Header Ads



சவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு

சவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியாவில் அன்றாடம் தயாராகும் உணவுகளில் சுமார் 40 விழுக்காடு வீணாவதாக ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

மட்டுமின்றி ஐக்கிய நாடுகள் மன்றத்தின் உணவு மற்றும் வேளான் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகில் உணவு பண்டங்களை வீணாக்கும் நாடுகளில் சவுதி அரேபியா முதலிடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதனையடுத்தே இனி சவுதி அரேபியாவில் வீண்டிக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இந்த சட்டமானது உணவு பதப்படுத்தும் நிலையம், உணவகங்கள் மற்றும் திருமண மண்டபம் உள்ளிட்டவைகளுக்கும் பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த சட்டத்தை மீறும் மேற்குறிப்பிட்ட நிறுவனங்களின் உரிமையை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு மற்றும் வேளாண் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

8 comments:

  1. ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.    
    (அல்குர்ஆன் : 7:31)
    www.tamililquran.com

    ReplyDelete
  2. இந்த சட்டம் அமுலுக்கு வருமாயின் அரச குடும்பமே அதிக அபராத தொகை செலுத்த வேண்டி ஏற்படலாம். இஸ்லாம் தடுத்த, சவுதி அரசு தடுத்துள்ள பெரும்பாலான விடையங்களை மீறுபவர்கள் சவுதி அரச குடும்பத்தினரே.

    ReplyDelete
  3. இஸ்லாம் வீண் விறையத்தை வண்மையாக கண்டித்திருப்பதை கவனத்திற் கொண்டு இவ்வளவு காலமும் செயற்படாதிருந்த சவுதி அரசு, உணவை வீண் விறையமாக்குவது பற்றி ஐநா சபையின் ஆய்வரிக்கை ஒன்றால் தமது நாட்டுக்கு அவப் பெயர் ஏற்பட்டிருப்பதை தடுக்க வேண்டும் என்பதற்காக உடனடியாக உணவு வீண் விறையமாவதை தடுக்க சட்டம் இயற்றி இருக்கின்றது. படைத்தவனின் சட்டம் எப்படி போனாலும் பரவாயில்லை. உலக தலைமைகளிடம் அவப் பெயர் உண்டாகி விட கூடாது என்பதே குறிக்கோளாய் உள்ளது.

    ReplyDelete
  4. Reward will be as per the intention...

    Allah knows their intention.. He is the one to reward them and us

    ReplyDelete
  5. Saudi does not have any ethical or moral principle in spending and food habits..
    They eat beyond Islamic ethics ..
    They waste food as no other community..
    They waste money as no other community does.
    Why because..
    Free money..
    Oil.money .

    ReplyDelete
  6. Saudi அரசாங்கம் உலக முஸ்லிம் சமுகத்திற்கு கிடைத்த சாபக்கேடு.

    ReplyDelete

Powered by Blogger.