Header Ads



பிரான்ஸ் நாட்டிற்குள், நடந்த மகா அசிங்கம்


உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றிபெற்றதைப் பாரிஸில் கொண்டாடிய ரசிகர்கள் வரம்பு மீறியதால் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி அவர்களை பொலிஸார் கட்டுப்படுத்தியுள்ளனர்.

பாரிஸ் நகர வீதிகளில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். வாணவேடிக்கை, ஆடல் பாடல் எனக் கொண்டாட்டம் களைகட்டிய நேரத்தில் ஒருசிலர் கொண்டாட்டத்தைக் குலைக்கும் வகையில் கடைகளில் உள்ள கண்ணாடிகளைக் கல்வீசி உடைத்தனர். இதையடுத்துக் பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி அவர்களைக் கட்டுப்படுத்தினர்.

இன்னும் சில இடங்களில் கடைகள் சூறையாடப்பட்டன. அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்கில் கலகத் தடுப்புக் பொலிஸார் நூற்றுக் கணக்கானோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தபோதும் பலனளிக்கவில்லை.

சிலர் பாதுகாப்புப் படையினர் மீது நெருப்பைக் கொளுத்திப் போட்டனர்.

ஒருபுறம் வன்முறை நடந்தாலும், நாடு திரும்பும் வெற்றி வீரர்களை வரவேற்பதற்காக நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது.

பாஸ்டில் சிறைத் தகர்ப்பு நாள், உலகக் கிண்ண கால்பந்து வெற்றிக்கொண்டாட்டம் ஆகியவற்றுக்காகப் பாரிஸில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட பாதுகாப்ப படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பிரான்ஸில் கால்பந்து வெற்றிக் கொண்டாட்டம் எப்போதும் சுமுகமாக நடப்பதில்லை.

No comments

Powered by Blogger.