அரசியலை விட்டு விலகமாட்டேன் – விஜயகலா திட்டவட்டம்
அமைச்சர் பதவியை இழந்தாலும், தான் அரசியலை விட்டு விலகப் போவதில்லை என்று கூறியிருக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன்.
விடுதலைப் புலிகள் புத்துயிர் பெற வேண்டும் என்று ஏன் கூறினீர்கள் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள அவர்,
“இந்தவிடயம் தொடர்பான விசாரணைகள் முடியும் போது இதற்கான பதில் கிடைத்து விடும்.
எனினும், இனவெறுப்பை தூண்டும் நோக்கில் நான் விடுதலைப் புலிகள் பற்றி கருத்து வெளியிடவில்லை.
நான் அமைச்சர் பதவியை இழந்திருக்கக் கூடும், ஆனாலும், அரசியலை விட்டு விலக மாட்டேன். தொடர்ந்து மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.
விஜயகலா மகேஸ்வரன் அரசியலை விட்டு விலகப் போவதாகவும், நாட்டை விட்டு வெளியேறப் போவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வரும் நிலையிலேயே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
நீதியை நிலைநாட்டும் நோக்கில் உங்களில் இருந்து வெளிப்பட்ட உணர்வுபூர்வமான வார்த்தைகளுக்காக நீங்கள் செலுத்திய விலை, இலங்கை ஒரே நாடாக இருக்க வேண்டுமானால் அனைவருக்கும் அனைத்திலும் ஒரே நீதி என்பதை ஜனநாயக முறையில் உறுதிப்படுத்த நீங்கள் உங்கள் அரசியல் பயணத்தைத் தொடர வேண்டும்.
ReplyDeleteDo not fear for this barking dogs. Your are fighting for your peoples right and you will win it. God bless you.
ReplyDeleteவிஜயகலா என்ற பத்தினியின் அரசியல், மண்ணெண்ணையில் கார் ஓடுபவர்களுக்குத்தான் அதிக விருப்பம்.
ReplyDeleteவிஜயகலா போன்ற பேரினவாத கட்சிகளை சொந்த நலன்களுக்காக பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்களை வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் நிரந்தரமாக ஒதுக்க வேண்டும் .
ReplyDelete