"நாட்டுக்கு தேவை மகிந்த சிந்தனையே, கோத்தபாய அல்ல"
மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்தை முட்டி மோதி வீழ்த்தி விட்டு எவராவது முன்னோக்கி செல்ல முயற்சிப்பார்கள் என்றால் அதற்கு இடமளிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சோசலிச மக்கள் முன்னணி கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் வாசுதேவ இதனை கூறியுள்ளார்.
நாட்டுக்கு தற்போது தேவை புதுப்பிக்கப்பட்ட மகிந்த சிந்தனையே தவிர வியத் மக (கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான அமைப்பு) அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சியின் சார்பில் யார் வேட்பாளராக போட்டியிட்டாலும் அவருக்கு மகிந்த ராஜபக்சவே தலைமை தாங்குவார்.
மகிந்த ராஜபக்சவுக்கு நிகரான தலைமைத்துவத்தை வழங்கக் கூடிய எவரும் இல்லை எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment