் துருக்கி நுழைகிறது, ஒஸ்மானிய இஸ்லாமிய கிலாபத் வீழ்த்தப்பட பின்னர் மேற்கு உலகினால் துருக்கி மீது போடப்பட்ட கட்டுப்பாடுகளை முழுமையாக உடைத்தெரியும் நாளில் துருக்கி நுழைகிறது இந்த நாள் துருக்கியின் மிகப் பெரிய இஸ்லாமிய பாரம்பரியத்தின் உண்மையான வரலாறு பிறக்கும் நாளாகும் என வர்ணிக்கிறார் .
மேலும் அவர் கூறும்போது.. மேற்கும், கிழக்கும் தேர்தலுக்கு முன்னர் தடுக்க முயன்ற மாற்றத்துக்குள் துருக்கி இன்று நுழைகிறது , அந்த மாற்றத்தை தடுக்க முயன்ற வெளிநாட்டு கரங்கள் உள்நாட்டில் வெட்டப்பட்டுள்ள , அந்த மாற்றம் துருக்கியை பிராந்தியத்திலும் ,உலகிலும் மிக சக்திகொண்டதாக மாற்ற போகிறது.... இந்த மாற்றம் தமது நாட்டின் மீதும் , தமது உம்மத்தின் மீதும் நிகழவேண்டும் என சுமார் 100 ஆண்டுகளாக அவமானம் ,துன்பம் ,கஷ்டங்களுடன் எதிர்பார்த்திருந்த தூய்மையான அந்த ஊழியர்கள் எதிர்பார்த்த மாற்றம் .என அவரின் வர்ணனை நீண்டு செல்கிறது .
மேலும் அவர் ஒரு படி மேல்சென்று ..அர்தோகன் பற்றி கூறும்போது ..அர்தோகன் தான் துருக்கி ஜனாதிபதியாக பாதேவியேற்ற பின்னர் '' நாங்கள் மீண்டும் வந்துவிட்டோம் நாங்கள் மீண்டும் புதிதாக வந்துவிட்டோம் '' என்ற தெளிவான செய்தியை அனைவருக்கும் அவர் அறிவிப்புசெய்யபோவதாக தெரிவித்துள்ளார் என கூறும் கம்ஸா தகீன் , அன்றைய ரோம் சாம்ராஜ்யத்தின் கொஸ்தாந்து நோபிளை கைப்பற்றிய சுல்தான் முஹம்மத் இப்னு பாதிஹ் அல்லாஹ்வின் இறுதித்தூதரின் முன்னறிவிப்புக்கு ஏற்ப கொஸ்தாந்து நோபிளை கைப்பற்றுவேன் என தீர்மானம் எடுத்த மஸ்ஜித்தில் ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து அரசாங்க நடவடிக்கைகளை அர்தோகன் ஆரம்பிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.
(ஆனால் அர்தோகன் முஸ்தபான கமால் அதாதுர்க் உருவாக்கிய பழைய முதல் பாராளும்னறத்தில் இருந்து தனது நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது ) .
முஸ்தபா அக்யோல் என்ற எழுத்தாளர் அர்தோகனின் வெற்றியை ஒடுக்கப்பட்ட மக்களின் வெற்றியாக வர்ணிக்கிறார் இவர் இது பற்றி கூறும்போது ...இந்த தேர்தலை அரசியல் வாதிகளின் நல்லாட்சி பற்றிய வாக்குறுதிகளுக்கிடையிலான போட்டியாக மக்கள் பார்க்கவில்லை மாறாக அவர்கள் ஒரு நூற்றாண்டு பழமை வாய்ந்த ஒரு மோசமான ( இஸ்லாமிய ) எதிரிக்கு எதிராக ஒரு உறுதியான நடவடிக்கையாக இந்த தேர்தலை கருதினார்கள் என குறிப்பிடுகிறார்
அவர் மேலும் குறிப்பிடும்போது (மக்களின் இந்த தீர்மானம்) 1923 ஆம் ஆண்டு முஸ்தபா கமால் உருவாக்கிய மதசார்பற்ற துருக்கியுடன் தொடர்புபடுகிறது . அவரின் மதச்சார்பற்ற சீர்திருத்தங்கள் அவரை ஒரு பாதுகாவலனாக கருதும் மேற்கு சிந்தனை மயப்படுத்தப்பட்ட நகர்ப்புற மக்களை உருவாக்கியது . ஆனால் அதே "கெமாலிஸ்ட் புரட்சி" ஒரு அதிர்ச்சியூட்டும் மரபுவாத பிரிவை உருவாக்கியது . அவர்களை , " அது அவர்களின் சொந்த நாட்டில் அந்நியர்களாகவும் ,அவர்களை தம் சொந்த மண்ணியில் ஒடுக்கப்பட்டவர்களாகவும் ஆக்கியது ," சுமார் 100 ஆண்டுகளாக இந்த மரபுவாதிகள் அரசியலில் இருந்து ஓரம் கட்டப்பட்டிருந்தனர் அவர்கள் அரசியல் முறைமைக்குள் நுழைய முட்பட்டபோது செக்குலரிஸத்தின் பாதுகாவர்களினால் அவர்கள் மீண்டும் மீண்டும் கடுமையாக தண்டிக்கப்பட்டனர், 2000 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் எர்தோகனின் வெற்றி மூலம் மட்டுமே இந்த செக்குலரிஸ மேலாதிக்கத்தை அவர்களினால் முற்றிலுமாக முறியடிக்க முடிந்தது . மக்கள் வாக்களிக்க போகும்போது இதைத்தான் எண்ணிப்பார்க்கின்றனர், அவர்கள் ஊடகங்கள் அரசால் கைப்பற்றப்படுவது பற்றியோ அல்லது விரிவுரையாளர்கள் சிறைபிடிக்கப்படுவது பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ள வில்லை , இதனால்தான் எர்தோகனின் புரட்சி தொடர்ந்தும் பயணிக்கின்றது ஆனால் முஸ்தபா கமால் அதா துர்க்கை விடவும் துருக்கி பெரியதுபோன்று எர்தோகனை விடவும் துருக்கி பெரியது செக்குலரிஸவாதிகள் முற்றாக ஓரம்கட்டப்படும்போது சொந்த மன்னியில் தம்மை அந்நியர்களாக அவர்கள் உணரும்போது அது மீண்டும் ஒரு எதிர் அலையை உருவாக்கி மூன்றாவது துருக்கியை உருவாக்கலாம் எனவும் அவர் எச்சரிக்கிறார்.
ஆனால் இவற்றுக்கொள்ளாம் நேரடியான பதில் போன்று ஜனாதிபதி எர்தோகனின் பதவியேற்பு உரையும் அதற்கு முன்னர் அவர் தெரிவித்த கருத்துக்களும் அமைத்திருக்கின்றது அவர் உரையாற்றும்போது நான் அனைவரினதும் ஜனாதிபதி என்னை ஆதரித்தவர்கள் ஜனாதிபதி மட்டுமல்ல இந்த நாட்டின் அனைவரினதும் ஜனாதிபதி , எனது பிரதான இலக்கு தூக்கியை எல்லா துறைகளிலும் உயர்த்துவது என்றார் அதேபோன்று முஸ்லிம் உம்மா ஒரு உடலை போன்றது அது பிரதேசங்களினால் மட்டுப்படுத்தப்பட்டது அல்ல... காக்கஸஸ் , பால்கன்ஸ், மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா எமது ரூஹின் பகுதிகளாக கருதுகிறோம் என்கிறார்
இதேவேளை இங்கு கவனிக்கப்படவேண்டிய ஒரு முக்கிய விடயம் இருக்கிறது அர்தோகன் துருக்கியில் பொதுவாழ்வில் இஸ்லாத்தை தனிநபர்கள் கடைபிடிக்க இருந்த தடைகளை நீக்கினாலும் தேசிய அரசியல் பொருளாதார தளங்களில் எந்த மாற்றத்தையும் செய்ய அவர் முற்றப்படவில்லை அல்லது இஸ்லாமிய அரசியல் ,பொருளாதார கொள்கைகளால் அவற்றை மாற்றீடுசெய்ய முயற்சிக்கும் ஒரு நடவடிக்கையை அவர் ஆரம்பிக்கவிலை என்பதுடன் மதங்கள் அரசில் இருந்து சமதூதரத்தில் இருக்கவேண்டும் என்றே கூறி வருகிறார் .
இது பற்றி குறிப்பிடும் சில துருக்கி எழுத்தாளர்கள்
இலட்சியத்துக்கும் , நடைமுறைக்கும் இடையில் பயணிக்க வேண்டிய தூரம் நெடுந்தூரமாகத்தான் இருக்கும் என்பதை அர்தோகன் தெளிவாக உணர்த்திருப்பதை அவரின் இந்த கூற்றுக்கள் உண்மைப்படுத்துவதாக குறிப்பிடுகின்றனர்
சுருக்கமாக சொன்னால் அர்தோகன் துருக்கியில் தனிநபர்கள் இஸ்லாத்தை பொதுவாழ்வில் கடைபிடிக்க இருந்த தடைகளை நீக்கியுள்ளதுடன் அவர்கள் பொதுவாழ்வில் ,தேசியவாழ்விலும் தமது அடையாளங்களுடன் நுழையும் வழியை திறந்து விட்டுள்ளார் துருக்கியில் ஒரு இஸ்லாமிய அறிவியல் சமூகம் ஒன்று உருவாவதற்கான களத்தை செப்பனிட்டு வருகிறார் அவரின் வார்த்தைகளில் சொல்வதானால் துருக்கியில் ஒரு தக்வா கொண்ட சந்ததியை உருவாக்க முயற்சிக்கிறார் என்று கூறலாம் ஒரு இஸ்லாமிய தவ்லா ( அரசு) பலமான தக்வா கொண்ட மக்கள் மீது மட்டுமே நிலைத்திருக்கும் என்ற உண்மையை தெளிவாக விளங்கிக்கொண்டவராக அவர் செயற்படுகின்றார் என்ற வாதம் தர்கரீதியில் மறுக்கப்பட முடியாத ஒன்றாகவே உள்ளது .
இது பற்றி குறிப்பிடும் இன்னும் சில துருக்கி எழுத்தாளர்கள் எர்தோகன் அவரின் அதிகாரத்தின் மூலமாக துருக்கிய உஸ்மானிய பாரம்பரியத்தையும் இன்றைய புதிய உலகையும் இணைத்து ''ஸ்மார்ட் துருக்கியை'' உருவாக்க போராடுகிறார் என குறிப்பிடுகிறார்கள்- புதிய கட்டத்தில் எர்தோகனின் சமூக ,அரசியல் , பொருளாதார சாதனைகளை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
Post a Comment