இலங்கையில் டுக் டுக் ஆரம்பம்
நிதி அமைச்சும் -சுற்றுலாத்துறை அமைச்சும் இணைந்து இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் பொருட்டு முதற்கட்டமாக கொழும்பில் 750 முச்சக்கர வண்டிகள் மற்றும் சாரதிகளுக்கு சுற்றுலாத்துறை அதிகார சபையினால் பயிற்சிஅளித்து அவா்களுக்குரிய சான்றிதழ் மற்றும் டுக்-டுக் எனும் சின்னம் வழங்கப்பட்டது. இந் நிகழ்வு நேற்று (30) காலிமுகத்திடலில் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அமைச்சா்களான மங்களசமரவீர, ஜோன் அமரதுங்க, சாகலரத்னாயக்க, கொழும்பு மேயா் ரோசி சேனாநாயக்க, இந்தியா மற்றும் யப்பாண் உயா் ஸ்தாணிகா்களும் கலந்து கொண்டனா்.
டுக் டுக் லோகோ கொண்டவா்கள் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பிரயாணிகளை ஏற் றிச் சொல்லுதல் கொழும்பு ஏனைய பகுதிகளுக்கு போக்குவரத்துச் சேவைகளை செய்வதற்கே இந்த வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இவா்களது முச்சக்கர வண்டிகளில் வை-பை தொலைத்தொடா்பு வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இத்துறையில் முதற்கட்டமாக 750 முச்சக்கர வண்டிகள் சாரதிகள் கொழும்பில் உல்லாசத் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இவ் முச்சக்கர வண்டிகள் கொழும்பில் உள்ள 5 நடசத்திர ஹோட்டல்கள் அருகே தரி்த்து நிற்கும்.
இங்கு உரையாற்றிய நிதி ஊடக அமைச்சா் மங்கள சமர வீர தகவல் தருகையில் -
இலங்கையில் 13 இலட்சம் முச்சக்கர வண்டிகள் உள்ளன.அதில் 8 இலட்சம் முச்சக்கரவண்டிகள் மக்கள் சேவைக்காக பாவிக்கப்படுகின்றன. அதல் கொழும்பில் மட்டும் 60ஆயிரம் முச்சக்கர வண்டிகள் பாவனையில் உள்ளன. 2020 ல் யப்பாண் இலங்கை கூட்டுத் தயாரிப்பில் இலங்கை முச்சக்கர மிண்சாரத்திலான முச்சக்கர வண்டிகள் உற்பத்தி செய்யப்படவுள்ளன.
இலங்கையில் 3வது தேசிய வருமாணமாக சுற்றுலாத்துறை விளங்குகின்றது. அதில 2017ல்21 இலட்சம் உல்லாச பிரயாணிகள் இலங்கை வந்துள்ளனா். 4 பில்லியன் ருபா வருமாணமாகக் கிடைத்து்ளளது. 2020 4.2 மில்லியன் உல்லாசபிரயாணிகள் எதிா்பாா்க்கப்படுகின்றது. 7 பில்லியன் வருமாணம் பெறுவதற்காக சில முன்னெடுப்புக்களை செய்துள்ளோம். என அமைச்சா் மங்கள சமர வீர தெரிவித்தாா்.
(அஷ்ரப் ஏ சமத்)
இருக்கிரத ஓட்டுரத்துக்கு இடமில்லையாம், அதுக்குள்ள இது வேற !!!
ReplyDeleteஇதுகளுக்குத்தான் இவர்கள் தகுதியானவர்கள்.
ReplyDelete