புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு எதிராக, அதியுயர் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்திருக்கும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்க ஜனாதிபதி செயற்பட வேண்டும் என, ஒன்றிணைந்த எதிரணியின் ஏற்பாட்டாளரும், கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
மினுவன்கொட- உடுகம்பொல பிரதேசத்தில் (03) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார் எனவும், தமிழ் மக்களிடையே மீண்டும் தமிழீழம் என்ற கனவை விதைக்கிறார் எனவும் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க, இவ்வாறானவர்கள் நாடு கடத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி உடனடி தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். நான் நினைக்கிறேன் ஜனாதிபதி இது குறித்து இன்னும் அறியவில்லை என்று. ஏனென்றால் ஜனாதிபதி எல்லாவற்றையும் அறிவது பத்திரிகைகள் மூலமே என குறிப்பிட்ட பிரசன்ன ரணதுங்க, இதனையும் அவ்வாறு வாசித்தறிந்து ஈழம் வேண்டும் என கோரும் அம்மனியை துறத்திடுங்கள் என குறிப்பிட்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வடக்கின் பல பாகங்களில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டன. அரசாங்கம் அவற்றை மூடிமறைத்து விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு வௌ்ளையடித்தது. இந்த விடயம் தொடர்பில் இரகசிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறில்லாமல் தெற்கு மக்கள் தினமும் ஏசுகின்றனர் எனக் கூறி ஜனாதிபதி வடக்குக்குச் சென்று விஜயகலாவுக்கு ஆறுதல் சொல்வதால் எந்த பயனும் இல்லை. நாம் குறை கூறுவது சாதாரண காரணங்களுக்காக.
விடுதலை புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் இவ்வாறானவர்கள் குறித்து, அதியுயர் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். விஜயகலாவின் வாயிலிருந்து வெ ளிவந்த கருத்தானது அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதி என்பது தெ ளிவான புலனாகிறது.
அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியில் இருந்துக் கொண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள இரண்டு அமைச்சர்கள் முன்னிலையில் அரச விழாவொன்றில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் தேவை எனக் கூறியிருப்பாராயின், அரசாங்கத்தின் புலிகளுக்கு ஆதரவானவர்கள் குறித்து வேறு சாட்சியம் தேவையில்லை என்றார்.
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாட்டை பிரிக்க இடமளிக்க முடியாதென சத்தியப்பிரமாணம் செய்கின்றனர். அவ்வாறாயின் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எவ்வாறு ஈழம் குறித்து பேசுவார் எனவும் பிரசன்ன ரணதுங்க கேள்வி எழுப்பினார்.
Such a fascist terrorist must immediately expel your opinion as soon as possible...
ReplyDeleteYour all talking about prabhakaran
ReplyDeleteBut your group worst then ltte.