பல்டி அடிக்கமாட்டேன் - தயாசிறி
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகளினாலேயே அரசாங்கத்திலிருந்து தான் வெளியேறியதாகவும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை விட்டு வெளியேறி செல்லமாட்டேன் எனவும் முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நிகவெரடிய பிரதேசத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றியவர்,
“மக்கள் நான் எந்த கட்சியில் இருக்கிறேன் என கேட்கின்றனர். நான் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியிலேயே இருக்கிறேன். அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள சுதந்திர கட்சியின் 16 பேரின் நிலைபாடும் அதுவாகவே இருக்கிறது.
அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள சுதந்திர கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எமது கட்சியை பலப்படுத்துவதாக உறுதியளித்திருக்கிறோம். கட்சி இரண்டாக பிளவுப்பட்டாலும் நான் கட்சியை விட்டுவிலகப்போவதில்லை.” எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
தயாசிறியின் “பல்டி அடிக்கமாட்டேன்” எனும் கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ReplyDeleteமுஸ்லிம் தலைவர்களின் கலாச்சாரத்தை நக்கல் பண்ணிவிட்டார்.
(@s..tna and Gtx, பார்த்தீர்களா, நான் உங்களுக்கு தான் சப்போட்டாக்கும்)