கண்ணீர் மல்க, பூஜித ஜயசுந்தர
நாட்டில் 85 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உள்ள பொலிஸ் சேவையில் ஒரு சில பொலிஸ் அதிகாரிகள் மீதே குற்றச்சாட்டுக்கள் உள்ளதாகவும், இவ்வாறான அதிகாரிகளை சட்டத்தின் முன் கொண்டுவர ஒரு போதும் பின்வாங்கப் போவதில்லையெனவும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார்.
போதைப் பொருள் வியாபாரம் தொடர்பில் யாராவது ஒரு பொலிஸ் அதிகாரி தொடர்பு என அறியக் கிடைத்தவுடன் அவரை உடனடியாக கைது செய்து சட்டத்தை அமுல்படுத்த பின்நிற்கப் போவதில்லையெனவும் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.
பொலிஸ் சீருடைக்குள் இருந்து கொண்டு சட்ட முரணான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என பொலிஸ் மா அதிபர் சகல பொலிஸ் அதிகாரிகளையும் கேட்டுக் கொண்டார்.
நாட்டில் பொலிஸ் சேவையில் உள்ளவர்கள் இரவு பகலாக தமது சொந்த தேவைகளையும் மறந்து ஆற்றும் சேவைகளையும் பொலிஸ் மா அதிபர் இதன்போது கண்ணீர் மல்க நினைவு கூர்ந்தார்.
கம்பஹா மற்றும் கிரிந்திவெல பொலிஸ் நிலையங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
Post a Comment