இரவு பஸ்ஸில், நடக்கின்ற கூத்து
-ஜீவிதன்-
தூரப் பயணம் போவதென்றால் ஒன்று அதிகாலையில் வெளிக்கிட வேணும் இல்லாட்டிக்கு இரவிலை போக வேணும் என்பார்கள். அது பஸ்ஸிலை என்றாலும் சரி தனிப்பட்ட வாகனத்திலை என்றாலும் சரி. இந்த இரண்டு நேரத்திலைதான் நெருக்கடி இல்லாமல் போகலாம்.
மட்டக்களப்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் போறதெண்டால், இரவிலை போனால்தான் சரி. நல்ல நல்ல படங்கள் போடுவாங்கள்; பாட்டுகள் போடுவாங்கள்! சில நேரத்திலை இந்தக் கண்டக்டர் தம்பிமார் குழப்படி செய்வாங்கள்; அவங்களுக்குச் சில நேரம் பேசத்தெரியாது என்கிறார் நண்பர். அஃதென்றால் உண்மைதான். அதிலையும் பதிவு செய்து போறவங்கள்மேல சில நேரம் கண்டக்டர் தம்பிமார் எரிஞ்சு விழுவாங்கள், ஏனோ தெரியாது!
ஒரு நாள் யாழ்ப்பாணத்திலை இருந்து கொழும்புக்கு வாறதுக்காக ஸ்டாண்டிலை நிண்டுகொண்டிருந்தன். அந்த இடத்திலை ஒரு சொகுசு வாகனம் (ஜீப்) நிண்டுகொண்டிருந்தது. அதிலை இருந்த ஓர் அண்ணன், பஸ் சொந்தக்காரர் என்று நினைக்கிறன், கண்டக்டருக்கும் சாரதிக்கும் குடு குடு என்று குடுத்துக்ெகாண்டிருக்கிறார்.
"டேய், பஸ்ஸைக்ெகாண்டு வந்து ஒஃபிஸிலை நிற்பாட்டு; ஓடாட்டிப் பரவாயில்லை. என்ன விளையாடுறீங்களா? பஸ்ஸுக்கு ஆளில்லை, சீற் இல்லையெண்டால், கொணாந்து அங்கை போடு!"
அந்தச் சத்தத்துடன் சத்தமாய் ஆரோ என்ரை பேரையும் சொல்றாங்கள்... அண்ணைதான்.
"என்ன இங்க நிற்கிறியள், எங்கடை பஸ்ஸிலை போகமாட்டியளே!"
"இல்லை அண்ணை, நான் ஏற்கனவே புக் பண்ணிற்றன்"
"இல்லையெண்டால் சொல்லுங்கோ...டேய் கொழும்பிற்குச் சீற் இருக்கா?"
"இல்லை அண்ணை, வவுனியாவிலை இருந்து வேணுமெண்டால்..."
"அண்ணன் போறியளே?"
"இல்லை, வேண்டாம். நான் இதிலையே போறன், சீற் இருக்கு"
"ச்சரி... இனி... எனக்குச் சொல்லுங்கோ...சரிதானே!"
சரியென்று நான் சொல்ல, அண்ணன் சிட்டாய்ப் பறந்துவிட்டார் வாகனத்தில். பிறகு அவ்விடத்திலை விசயத்தை நான் அறிஞ்சிட்டன்.
பஸ் புக் பண்ணுற இடத்திலை கொழும்புக்குப் போறதுக்காக ஆரும் வந்தால், கொஞ்ச பேருக்குத்தான் சீற் குடுக்கிறாங்கள். சீற்றை வைச்சுக்ெகாண்டே, முடிஞ்சுட்டுது! என்று சொல்லுறது. பிறகு, பஸ் ஸ்டாண்டிற்கு வந்தோனை, அங்க வைச்சு சீற் குடுத்துக் காசு எடுக்கிறது. உது பஸ் சொந்தக்காரருக்குத் தெரியாமல் நடக்கிற வேலை. ஒரு வகையிலை பெருந்துரோகம். அதைக் கண்டுபிடிச்சுட்டு வந்துதான் அண்ணன் குதிச்சிருக்கிறார். அண்ணன் ஆத்திரப்படுறதிலை நியாயம் இருக்குத்தானே! இந்த நைற் பஸ்களிலை இப்பிடித்தானாம் விசயம் நடக்குது. இந்தக்காலத்திலை ஆரையும் நம்ப ஏலாமத்தான் கிடக்கு. மட்டக்களப்பிலை நான் பார்த்தன், பஸ் ஓனரே நின்றுதான் ஆட்களை ஏற்றுவார். அவர்ட்ட ஒஃபீஸ் ஸ்டாண்டிலையே இருக்கிறபடியால் அது சாத்தியமாகிறது. யாழ்ப்பாணத்திலை அண்ணன் எங்கேயோ பஸ் எங்கேயோதானே கிடக்கு! பிறகு எப்பிடி நோட்டம் விடுறது. என்ன இருந்தாலும் பஸ் கண்டக்டர் தம்பிமார் கொஞ்சமாச்சும் நேர்மையாக நடந்தால் நல்லம்.
நான் சொல்ல வந்த விசயம் இது இல்லை எண்டாலும், சொல்லுப்பட்டிற்று. நைற் பஸ்ஸை ஓட்டுற அண்ணாமாரும் கண்டக்டர் தம்பிமாரும் எதையாச்சும் செய்யட்டும். அந்தக் கதையை விடுங்களன்.
நான் சொல்ல வாறது பஸ்ஸிலை போற ஆட்களைப்பற்றி...மட்டக்களப்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இரவிலை பஸ்ஸிலை போறதெண்டால், நண்பருக்குச் சந்தோசமாய் இருக்குமாம். ஆருக்குத்தான் சந்தோசமாய் இருக்காது. சக மொழி பேசுற சனம், அதேமாதிரி ஓட்டுநர், நடத்துநர், தமிழ்ப்படங்கள், பாட்டுகள்! ஏன் சந்தோசம் இருக்காது. சரியா சென்னையிலை போகிறமாதிரி ஒரு ஃபீலிங்கு!
அந்த ஃபீலிங்கோட ஒரு நைற் பயணம் போகலாம் என்று நினைச்சுக் கடந்த வாரம் ஹற்றனுக்குப் போனேன். ஏன் கேட்குறீங்க! நைற் பயணம் எண்டால், அதுதான் நைற் பயணம். நான் பதிவு செய்தது 20ஆம் நம்பர் ஜன்னல் பக்கம். ஜன்னல் பக்கம் என்பது காதலிக்குச் சமமானது. அவள் அருகில் இருக்கிறாளோ இல்லையோ, ஜன்னல் பக்கம் கிடைத்தால், அவள் அருகில் இருக்கின்றமாதிரிதான். அதுதான் "பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்" என்று கவிஞர் எழுதியிருக்கிறார். பின்னிரவு ஒரு மணிக்கு பஸ் புறப்படவிருக்கிறது. நான் என் இருக்ைகக்கு வந்தால், (இயன்றளவு ஆசனம் என்ற சொல்லைத் தவிர்க்க முயற்சித்து வருகிறேன்) ஒருவர் என் காதலியைக் கட்டிப்பிடித்துக்ெகாண்டிருக்கிறார்.
"ஓக்க மகே சீற் எக்க"
"நே மேக்க தாஹட்ட (18)"
"நே! தாஹட்ட மெத்தன... ஓக்க விஸ்ஸ (20)" நான் பதிவு செய்துகொண்டு வந்ததாகச் சொன்னேன். அந்த இளைஞர் தொடர்ந்து மல்லுக்கு நிற்காமல், எனக்கு அந்த இருக்ைகயை மரியாதையாகத் தந்துவிட்டு நகர்ந்துவிட்டான். பின்னர்தான் பார்த்தேன், தமிழ் மூஞ்சு! எல்லாமே அப்பிடித்தான். ஒருசிலரைத் தவிர. சிங்களப் பயணிகளைப் பார்க்க எனக்குப் பாவமாகத்தான் இருக்கிறது. அந்தளவிற்கு ஓர் ஆதிக்கமாகத் தெரிகிறது எனக்கு. இதே நிலை வேறு இடத்தில் என்றால், மற்றமாதிரி யோசித்துப்பாருங்கள். உள்ளே போங்கள் ஐயா என்றால், முறைப்பதும், விழிப்பதும், முறுக்குவதுமாய் இருக்கிறார்கள். அவர்கள் (சிங்களவர்கள்) வாயைக் கொடுத்து ஏன் வம்பை வாங்குவான் என்று மௌனமாகப் போகிறார்கள். இது எனக்கு ஓவராகத்தான் படுகிறது. நாம் அடங்க வேண்டிய இடத்தில் அடங்க வேண்டும். அடக்க வேண்டிய இடத்தில் அடக்க வேண்டும். இரவில் எல்லோரும் நிம்மதியாய் பயணிப்பதற்கே விரும்புவார்கள். அவர்களிடம்போய் நாம் 'தண்ணி'யையும் அடித்துக்ெகாண்டு மல்லுக்கட்டுவதா? பஸ் புறப்படுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னர், பின்வரிசை இருக்ைகப் பகுதியில் அடிதடி...தடார் படார் என்கிறது.
பஸ் நிதானமாய் தன் பயணத்தைத் தொடங்குகிறது. கொட்டகலையில் இறங்கவேண்டிய ஒருவருக்கு மட்டும் நிதானம் இல்லை என்பது அவர் முறுக்குவதில் தெரிகிறது. அந்தச் சிங்கள நபருடன் முகத்துடன் முகம் கொண்டு போய் முறைத்து முறுக்கிறார். என்னை எங்கே பின்னுக்குத் தள்ளுகிறாய்? தொலைத்துப்போடுவேன்.. என்று ஆட்காட்டி விரலை அவனின் மூக்குக்கு நேரே கொண்டுபோய் நீட்டி விழிகளைப் பிதுக்குகிறார். இது எனக்கு அவமானமாய் இருக்கிறது. குடிகாரப் பையா, நீ குடித்து வெறித்துத் தொலை! அதற்காக உன்னால், எல்லாப் பயணிகளும்(தமிழர்களும்) வெட்கிக் கூனிக்குறுக வேண்டுமா? இத்தனைக்கும் பதிவுசெய்துகொண்டவர்களுக்கு மேலதிகமாக அதேயளவானோர் நின்றுகொண்டு வருகிறார்கள்!
பஸ் தெஹியோவிற்றவில் நிற்கிறது!
நானும் கீழே இறங்கினேன். அங்கே அந்த இரண்டுபேரும் கடுமையாக வாக்குவாதப் படுகிறார்கள்.
"உன்னைத் தொலைத்துப்போடுவேன்; எலும்புகளை முறிப்பேன்; உன்னைத் தூக்கிக்ெகாண்டுபோய் எலும்பை முறிப்பேன். தமிழன் தமிழன்மாதிரி இரடா நாயே!"
"அந்தக் கொட்டகலை வீரன், நாலாய் வளைகிறார், நான் உங்களையொன்றும் சொல்லலையே..." அவரின் வீரம், அங்கே அம்மணமாகிறது!"
எனக்கு அந்தச் சிங்களப் பொடியன் காறி முகத்தில் உமிழ்ந்ததைப்போல் இருந்தது. சண்டித்தனம் காட்டினால், கடைசி வரைக்கும் காட்ட வேண்டும். இல்லாவிட்டால், வாலைச் சுருட்டிக்ெகாண்டு இருக்க வேண்டும்! பஸ் புறப்பட்டுவிட்டது! இருவரையும் காணவில்லை. நாளைக்குக் காலையில் தெஹியோவிற்ற பகுதி ஆற்றில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டதாகச் செய்தி வருமோ! என்று நினைப்பு வருகிறது. அந்தளவிற்குத்தான் கீழே கடையில் கதை நடந்தது.
இல்லை! இறங்கும்போது பார்த்தால், பின்னிருக்ைகயில் கொட்டகலை வீரம் சுருண்டு கிடக்கிறது. இதனால், இரவில் பயணிக்கும் சகலமானவர்களுக்கும் தெரிவித்துக்ெகாள்வது என்னவென்றால், இரவு பயணத்தில் தண்ணியடிக்காதீர்கள். அடித்தால், மரியாதையாய் பயணியுங்கள். அப்போதுதான் உங்கள் மானமும் உடன் பயணிப்போரின் மானமும் காக்கப்படும்!
WTF???? Is this a NEWS site or a Facebook post???
ReplyDeleteபேஸ்புக்கைவிட, யாழ் முஸ்லிமின் தராதரம் எப்போது கீழிறங்கி விட்டது.
ReplyDelete