இது மிகத் தவறானது
Sivarajah Ramasamy (சுடர் ஒளி பிரதம ஆசிரியர்)
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் துணைவியார் மைத்திரி விக்கிரமசிங்கவின் இந்த போட்டோ இணையத்தில் வேகமாக உலா வருகிறது....
பிரதமர் ரணில் நாட்டின் வளங்களை விற்கிறார் என்ற கருத்தில் — அவரது துணைவியாரும் விற்பனைக்கு உள்ளார்...
ரணிலை தொடர்பு கொள்ளுங்கள் என்று இந்த படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது...
பிரதமர் ரணிலின் துணைவியார் மைத்திரி விக்ரமசிங்க களனி பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியை. பிரதமரின் மனைவி என்று படை பட்டாளத்துடன் இல்லாமல் எளிமையான வாழ்க்கை வாழ்பவர்..
ஒரு வாகனம் ஒரு சாரதி என்று அரச சலுகைகள் எதனையும் அனுபவிக்காமல் சாதாரண ஒரு அரச ஊழியராக இருக்கும் அவர் பிரதமரின் அதிகாரத்தை பயன்படுத்தி வியாபாரமோ அல்லது அரசியலோ செய்ததில்லை.. எனக்கு அவரை தெரியாது.. ஒரு நாள் கூட நான் கண்டதும் கிடையாது .. தொலைபேசியில் கூட பேசியது கிடையாது.. ஆனால் அவரைப்பற்றி அவரை சூழ உள்ளவர்கள் , பல்கலை மாணவர்கள் , நண்பர்கள் என்னிடம் கூறியுள்ளனர்...
அதற்கும் அப்பால் ஒரு பெண் என்றால் விற்பனை பொருள் என்ற கருத்துக்கு நான் எனது எதிர்ப்பை பதிவு செய்கிறேன்...
வாகனத்தில் இருந்து தாம் இறங்க முற்படும்போது தனது வாகனத்தின் கதவை திறந்தார் என்று பாதுகாவலர் ஒருவரை கூட ஒரு நாள் கடிந்து கொண்டாராம் மைத்ரி விக்ரமசிங்க. சாதாரண ஒரு பிரஜையாக வாழும் ஒரு பெண்மணியை இப்படி அவமானப்படுத்தலாமா? அசிங்கப்படுத்தலாமா?
தம்பட்டம் இல்லாத எளிமையான அவரை இப்படி விளித்திருப்பதன் மூலம் இலங்கையின் சாக்கடை அரசியலை உலகத்துக்கே சொல்லியுள்ளனர் இந்த முட்டாள்கள்...
இந்த படத்தை இணையத்தில் முதலில் உலாவவிட்ட அந்தப் பொறுக்கியை கைது செய்ய வேண்டும் பொலிஸ் !
கவலையளிக்கிறது ......
ReplyDeleteThat is Sri Lankan culture.
ReplyDeletePeople intrude for nothing but to create problems ..
This is not good .
Poor lady has to suffer .
Its a real example for SL situation of an innocent person how does she gain 3rd parties punishment. Its a punishable violation against an innocent woman. so, catch him/her immediately.
ReplyDeleteIts a real example for SL situation of an innocent person how does she gain 3rd parties punishment. Its a punishable violation against an innocent woman. so, catch him/her immediately.
ReplyDeleteShame.Shame
ReplyDeleteVERY SAD,
ReplyDeleteOur immediate need is well disciplined and highly cultured society. Prof Maithiri Wickremasinghe is one of the high valued precious gem of our country.
ReplyDeleteWhich son or daughter of bitch do that work. He or she have not born with sisters thay can same advertising they own mum, sisters and daughters. Where is female humanitarian activist.
ReplyDelete"THE MUSLIM VOICE" DENOUNCE THIS PROFUSELY. RANIL HAS THE AUTHORITY. HE SHOULD DEPLOY ALL AVENUES WITHIN THE RULE-OF-LAW TO CATCH THE CULPRIT WHO HAD DONE THIS DEGRADING THING. HER DIGNITY HAS TO BE GUARDED. THIS IS TE RESPONSIBILITY OF ALL THE CITIZENS OF SRI LANKA, Insha Allah.
ReplyDeleteNoor Nizam.
Convener - "The Muslim Voice".