Header Ads



"முஸ்லிம் தனியார் சட்ட சீர்திருத்தம், தேசிய சர்வதேச விவாதங்கள் தொடர்பில்"

-வ.ஐ.ச.ஜெயபாலன்-

இலங்கையிலும் சர்வதேச நாடுகளிலும் முஸ்லிம்களின் நண்பனாக முஸ்லிம்களின் உரிமைப் பிரச்சினை தொடர்பாக விவாதித்த அனுபவங்களில் இருந்து சில சொல்ல முன்வருகிறேன். இதனை ஆரோகியமான விவாதமாக்குவதும், பொருட்படுத்தாமல் ஒதுக்குவதும் முஸ்லிம்களின் உரிமை.

சரியத் அடிப்படையிலான முஸ்லிம் விவாக சட்டங்கள் பற்றிய விவாதங்கள் இன்று இலங்கையில் மட்டுமல்ல உலகளாவியும் இடம்பெறுகின்றன. சரியத் போன்ற முஸ்லிம் முன்னவர்களின் சட்டங்களை கோட்பாட்டு ரீதியாகவோ அல்லது நடைமுறையிலோ புனித நூலுக்கு இணையாகவோ தொடற்ச்சியாகவோ கருதுகிற பழமை வாதிகளுக்கும் இணையோ தொடற்ச்சியோ இல்லை என்கிற இளைய தலைமுறைக்கும் இடையிலான உள் விவாதங்களும் உலகளாவிய மட்டத்தில் இடம்பெறுகின்றன.

நடை முறையில் முஸ்லிம்களுக்கு இப்பிரச்சினை காலத்தோடும் முஸ்லிம்கள் சிறுபாண்மையாக வாழும் நாடுகளின் அரசுகளோடும் பெண்ணுரிமையை முன்னிலப் படுத்தும் சர்வதேச சமுகத்தோடும் எத்தகைய உறவை பராமரிப்பது என்பதுபற்றிய அரசியலும் இராசதந்திரமும் ஒப்பந்தமுமாகும்.

இத்தகைய விடயங்களை முஸ்லிம்களோ யூதர்களோ கிறிஸ்தவர்களோ இந்துக்களோ பெளத்தர்களோ பெரும்பாண்மையாக வாழும் நாடுகளில் உள்ள சிறுபாண்மை மதத்தவர்களும் எதிர்கொள்கிற பிரச்சினையாகும். உலகளாவிய விவாதங்களில் இவையும் சுட்டிக் காட்டப்படுகின்றன. எனவே அவற்றையும் நாம் வாசிக்க வேண்டும். ஏனெனில் அடிப்படையில் இது இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினையாக மட்டும் இல்லை. உலக மத கலாச்சாரங்களுக்கும் உலக மாநுடர் போராடி வெற்றி பெற்ற தனிமனித பெண் உரிமை மற்றும் குழந்தைகள் உரிமைச் சட்டங்களுக்கும் இடையிலான பிரச்சினையாகும். நூறு வருடங்களுக்கு முன்னர் இந்துக்களின் பால்ய விவாக கலாச்சாரம் கேழ்விக் குறியானது. சமகாலத்திலும் கத்தோலிக்க நாடுகள் சிலவற்றில் கருத்தடை பற்றிய விவாதங்கள் முடிவின்றித் தொடர்கின்றன.

முஸ்லிம் விவாக சட்ட சரத்துகள் சில பெண் உரிமையை சிறுவர் உரிமையை மீறுவதாக தேசிய சர்வதேசிய மட்ட விவாதங்கள் வலுப்பெற்று வருகின்றன. அதன் அடிப்படையிலான GSD போன்ற பொருளாதார வரிசலுகைகள் இலங்கை முஸ்லிம்களை குறிவைத்து ஆக்கப் பட்டவையல்ல. இலங்கை மரண தண்டனையை ஆமூலாக்குவதற்க்கு எதிராகவும் இத்தகைய பொருளாதார நிபந்தனைகள் உள்ளன. அதானால் இலங்கை அரசு மட்டும் சம்பந்தப் பட்ட பிரச்சினையாகமட்டும் தனித்து இப்பிரச்சினையை விவாதிக்கவோ புரிந்துகொள்ளவே சமரசத் தீர்வு காணவோ முடியாது. முஸ்லிம்களுகுள்ளேயே பழமை வாதிகளின் கருத்து, இளைய தலைமுறை முஸ்லிம்களதும் முஸ்லிம் பெண்களதும் கருத்து என இருவேறு நிலைபாடு உள்ளது. எனவே இது காலம் பற்றிய பிரச்சினையாகவும் உள்ளது.

நிலவும் இலங்கை விவாக சட்டங்கள் அதன் சரத்துக்கள் எதுவும் இஸ்லாத்துக்கு விரோதமானவை என்கிற விவாதங்கள் இதுவரைக்கும் எழவில்லை. நிலவும் சட்டத்தில் முஸ்லிம்களுக்கு ஆட்சேபனையிருந்தால் அது இலங்கை மக்களை அணிதிரட்டிப் போராட வேண்டிய பொதுப் பிரச்சினை. இலங்கை விவாக சட்டங்களின் ஒரு பகுதியான முஸ்லிம் விவாகச் சட்டங்களுக்கு திருத்தம் கோரும் கோரிக்கை விசேட சலுகைகள் பற்றிய முஸ்லிம்களின் பிரச்சினையாகும்.

முதன்மையில் இது வாழப்போகிற எதிர்காலத்தில் இலங்கையின் ஆட்சியில் பங்குபெறப்போகிற இளைய தலைமுறை முஸ்லிம் பெண்களதும் ஆண்களதும் பிரச்சினையாகும்.

இதுபறிய விவாதங்களில் முக்கியமான இரண்டு விடயங்கள் உள்ளன 
1. இஸ்லாமிய நூலகத்தில் புனித நூலுக்கு இணையாக எந்த நூலுமில்லை. 
2. முஸ்லிம் பெண்களும் பங்குபற்றாத எந்த முடிவுகளும் முஸ்லிம்களின் எதிர்காலமல்ல.

சரியானவற்றில் எப்பவும் இறுதியில் உலகம் உங்களோடு நிற்க்கும்.

5 comments:

  1. ஐயா ஜெயபாலனின் கருத்து வரவேற்கத்தக்கது.
    மேலும் இங்கு பேசப்படும் “முஸ்லிம் தனியார் சட்ட சீர்திருத்தம்” எனும் தொனிப் பொருள் இஸ்லாமிய வேத நூலாகிய திருக் “குர்ஆன்” போன்ற ஒன்று அல்ல.
    மாறாக “முஸ்லிம் விவாக விவாகரத்து தனியார் சட்டம்” பல ஆண்டுகளுக்கு முன் நாட்டின் சட்டதிட்ட விதிமுறைகளுக்கு அமைவாக இயற்றப்பட்ட ஒன்றாகும்.
    இதில் மாற்றங்களும் திருத்தங்களும் செய்வது தவறல்ல, ஆனாலும் அது இஸ்லாமிய திருக் குர்ஆனின் சட்டத்தின் அடிப்படையிலிருந்தே அவ் மாற்றங்கள் உண்டு பண்ணப்பட வேண்டிய ஒன்று.
    இது வெறும் முஸ்லிம் மத குருமார்கள் சம்மந்தப்பட்ட ஒன்று அல்ல. மாறாக நாட்டின் சட்ட வல்லுனர்கள், முஸ்லிம் அரசியல் வாதிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து நாட்டின் சட்ட விதிமுறைகளுக்கு அமைய தயாரிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இங்கு பெண்களின் கருத்தை உள் வாங்குவதில் இஸ்லாத்தில் எந்தத் தடையுமில்லை என்பதை கருத்திற் கொள்ளவும்.
    வெறும் திருமணம் செய்வது வேறு, திருமணம் முடித்து குடும்ப தாம்பத்திய வாழ்க்கை நடத்துவது என்பது வேறு. (இதைப் புரிந்து கொண்டால் நன்று)

    ReplyDelete
  2. Sir, you are absolutely right, and our problem now is that we are suffering from lack of qualified muslim scholars to study and sort out this matter.

    ReplyDelete
  3. முஸ்லிம் ச‌மூக‌த்தின்பிர‌ச்சினை சிறு வ‌ய‌து திரும‌ண‌ம் அல்ல‌, முப்ப‌து வ‌ய‌தாகியும் திரும‌ண‌மாகாத‌ முதிர் க‌ன்னி பிர‌ச்சினைதான்.
    ஒவ்வொரு ஊரிலும் 14 வ‌ய‌துக்கு கீழ் சிறு வ‌ய‌து திரும‌ண‌ம் முடித்தோரையும் 30 வ‌ய‌துக்கு மேல் திரும‌ண‌ம் முடிக்காதோரையும் க‌ண‌க்கிட்டு பார்த்தால் நான் சொல்வ‌து புரியும்.
    முஸ்லிம் பெண்க‌ளின் உரிமை பேசும் ச‌ட்ட‌த்த‌ர‌ணி பெண்க‌ள் இத்த‌கைய‌ முதிர் க‌ண்ணி பிர‌ச்சினையை தீர்க்க‌ த‌ம் க‌ண‌வ‌ன்மாருக்கு இப்பெண்க‌ளை இர‌ண்டாவ‌து ம‌னைவிக‌ளாக‌ ம‌ண‌முடித்து கொடுக்க‌ முன்வ‌ருவார்க‌ளா?

    ReplyDelete
  4. இரண்டும் பிரச்சினைதான் இரண்டுக்கும் தீர்வு வேண்டும் ஜெஸீரா

    ReplyDelete
  5. விவாதம் என்பது " தான் கொண்ட கொள்கையை, தனது கருத்தினை விட்டுக்கொடுக்காமல் போட்டுப்பிடிக்கின்ற அதர்காக முயற்சிப்பதாக இருக்கின்றது ".

    எனவே விவதம் என்ற சொல்லுக்கு பதிலாக இவ்விடத்தில்......

    கருத்தாடல் (கலந்துரையாடல்) என்ற தலைப்பில் யதார்த்தத்தை, ஆத்மீகத்தை விளங்கும் முயற்சியில் ஒவ்வொருத்தரும் தங்களது சிந்தனையை நடு நிலையில் வைத்துக்கொண்டு..........

    தெழிவு பெறலும் தெழிவு படுத்தலும் என்ற ரீதியில்.....................

    உளத்தூய்மையுடன் பிறரது கருத்துக்களை உள்வாங்கி, தனது கருத்திக்களை பணிவாக வெளியிட்டு...........

    இறுதியில் பெரும்பாண்மையின் முடிவுக்கு சிறுபாண்மையினர் உடன்பட்டு செல்கின்ற நிலமைக்கு வருகின்றபோது ..................

    அல்லாஹ்விடம் பொறுப்பிக்கொடுத்தலாக அது அமையும்.

    கஹ்பாவை உடைக்கவந்த யானைப்படையையும் அதன்போது கஹ்பாவிற்கு பொறுப்பாக இருந்தவரையும் இவ்விடத்தில் நினைவுக்கு கொண்டுவரவும்.

    ReplyDelete

Powered by Blogger.