ராஜினாமா தொடர்பில், நான் பெருமை கொள்கின்றேன் - விஜயகலா வெளியிட்டுள்ள அறிக்கை
வடக்கில் மக்களின் துன்பங்களையும் துயரங்களையும் வெளிக்கொண்டுவரும் வகையிலேயே நான் கருத்துத் தெரிவித்திருந்தேன். அத்தகைய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமையால் கட்சியின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியும், மக்களுக்காகவும் எனது அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளேன் என முன்னாள் சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கில் குறிப்பாக யாழ்.குடாநாட்டில் வன்முறைகளும் குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளன.
ஆறு வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 59 வயதான வயோதிபப் பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் வீட்டில் கொள்ளையும் இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
போதைவஸ்து பாவனையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் மக்களின் துன்பங்களைத் தாங்கமுடியாது புலிகளின் காலத்தை நினைவூட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
ஆறு வயதுச் சிறுமியின் படுகொலை உட்பட வன்முறைகள் குடாநாட்டில் அதிகரித்து வருவதனால் மக்கள் அச்சத்தின் மத்தியில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் நிம்மதியின்றி வாழ்கின்றனர்.
இந்த நிலையில் மக்களின் துன்பங்களை வெளிக்கொண்டு வர வேண்டியது அவர்களது பிரதிநிதியான எனது கடமையாகும். இதனால்தான் மக்களின் துன்பங்களை வெளிக்கொண்டு வரும் வகையில் எனது கருத்தினை தெரிவித்திருந்தேன்.
மக்களின் துன்ப துயரங்களை பறைசாற்றாது மக்களின் பிரதிநிதியாக இருக்க முடியாது. இதனால்தான் வடபகுதி மக்களின் துன்பங்களை எடுத்துக்கூறும் வகையில் உரையாற்றியிருந்தேன்.
இந்தக் கருத்து தென்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமையால் இவ்விடயம் தொடர்பில் கட்சித்தலைமைக்கு விளக்கம் அளித்துள்ளேன்.
கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமரும் கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க அவர்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தபோது என்னுடன் தொடர்புகொண்டு எனது கருத்துக் குறித்து கலந்துரையாடினார்.
இதன்போது எனது நிலைப்பாட்டினை அவருக்கு விளக்கிக் கூறினேன். எனது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமையால் வேண்டுமானால் அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்வதற்கு நான் தயாராகவுள்ளதாக பிரதமரிடம் நான் எடுத்துக்கூறினேன். ஆனால் அதனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதன் பின்னர் கொழும்பு திரும்பிய நான் புதன்கிழமை மாலை பிரதமரைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன் வடக்கில் குறிப்பாக குடாநாட்டில் இடம்பெற்று வரும் போதைப்பொருள் பாவனை, வன்முறைகள், படுகொலைகள் தொடர்பில் எடுத்துக்கூறி மக்களின் துன்பங்களைப் பொறுக்க முடியாமையால் தான் நான் உரையாற்றியதாக விளக்கமளித்தேன்.
தற்போது எனது உரை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமையால் கட்சியின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தற்காலிகமாக அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதற்கு நான் தயார் என்று பிரதமரிடம் எடுத்துக் கூறினேன்.
இதற்கிணங்கவே நான் எனது அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்துள்ளேன். என்னைத் தெரிவுசெய்த மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வர வேண்டியது அவசியமானதாகும்.
மக்கள் துன்பத்திலும் துயரத்திலும் இருக்கின்றபோது நாம் எதனையும் செய்யாது வேடிக்கை பார்க்க முடியாது. இதனால் தான் மக்களின் துன்பங்களில் எடுத்துக்கூற நான் முயன்றேன்.
இதனால் தென்பகுதியில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளதனால் எனது அமைச்சுப் பதவியினை மக்களுக்காக மகிழ்ச்சியுடன் இராஜினாமாச் செய்துள்ளேன்.
எனது மக்களுக்காக குரல் எழுப்பியமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பிலான எத்தகைய விசாரணைகளையும் எதிர்கொள்வதற்கு நான் தயாராக இருக்கின்றேன்.
வடக்கு மக்கள் எம்மை தமது பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவும் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்காகவுமே தெரிவுசெய்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் துன்பப்படும்போது நாம் பேசாதிருக்க முடியாது.
வடக்கில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை மற்றும் வன்முறைகள் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தி மக்கள் அச்சமின்றி அமைதியாக வாழ்வதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்.
அவ்வாறான சூழல் ஏற்படுவதற்கு அரசாங்கமானது உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆறு வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்டமை போன்ற சம்பவங்கள் இனிமேலும் தொடரக்கூடாது.
மக்களுக்காக அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளமை தொடர்பில் நான் பெருமை கொள்கின்றேன் என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Hello Wijeyakala, You will be appointed as a Minister of ‘mannennai’ supplies to Tamil terrorists.
ReplyDeleteHello Sampanthan tna, Wjeyakala is representing Tamil people and she expressed the situation of tamil people in northern province. You must comment carefully when you write something. Do not hurt Tamil people in your comment and it will bring more division in the divided communities.
ReplyDeleteTHERE IS NO ROOM IN SRI LANKA, TO TALK IN SUPPORT OF TAMIL TERRORISTS.
ReplyDeleteWIJEYAKALA'S SPEECH IS AGAINST THE LAW OF SRI LANKA.
SHE SHOULD BE BEHIND BARS.
it is ok if u bring out the problems of people, but y u linked LTTE...your justification is wrong. and how can u indicate the LTTE as a example for low and order.
ReplyDeleteராஜினாமா தொடர்பில் பெருமை கொள்கிறேன் - விஜயகலா.
ReplyDeleteதமிழ்ப் பயங்கரவாதிகள் மீண்டும் வரவேண்டும் என்று பகிரங்கமாகச் சொல்லி பெருமை அடைந்த விஜயகலா.
பின்னால் குத்துக் கரணம் செய்து, நான் அப்படிச் சொல்லவில்லை என்று சொல்லலிப் பெருமை அடைந்த விஜயகலா,
பின்னர் டென்ஷனில் சொன்னேன் என்று பெருமை அடித்த விஜயகலா.
சிங்கள பேரினவாதிகள் நாடு பூராகவும் உறுமியபின், பயந்து நடுங்கி, ராஜினாமை கையளித்து விட்டு பெருமையுடன் வீராப்பு பேசும் உங்களின் பெருமையை என்னவென்று சொல்ல?
தமிழ்ப் பயங்கரவாதிகளின் தத்துவங்கள், ஒரு போதும் சிங்களவனின் காதில் ஏறாது.
கொஞ்சமாவது அடக்கி வாசித்திருந்தால், இப்போதும் நீங்கள்தான் இராஜாங்க அமைச்சர்.
காலம் செய்த கோலம்.
இப்பொழுது புரிகிறது யார் போதைவஸ்து வினியோகிஸ்தர்கள் என்பது
ReplyDelete@Sampanthan TNA,
ReplyDeleteஅடக்கி வாசிப்பது எப்பிடி என்று முதுகிலே அடிமை சாசனம் எழுதப்பட்ட முஸ்லீம் அமைச்சர்களிடம் விஜயகலா பாடம் எடுக்க வேண்டும்
எதிலும் எங்கும், சிலவற்றுக்கு அடங்கித்தான் போகணும்.
ReplyDeleteஅடக்கமும் ஒரு மனிதப் பண்புகளில் ஒன்று.
இலங்கையின் அரசியலமைப்பிற்கு ஏற்ப நடப்பேன் என்று சத்திய பிரமாணம் செய்து, இராஜாங்க அமைச்சராகியபின், தமிழ்ப் பயங்கரவாதிகள் மீண்டும் வர வேண்டும் என்று சொல்வது, இலங்கையின் அரசியலமைப்பிற்கு ஒவ்வாத மீறும் செயல்.
தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்.
அடிமை சாசனம் என்ன என்பதை விளங்கியபடியால்தான், தற்போது விஜயகலா தான் உளறியது குற்றம் என்று ஒத்துக் கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே அடக்கி வாசித்திருந்தால், தற்போது அடங்கி, நடுங்கி முடங்கி கொண்டிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.
எதிலும் எங்கும், சிலவற்றுக்கு அடங்கித்தான் போகணும்.
ReplyDeleteஅடக்கமும் ஒரு மனிதப் பண்புகளில் ஒன்று.
இலங்கையின் அரசியலமைப்பிற்கு ஏற்ப நடப்பேன் என்று சத்திய பிரமாணம் செய்து, இராஜாங்க அமைச்சராகியபின், தமிழ்ப் பயங்கரவாதிகள் மீண்டும் வர வேண்டும் என்று சொல்வது, இலங்கையின் அரசியலமைப்பிற்கு ஒவ்வாத மீறும் செயல்.
தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்.
அடிமை சாசனம் என்ன என்பதை விளங்கியபடியால்தான், தற்போது விஜயகலா தான் உளறியது குற்றம் என்று ஒத்துக் கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே அடக்கி வாசித்திருந்தால், தற்போது அடங்கி, நடுங்கி முடங்கி கொண்டிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.
நிதானத்தை இழந்து சர்ச்சைக்குரிய வார்த்தைகளை வெளியே விட்டது தமிழ் (இந்து) அமைச்சர். அதற்கு எதிராக கொதித்து எழுந்து பெரும் கோஷங்களை செய்து வருவது தெற்கில் உள்ள சிங்கள இனவாதம். ஏனப்பா இதற்குள்ளே முஸ்லிமை இழுத்து கொண்டு வந்து கலாய்க்க பார்க்கின்றீர் ???
ReplyDeleteWhat’s your problem Man ???
ReplyDeleteWijayakala is a Tamil (Hindu) Politician. The people who are shouting against Wiyayakala are the Singhalies (Buddhists)
What are you in need to bring here the Muslims ???