Header Ads



கூகுள் பலூன் திட்டத்தை, புரிந்துகொள்ளாத ஜனாதிபதி

கூகுள் பலூன் திட்டம்   4-ஜீ வலையமைப்பை விரிவுபடுத்தும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டதே ஒழிய ''வை -பை'' வலயத்தை அமைக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட ஒன்றல்ல என  தொலைத் தொடர்புகள் , டிஜிடல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வெளிநாட்டு தொழில்வாய்ப்புகள் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று -17- வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின போது ஜே.வி.பி. உறுப்பினர் பிமல் ரத்நாயக்க கூகுள் பலூன் கருத்திட்டம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் பதிலளிக்கையில்,

கூகுள் பலூனினுடாக வைபையை கொடுக்க முடியாது. அதன் மூலம் 4 ஜீ தொழில்நுட்பத்தை வழங்குவதே அதன் அடிப்படை நோக்கம். வை பை வலயம் அதனுடன் தொடர்புடைய வேலைத்திட்டம் அல்ல . அது வேறு வேலைத்திட்டம். கூகுள் நிறுவனத்தினால் எமக்கு இலவசமாக வழங்கிய திட்டமே இது. இதில் அனுமதிப் பத்திரம் தொடர்பாக பிரச்சினை இருக்கின்றது. 

எவ்வாறாயினும் எமக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து அனுமதி கிடைக்கும் பட்சத்தில் அதனை நிறைவேற்ற முடியும். இந்த விவகரம் குறித்து கலந்துரையாட நாளை மீண்டும் நான் ஜெனிவா செல்கின்றேன். 

இத் திட்டம் தொடர்பாக  ஒரு சில நெருக்கடிகள் எமக்கு உள்ளது. இவை இலங்கை தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் கலந்துரையாடி தீர்க்க வேண்டிய பிரச்சினைகளாகும். இந்த திட்டத்தை ஜனாதிபதி முதலில் ஏற்றுகொள்ளவில்லை. அதற்கு இந்த பலூன் தொடர்பில் ஜனாதிபதி சரியான தெளிவில் இருக்கதமையே காரணமாகும். எனினும் இப்போது அவர் விளங்கிக்கொண்டுள்ளார். எமக்கு அங்கீகாரமும் கொடுத்துள்ளார் என்றார்.

No comments

Powered by Blogger.