Header Ads



முஸ்லிம் அரசியல்வாதிகள், முனாபிக் அரசியல் செய்யவில்லை - பைஸருக்கு பதிலடி

மாகாண சபைத் தேர்­தலை புதிய முறையில் நடத்­து­வதன் மூலம் சிறு­பான்மை மக்­களின் பிர­தி­நி­தித்­துவம் ஐம்­பது வீதத்­தினால் குறை­வ­டையும் வாயுப்­புக்கள் காணப்­ப­டு­கின்­றன.  புதிய முறையில் காணப்­படும் இடர்­களை நடை­பெற்று முடிந்த உள்­ளூ­ராட்சி தேர்­தலில் அனு­பவ ரீதி­யாகக் கண்டோம். எனவே மாகாண சபை தேர்­தலைப் பழைய முறைப்­படி நடாத்­து­வதே மிகவும் பொருத்­த­மா­கு­மென்று   அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் உப­த­லை­வரும் முன்னாள் தேசி­யப்­பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.எச்.எம். நவவி தெரி­வித்தார்.

மாகாண சபை தேர்தல் தொடர்­பாக மாகாண சபைகள் , உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைஸர் முஸ்­தபா ஊட­கங்­க­ளுக்கு வழங்­கி­யுள்ள செய்தி தொடர்­பாக விடி­வெள்­ளிக்கு விளக்­க­ம­ளித்­த­போதே நவவி மேற்­கூ­றிய தக­வல்­களைத் தெரி­வித்தார்.

தொடர்ந்து விளக்­க­ம­ளித்த அவர்,

மாகாண சபைகள் தேர்தல்  தொடர்­பான புதிய சட்டம்   பாரா­ளு­மன்­றத்தில்   சமர்ப்­பிக்­கப்­பட்ட போது நானும் எம்.பீ.யாக இருந்தேன். மாகாண சபை தேர்­தலை புதிய முறையில் நடாத்­து­வது தொடர்­பான சட்­ட­மூலம்   அவ­ச­ர­மாகப்  பாரா­ளு­மன்­றத்தில்  சமர்ப்­பிக்­கப்­பட்­டது. குறித்த தினம் நண்­ப­க­லுக்குப் பின்­னர்தான் இது தொடர்­பாக தகவல் கிடைத்­தது.

மாகாண சபை தேர்தல்  புதிய முறையில் சிறு­பான்­மை­யி­ன­ருக்குப் பாதிப்­பி­ருப்­ப­தாகத் தெரிந்து கொண்ட நாம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், எனைய தமிழ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இந்த விடயம் தொடர்­பாக கலந்­து­ரை­யாடல்  ஒன்றில் உட­ன­டி­யாக ஈடு­பட்டோம். சிறு­பான்­மை­யி­ன­ருக்கு பாதிப்­பேற்­படும் ஒரு தேர்தல் முறை­யாக இது அமையும் என்ற முடி­விற்கு வந்தோம்.

மாகாண சபை தேர்­த­லுக்கு புதிய முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட பின்னர் பாரா­ளு­மன்ற தேர்­த­லுக்கும் இந்தப் புதிய முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும். இதன் கார­ண­மாக தற்­போது பாரா­ளு­மன்­றத்­தி­லுள்ள 21 முஸ்லிம்  எம்.பீ.க்களின் தொகை 9 ஆகக் குறை­வ­டையும் வாய்ப்­புள்­ளது. அதே­வேளை மலை­நாட்டு தமிழ் மக்­க­ளுக்கு  ஒரே­யொரு எம்.பீ.யே கிடைக்கும்.  மாகாண சபை­யிலும்  சிறு­பான்மை உறுப்­பி­னர்­களின் தொகை    50 வீதம்  குறை­வ­டையும் வாய்ப்பும் உள்­ளது என்ற கார­ணங்­க­ளினால் இந்தப் புதிய தேர்தல் முறையை எதிர்ப்­ப­தாகத் தீர்­மா­னித்தோம்.

அதன் பின்னர் பிர­தமர் அலு­வ­ல­கத்தில் நாம் அனை­வரும் பிர­த­மரை சந்­தித்தோம். அந்த சந்­தர்ப்­பத்தில் ஜனா­தி­பதி அமெ­ரிக்­காவில் இருந்தார். பின்னர் ஜனா­தி­ப­தி­யு­டனும் கலந்­து­ரை­யாடி தேசியப் பட்­டியல் மூலம் தெரிவு செயப்­படும்  முறையை 40 வீதத்­தி­லி­ருந்து   50 வீத­மாக  மாற்­று­வது தொடர்­பாக கலந்­து­ரை­யா­டினோம். மாற்­றங்கள் தேவைப்­படின் அது தொடர்­பாகக் கலந்­து­ரை­யா­ட­லா­மென்று பிர­தமர் தெரி­வித்தார்.

இரவு 9 மணி ஆகிய நிலையில் நாம் அர­சுடன் இருப்­பதன் கார­ண­மா­கவும் அர­சிற்கு ஆத­ர­வ­ளிக்க வேண்­டு­மென்ற நோக்­கிலும் விருப்­ப­மில்­லாது இருப்­பினும் தேவைப்­படின் மாற்­றங்­களை செய்­து­கொள்ள முடி­யு­மென்ற நம்­பிக்­கை­யிலும்   இந்தப் புதிய முறைக்கு நாம் ஆத­ரவு வழங்­கினோம். 

இந்தப் புதிய தேர்தல் முறையை நடை­பெற்று முடிந்த உள்­ளூ­ராட்சி தேர்­தலில் கண்­டு­கொண்டோம். தேர்­த­லுக்­காக இரண்டு மாதங்கள் கஷ்­டப்­பட்டு தேர்­தலின் பின்னர் உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கு உறுப்­பி­னர்­களை நிய­மிக்க மேலும் ஒரு மாதம் கஷ்­டப்­பட்டோம். இந்தப் புதிய முறை­யினால் தோல்­வி­ய­டைந்த கட்சி ஆளும் கட்­சி­யா­கி­யுள்­ளது.

கற்­பிட்டி பிர­தேச சபையை நோக்­கினால் ஐ.தே. கட்சி வெற்றி பெற்­றாலும்  அவர்­களால் ஆளும் கட்­சி­யாக வர­மு­டி­யாது போனது. புத்­தளம் நகர சபையை நோக்கின் ஐ.தே. கட்சி 600 வாக்­கு­களால் வெற்­றி­பெற்றும் எமக்கு நகர சபை தலைவர் கிடைக்காது   போனது. அதேவேளை எல்லை நிர்ணயம் தொடர்பிலும் எமக்குப் பாதிப்புக்கள் காணப்படுகின்றன.  எனவே, இதற்கெல்லாம் நாம் ஒத்துக்கொண்டால் சிறுபான்மை பிரதிநிதித்துவத்திற்கு பாதிப்புக்கள் ஏற்படும். அமைச்சர் கூறியது போன்று நாம் முனாபிக் அரசியல் செய்யவில்லை என்றும் நவவி தெரிவித்தார்.   

1 comment:

  1. நவ்வி இங்கு சொல்லுவது 100% பொய்.

    அரசாங்கத்தில் தொங்கிகொண்டு, பதவிகளையும் சலுகைகளையும் அனுபவிக்க வேண்டுமாயின், ரணில்/மைதிரி சொல்லுவத்கு எல்லாம் ஆமாம் போட்டு தான் ஆக வேண்டும், வேறு வழி இல்லை.

    இந்த புதிய தேர்தலுக்கு ஆதரவளிக்குமாறு ரணில் கட்டளை இட்டார், மறுத்தால் பதவிகள் பறிபோய்விடும் என்பதே உண்மை.

    ReplyDelete

Powered by Blogger.