Header Ads



நிகாபுடன் போராட்டம் நடாத்தும் பெண்கள், ஷரீஅத்திற்கு மாற்றமான விடயங்களையே வேண்டி நிற்கின்றார்கள்...

முஸ்லிம் தனியார் சட்ட திருத்த விடயத்தில் சட்டத்தரணி ஸலீம் மர்ஸுப் அவர்களின் தலைமையில் ஒரு அறிக்கையும், ஜனாதிபதி சட்டத்தரணி தலைமையில் ஒரு அறிக்கையும் வேறு வேறாக சமர்பிக்கப்பட்டுள்ளன. 

இதில் ஸலீம் மர்ஸுப் அவர்களினால் வழங்கப்பட்டுள்ள அறிக்கைக்கு சார்பாக இப்பெண்கள் கூட்டம் வக்காளத்து பிடிக்கின்றார்கள். காரணம் அவர்களின் கோரிக்கைக்கு சார்பாக ஸலீம் மர்ஸுப் அவர்களின் அறிக்கை அமைந்துள்ளது என்ற காரணத்தினாலாகும். அவ்வறிக்கையில் முஸ்லிம் சமூகத்திற்கு அழிவை ஏற்படுத்தும் வகையில் மார்க்கத்திற்கு முரணான விடயங்கள் இருப்பதைக் காண்கின்றோம்.

உதாரணமாக தலாக் சம்பந்தமான  விடயம்: தலாக் என்பது வாயினால் மொழிந்து விட்டால்; மாத்திரம் உண்டாகாது. மாறாக காழி முன்னிலையில் பதிவு செய்வதன் மூலம்தான் உண்டாகும் என்று ஒரு சட்டத்தை புதிதாக அவர்கள் தனது அறிக்கையில் உள்வவாங்கியிருக்கின்றார்கள். 

இது குர்ஆன் சுன்னாவிற்கு முற்றாக மாற்றமான ஒரு கருத்தாகும். கணவன் தனது மனைவிக்கு அவன் எங்கிருந்து இந்த வார்த்தையைக் கூறினாலும் தலாக் உண்டாகும் என்பது மார்க்கச் சட்டமாகும்.

மேலும் பெண்கள் காழியாக நியமிக்கப்படல் வேண்டும் என அவர்களின் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.   பெண்ணுக்கு வலீ இல்லாத போது காழியே வலியாக நிற்க வேண்டும். வலியாக வருபவர் கட்டாயம்  ஒரு ஆணாக இருத்தல் வேண்டும் என்பது நிபந்தனையாகும். ஆனால் பெண்கள் காழியாக நியமிக்கப்பட்டால் வலீயாக நிற்கும் விடயத்தில் மார்க்கப் பிரச்சினை உருவாகின்றது. இது போன்ற மார்க்க சட்டம் தொடர்பான பல சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படுகின்றது.

பஸ்ஹ் விடயத்தில் மதாஹ் வழங்கப்படல் வேண்டும் என்று அவர்களது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் பெண்களது திருமண வயதெல்லை விடயத்திலும் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன. இவைகள் மார்க்கத்தில் இல்லாத விடயங்களாகும்.  

ஜனாதிபதி சட்டத்தரணிகள் தலைமையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை மிகவும் சுருக்கமாகவும் விளக்கமாகவும் இருப்பதைக் காண்கின்றோம். அவ்வறிக்கை பெண்கள் தரப்பால் விடப்படுகின்ற அனைத்து கோரிக்கைகளுக்கும் ஷரீஅத்திற்கு முரணில்லாத வகையில் அழகான வழிகாட்டல்களுடன் அமைந்துள்ளது. 

பெண்களை காழிமார்களாக நியமிக்கும் விடயத்தில் அவர்களை காழியாக நியமிக்காமல்   காழிநீதி மன்றத்தில் ஜுரியாக நியமித்தல், பஸ்ஹ்க்கு பதிலாக ஹுல் என்ற சட்டத்தை கையாழுதல், திருமணப்பதிவு மற்றும் பலதார மணம் விடயங்களில் கடுமையான சட்டங்களை அமுல் படுத்தல் போன்ற விடயங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.

எனவே இவ்வாறு மார்க்கத்திற்கு முரணாக அமைந்திருக்கும் சட்டத்தரணி ஸலீம் மர்ஸுப் அவர்களின் அறிக்கைக்கு சார்பாக கிறிஸ்தவ பெண் ஒருவரின் தலைமையில் குறிப்பிட்ட விரல் விட்டு எண்ணக் கூடிய இப் பெண்கள் குழு ஒன்றுதிரழ்வதன் மர்மம்தான் என்ன? இவர்கள் கணவன் மார்களால் விடுபட்ட மூக்கனாங் கையிறு இல்லாத கூட்டமா?

போராட்டத்திற்காக நிகாப் அணிந்து வந்துள்ள இவர்கள் இதற்கு முன்னர் வழமையில் நிகாப் அணிகின்றவர்களா? அல்லது தொடர்ந்தும் அணியக் கூடியவர்களா? ஏன் இவ்வாறு இஸ்லாத்தையும் அதன் கலாச்சாரத்தையும் கொச்சைப்படுத்த  முயற்சிக்கின்றீர்களா? 

இவ்விடயத்தில் இலங்கை வாழ் முஸ்லிம்கள், பொறுப்புதாரிகள், இஸ்லாமிய அமைப்புகள் அசமந்தப் போக்கை தொடர்ந்தும் கையாழ்வது நல்ல விடயமாகாது. காலம் கடந்த பின் கவலைப்படுவதில் அர்த்தம் கிடையாது. 

மேலும் விரல் விட்டு எண்ணக் கூடிய இப்பெண்கள் கூட்டம் இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களதும் பிரதிநிதிகள் அல்ல. எனவே அவர்களின் கோரிக்கைக்கு மட்டும் கவனம் செலுத்தி அறிக்கையில் மாற்றம் கொண்டு வருவது அனுமதிக்க முடியாத ஒரு விடயம் என்பதையும் ஆணித்தரமாகக் கூறிக் கொள்கின்றேன்.

தல்துவை பவாஸ்

13 comments:

  1. ஜி.எஸ்.பி. சலுகையை தருவோம், முஸ்லீம் சட்டத்தில் ஒரு பெண் மணமுடிப்பதாக இருந்தால் 18 வயதாக இருக்க வேண்டும் என்று, கிறிஸ்தவ பயங்கரவாத நாடுகளான ஐரோப்பிய யூனியனும், கிறிஸ்தவ யூத பயங்கரவாதிகளின் தலைமையகமான ஐ.நாவும் வரிந்து கட்டிக்கொண்டு நின்றதை நாம் பார்த்தோம்.

    ஜி.எஸ்.பி. சலுகைக்கும், ஒரு பெண் மணமுடிக்கும் வயதிற்கும் என்ன சம்பந்தம்?

    கொஞ்சம் விட்டால், யார் யாரைக் கலியாணம் செய்ய வேண்டும் என்பதையும் யூத, கிறிஸ்தவ தலைமையகமான ஐ.நா தீர்மானம் எடுக்கும் போலத் தெரிகிறது.

    இப்போது, ஐ.நாவிற்கும் பயங்கரவாத நாடுகளான ஐரோப்பிய யூனியனுக்கும் வால் பிடிக்கும், ஒரு கிறிஸ்தவ பெண்ணின் தலைமையில் நமது கேடு கெட்ட முஸ்லீம் பெண்கள் குழுமி இருக்கிறார்கள்.

    சும்மா சொல்லக் கூடாது - கொஞ்ச நாளைக்குப் பின், இப்படி சில்லறைத்ததனமாக செயல்படும் நமது முஸ்லீம் பெண்களுக்கும் கிறிஸ்தவ பயங்கவாத நாடொன்றில் நிரந்தர வதிவிடம் கிடைக்கலாம்.

    அவர்களின் THINK TANK ஆகவும் இந்தப் பேதைகளை மாற்றுவார்கள்.

    இப்படி இஸ்லாத்திற்கு எதிராக உலக ஆதாயத்திற்கு நாட்டாமை செய்யும் முஸ்லிம்களை வைத்தே, இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாத்தை அடக்கி வருகிறார்கள் - அன்றில் இருந்து இன்று வரை.

    முஸ்லிம்கள் எப்போதும் விழிப்பாக இருக்க வேண்டும்.

    ReplyDelete
  2. Need to check whether their husbands are males???

    ReplyDelete
  3. பேச்சுவார்த்தை (மஷூரா) மூலம் எந்தவொரு விடயத்தையும் கலந்துரையாடி தீர்மானிப்பதே இஸ்லாம் காட்டித்தந்த வழிமுறையாகும். அதைவிடுத்து பாதையோரங்களில் நின்று போராட்டம் நடத்துவது அல்லது பத்திரிகையாளர் சந்திப்புக்களை நடாத்துவது மேற்கத்திய (Western) வழிமுறைகளேயன்றி, இஸ்லாமிய வழிமுறையல்ல. வேறு ‘கரம்’ ஒன்றினால் இயக்கப்படும் இவர்கள், அல்லாஹ்வின் ஷரிஆ சட்டத்திற்கே சவால்விடும் இவர்கள், ஷரிஆ அடிப்படையில் நிகாப் அணியவில்லை, ஆளடையாளம் தொியாமல் இருக்கவே இந்த வேசம். இவர்கள் பட்டம், பதவிக்காக எதைவேண்டுமானாலும் செய்வார்கள்.

    ReplyDelete
  4. The present marriage registration certificate has a cage to specify the dowry obtained. what part of sharia is that. Similarly, it's very clear that the girl's consent is must for a marriage in Islam, does any of our marriage certificates has a place to verify that.

    Please don't confuse yourselves and the rest of the community by mixing up sharia and MMDA.

    Did we really give a listening ears to the concerns of our ladies with regard to MMDA. Even ACJU and the rest us, are we prepared to listen to it with a heart and mind to actually consider the root causes of those request and attend to give solutions. Criticizing those who raise their voice through other mediums (press release, press meet etc) is not the way to arrive at a solution.

    It should be noted very clearly that MMDA as not sharia and part of it is not inline with the Sharia even. Remember ,those who glorify the MMDA are glorifying what is conflicting with Sharia also.

    Covering the faces can be due to the concerns on their personal safety also. It is always possible for some lunatic to take up the task of punishing them instead of community resolving the problems.

    I'm not saying they are entirely correct, however you and me are responsible for compelling them to come to roads to seek a change.

    ReplyDelete
  5. ஒரு முஸ்லீம் முதலில் நாகரிகமானவராக இருக்கவேண்டும். இது நடத்தையில்,பேச்சில்,எழுத்தில் எல்லா விடயத்திலும் இருக்கவேண்டும். நேரடியாக இஸ்லாமிய பிரசாரம் செய்ய முடியாத சூழ்நிலையில் வாழும் ஒரு முஸ்லீம் தன் நடத்தையின் மூலம் மற்றவர்களைக்கவர்ந்து தஃவாசெய்ய வேண்டும்.
    ஒரு முஸ்லீமுக்கு இருக்கவேண்டியமேற்படி அடிப்படையைக் கூட கட்டுரையாளர் மீறியுள்ளார். பின்பு அவரின் கருத்து பற்றி என்ன கூறவேண்டும்.மேலும் comments செய்பவர்கள் பலரிடமும் இப் பிரச்சினை உள்ளதும் மிகவும் துரதிஸ்டமானது. அப் பெண்மணிகள் உங்களின் மனைவியை,தாயை, சகோதரியை நீங்கள் பாவிக்கும் வார்த்தைகள் கொண்டு பேசமாட்டார்கள் என நினைக்கிறேன் காரணம் அவர்கள் மிகவும் விஷாலமாக யோசிக்கின்றார்கள். உலகறிவில்லாத மார்க்க அறிவும் மார்க அறிவில்லாத உலகறிவும் வீணானது. இந்த விடயத்தினை நிவர்த்தி செய்யக்கூடிய நிறுவனமாக ஜாமிய்யவைக் காண்கின்றேன். இப்பிரச்சினைக்கு முக்கிய காரணத்தில் ஒரு பகுதியினர் உலகறிவில்லாத மார்ரக் வாதிகளும் அவர்களை விமர்சித்தால் நாம் நரகம்போய் விடுவோம் என அஞ்சுபவர்களுமாகும்.
    2. கட்டுரையாளருக்கு ஜனாதிபதி சட்டத்தரணி எனும் ஒரு முஸ்லீம் சொல்லும் கருத்துடன் ஒத்துப்போக முடியமென்றால் சலீம் மர்சூப் எனும் ஒரு முஸ்லீம் சொல்லும் கருத்துடன் ஒத்துப்போக இப்பெண்களுக்கு ஏன் உரிமை இல்லை ஆண் ஆதிக்கமா?. கருத்துவேறுபாடு என்பது இஸ்லாமிய வரலாறுநெடுகிலும் பதிவாகின்றது. அவை மிக கவனமாகக்கையாளப்பட்டுள்ளது. குருடன் யனை பார்த்த கதையாட்டம் விமர்சனங்கள் வந்துவிட்டது. பரவாயில்லை நாகரீகமாவது இருக்கவேண்டாமா?
    3. காதி நீதிமன்றங்களுக்கு கட்டாயம் ஆண்களுடன் பெண்களும் நியமிக்கப்படல் வேண்டும். ஆண்கள் அந்தரங்க விடயங்களில் பெண்களிடம் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொள்ளும் விடயங்ளை ஒரு ஆண் காதியிடம் கூற முடியாமல் போகும் சந்தர்ப்பங்களில் உண்மையான காரணங்ளைக் கூற முடியாமல் ஒரு பெண் குற்றவாழியாக பழி சுமக்கும் நிலை ஏற்படும். போதை வஷ்து வியாபாரிகளுக்கு மரண தண்டனை விதிப்பது சரியா? தவறா? என்பதை அறிவிப்பதற்கு கூட்டம் போடவேண்டும் என்பவர்கள் மற்றும் கண்ட பிறையை பொய்யாக்கியவர்களுக் கெல்லாம் இது எங்கே புரியப்போகின்றது.
    4. ஒரு கணவன் எங்கிருந்தாவது தலாக் என்று கூறுவதன் மூலம் மனைவியை விவாகரத்து செய்ய
    முடியுமாயின் குடிகாரன், ஆத்திரக்காரன், சந்தர்ப்பவாதிகள் ஜீவிக்கும் இக்காலத்தில் குடும்பக்கட்மைப்பு சீரழிந்து சமூகம் அழிந்துபோய் விடும். எனவே இக்கருத்தானது இஸ்லாம் சரியாகப் புரிந்துகொள்ளப்படாமல் கூறப்படல்வேண்டும் இல்லை அதுதான் சரியென்று வாதிட வருவீராயின் இஸ்லாம் மனித வாழ்வுக்குபொருத்தமற்றது என கூறப்படல்வேண்டும்.

    இன்னும் எழுதவேண்டும் வரையறைகள் தடுக்கின்றது. வாசித்து இரசித்த ஒன்றை இணைப்புச்செய்வதுடன் முடிக்கினறேன்
    அஷ்ஷெய்க் TM. முபாரிஸ் ரஸாதி
    அது ஹராம் இது ஹராம்
    அவன் செய்தது பித்அத்
    இவன் செய்தது ஷிர்க்
    அந்த விளையாட்டு ஹராம்
    இந்த உடுப்பு ஹராம்
    பொம்புளைகள் என்றலே பித்னா
    பொம்புளைகள் வெளியில் செல்வது ஹராம்
    முகம் மூடுவது ஹராம்
    பெண்கள் டியூசன்போவது ஹராம்
    தாடியில்லாட்டி தீனில்லாதவன்
    தொப்பியல்லாதவன்தௌஹீத் காரன்
    அவன் பெருமைக்காரன்
    இவன்பொறமைக்காரன்

    நாங்கள் அழைப்பாளர்களா?
    அல்லது நீதிபதிகளா?

    ReplyDelete
  6. ACJU உடனடியாக செயற்பட்டு இப்பெண்களின் கணவன் மாரை அல்லது பாதுகாவலர்களை வரவளைத்து உரிய விசாரணைகளை மேற்கொண்டு நடவரக்கைகளை முன்னெடுக்க வேண்டும் ஏனெனில் இந்த நாட்டில் என்ன உலகிலேயே இஸ்லாம் / முஸ்லிம்கள் என்பது தனித்துவமானது / தனித்துவமானவர்கள் இதனை எவராலும் மறுதலிக்க முடியாது.

    ஏனைய மதங்களைப்போல் காலத்துக்கேற்றவாறும் நாட்டுக்கேற்றவாறும் ஆட்களுக்கேற்றவாறும் விரும்பியவாறு மாற்றிர் கொள்ளும் சட்டதிட்டமல்ல சரீஆ. ஆகவே இந்நாட்டு முஸ்லிம்களின் ஏகோபித்த தலைமைத்துவமும் மார்க்க வழிகாட்டல் நிறுவனமும் ACJU மட்டும் தான்.

    சலீம் மர்சுக் அல்ல எந்த கொம்பனாலும் ACJU வின் வழிகாட்டல்களுக்கப்பால் செயற்படுவதையும் அறிக்கைகள் சமர்ப்பிப்பதையும் மற்றும் இஸ்லாமியர்களுக்குரிய சட்டங்களை திருத்துவதையோ ஏற்றுக் கொள்ளவும் முடியாது அதற்கு இடமளிக்கவும் முடியாது.

    இன்று இந்த சிறு பெண்கள் கூட்டம் கண்ட கண்ட 2 Piece உடன் அலையும் சைத்தான்களின் ஆசை வார்தைகளுக்கும் சில்லறைகளுக்கும் அகப்பட்டு பெண் சுதந்திரம் என்ற பெயரில் இப்புனித சரீஆவுக்கு மாற்றமாக சட்டம் இயற்ற நினைப்பவர்கள் முனைபவர்கள் நாளை ஒரு நாள் இஸ்லாமிய பெண்கள் சாராய பாரில் வேலை செய்யலாம் ஆனால் குடிக்க தேவையில்லை, வேசித்தெருக்களை நிருவகிக்கலாம் ஆனால் வேசையாட தேவையில்லை , திருமணம் தேவையில்லை ஆனால் சேர்ந்து வாழலாம் (living together) என்றெல்லாம் எமது புனிதமான சரீஆ சட்டத்தை திருத்த முனையார் என்பதற்கு என்ன உத்தரவாதம். விளையும் பயிரை முளையிலே தெரியும் என்பர். ஆகவே இக் கூட்டம் எம்முடைய இஸ்லாமிய பெண்களை காக்க முனையவில்ல அழிக்க முனைகிறார்கள் என்பதே உண்மை எனவே இதை முளையிலேயே கிள்ளி விடுதல் நன்று.

    Therefore, Prompt Action to be taken by the ACJU in this regard witout any delay.

    ReplyDelete
  7. ஒரு முஸ்லீம் முதலில் நாகரிகமானவராக இருக்கவேண்டும். இது நடத்தையில்,பேச்சில்,எழுத்தில் எல்லா விடயத்திலும் இருக்கவேண்டும். நேரடியாக இஸ்லாமிய பிரசாரம் செய்ய முடியாத சூழ்நிலையில் வாழும் ஒரு முஸ்லீம் தன் நடத்தையின் மூலம் மற்றவர்களைக்கவர்ந்து தஃவாசெய்ய வேண்டும்.
    ஒரு முஸ்லீமுக்கு இருக்கவேண்டியமேற்படி அடிப்படையைக் கூட கட்டுரையாளர் மீறியுள்ளார். பின்பு அவரின் கருத்து பற்றி என்ன கூறவேண்டும்.மேலும் comments செய்பவர்கள் பலரிடமும் இப் பிரச்சினை உள்ளதும் மிகவும் துரதிஸ்டமானது. அப் பெண்மணிகள் உங்களின் மனைவியை,தாயை, சகோதரியை நீங்கள் பாவிக்கும் வார்த்தைகள் கொண்டு பேசமாட்டார்கள் என நினைக்கிறேன் காரணம் அவர்கள் மிகவும் விஷாலமாக யோசிக்கின்றார்கள். உலகறிவில்லாத மார்க்க அறிவும் மார்க அறிவில்லாத உலகறிவும் வீணானது. இந்த விடயத்தினை நிவர்த்தி செய்யக்கூடிய நிறுவனமாக ஜாமிய்யவைக் காண்கின்றேன். இப்பிரச்சினைக்கு முக்கிய காரணத்தில் ஒரு பகுதியினர் உலகறிவில்லாத மார்ரக் வாதிகளும் அவர்களை விமர்சித்தால் நாம் நரகம்போய் விடுவோம் என அஞ்சுபவர்களுமாகும்.
    2. கட்டுரையாளருக்கு ஜனாதிபதி சட்டத்தரணி எனும் ஒரு முஸ்லீம் சொல்லும் கருத்துடன் ஒத்துப்போக முடியமென்றால் சலீம் மர்சூப் எனும் ஒரு முஸ்லீம் சொல்லும் கருத்துடன் ஒத்துப்போக இப்பெண்களுக்கு ஏன் உரிமை இல்லை ஆண் ஆதிக்கமா?. கருத்துவேறுபாடு என்பது இஸ்லாமிய வரலாறுநெடுகிலும் பதிவாகின்றது. அவை மிக கவனமாகக்கையாளப்பட்டுள்ளது. குருடன் யனை பார்த்த கதையாட்டம் விமர்சனங்கள் வந்துவிட்டது. பரவாயில்லை நாகரீகமாவது இருக்கவேண்டாமா?
    3. காதி நீதிமன்றங்களுக்கு கட்டாயம் ஆண்களுடன் பெண்களும் நியமிக்கப்படல் வேண்டும். ஆண்கள் அந்தரங்க விடயங்களில் பெண்களிடம் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொள்ளும் விடயங்ளை ஒரு ஆண் காதியிடம் கூற முடியாமல் போகும் சந்தர்ப்பங்களில் உண்மையான காரணங்ளைக் கூற முடியாமல் ஒரு பெண் குற்றவாழியாக பழி சுமக்கும் நிலை ஏற்படும். போதை வஷ்து வியாபாரிகளுக்கு மரண தண்டனை விதிப்பது சரியா? தவறா? என்பதை அறிவிப்பதற்கு கூட்டம் போடவேண்டும் என்பவர்கள் மற்றும் கண்ட பிறையை பொய்யாக்கியவர்களுக் கெல்லாம் இது எங்கே புரியப்போகின்றது.
    4. ஒரு கணவன் எங்கிருந்தாவது தலாக் என்று கூறுவதன் மூலம் மனைவியை விவாகரத்து செய்ய
    முடியுமாயின் குடிகாரன், ஆத்திரக்காரன், சந்தர்ப்பவாதிகள் ஜீவிக்கும் இக்காலத்தில் குடும்பக்கட்மைப்பு சீரழிந்து சமூகம் அழிந்துபோய் விடும். எனவே இக்கருத்தானது இஸ்லாம் சரியாகப் புரிந்துகொள்ளப்படாமல் கூறப்படல்வேண்டும் இல்லை அதுதான் சரியென்று வாதிட வருவீராயின் இஸ்லாம் மனித வாழ்வுக்குபொருத்தமற்றது என கூறப்படல்வேண்டும்.

    இன்னும் எழுதவேண்டும் வரையறைகள் தடுக்கின்றது. வாசித்து இரசித்த ஒன்றை இணைப்புச்செய்வதுடன் முடிக்கினறேன்
    அஷ்ஷெய்க் TM. முபாரிஸ் ரஸாதி
    அது ஹராம் இது ஹராம்
    அவன் செய்தது பித்அத்
    இவன் செய்தது ஷிர்க்
    அந்த விளையாட்டு ஹராம்
    இந்த உடுப்பு ஹராம்
    பொம்புளைகள் என்றலே பித்னா
    பொம்புளைகள் வெளியில் செல்வது ஹராம்
    முகம் மூடுவது ஹராம்
    பெண்கள் டியூசன்போவது ஹராம்
    தாடியில்லாட்டி தீனில்லாதவன்
    தொப்பியல்லாதவன்தௌஹீத் காரன்
    அவன் பெருமைக்காரன்
    இவன்பொறமைக்காரன்

    நாங்கள் அழைப்பாளர்களா?
    அல்லது நீதிபதிகளா?

    ReplyDelete
  8. Current MMDA has no any issue but the implementation is the problem. We must establish the system to implement the act accurately. We don't need to amend the current act as there is no any need of change. The sharia or holy Quran does not change with time or area etc. The act was established considering the all the situations and without any deviation. Attempt to amendment is a conspiracy set up by enemies of Islam.

    ReplyDelete
  9. you cannot have a separate law for muslim according to their religion in sri lanka,,because it is one law for all citizens ,you may have a dress code but concerning marriage and divorce,and marrying age will upset the population statistics,if you want to follow strict kuran rules please go away and do it in a muslim majority country.thanks.

    ReplyDelete
  10. Iwaluhal kasukkaaha wendi koottadikkum koottaadihal...

    ReplyDelete
  11. Jayawarnam;

    You cannot say or interfere the matters of Sri Lankan Muslims. we do what we need mind it.

    ReplyDelete
  12. Separate law not only for the muslim community in Sri Lanka but also hindu and buddist community. Please study.

    ReplyDelete
  13. Jeyawarman, who are you in this country, the president or the prime minister? Why do you want to interfere into our matter? This is our own issue and we are fully capable of handlig this issue successfully. We have separate laws for Muslims in this country for centuries.They are constitutionally ensured laws thus no one can bring changes to them unless our leadership approves. It is entirely our own matter. So, you do not have the right poke your nose into this issue. We do not have the agenda to devide this country at arm point. Do you know how many millions jayawarmans run their lives by working in muslim countries? Do you know that the houses you live, the roads you use to travel, the fuel you use to run your vehicles are all donations of generous muslim nations. So,think if you can live without supports of Muslims? Be grateful and ashamed.

    ReplyDelete

Powered by Blogger.