தூக்கு தண்டனைக்கு எதிராக கட்டுரை எழுதி, முதல் பரிசு வென்ற சந்திரிக்கா
இலங்கையில் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ள மரண தண்டனைக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
எந்தவொரு நபருக்கும் மரண தண்டனை வழங்க, தானும் இறந்து போன தந்தையும் எதிர்ப்பு வெளியிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது பாடசாலை கல்வியின் போது தூக்கு தண்டனைக்கு எதிராக கட்டுரை எழுதி முதலாவது பரிசு வென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட மரண தண்டனை செயற்படுத்த வேண்டுமா என்ற கேள்வி தனக்கு எழுந்துள்ளதாக சந்திரிக்கா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதேவேளை எந்தவொரு தடை வந்தாலும், தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்திருந்தார்.
போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த ஜனாதிபதி இவ்வாறான நடைமுறையை அமுல்படுத்தியுள்ளார். இதற்கு பலரும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர். அவ்வாறு எதிராக செயற்படுவோர் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபட்டவர்களா என ஒருசில தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் மற்றும் சமகால ஜனாதிபதிகளின் மாறுபட்ட கருத்து மோதல்கள் கொழும்பு அரசியல் மட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Post a Comment