சிறைச்சாலைக்குள் பந்தை வீசிய, பெண்ணிற்கு ஆயுள் தண்டனை - கொழும்பு நீதிபதி அதிரடி
டென்னிஸ் பந்து ஒன்றிற்குள் ஹெரோயின் 3.15 கிராமை வைத்து வெலிகடை சிறைச்சாலைக்குள் உள்ள கைதி ஒருவருக்கு வீசிய குற்றத்திற்காக பெண்ணொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி ஷம்பா ஜானகி ராஜரத்ன ஆயுள் தண்டனை வழங்கி தீர்பளித்துள்ளார்.
பொரள்ள, சீவலி மாவத்தையை சேர்ந்த ஹிருனி அல்விஸ் எனும் 33 வயதுடைய திருமணமான பெண்ணிற்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதி சிறைச்சாலைக்குள் உள்ள கைதி ஒருவருக்கு டென்னிஸ் பந்திற்குள் ஹெரோயின் 3.15 கிராமை வைத்து வீசியதற்காக சட்டமா அதிபரினால் குறித்த பெண் மீது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
நீண்ட விசாரணைகளின் பின்னர் குறித்த பெண் எவ்வித சந்தேகமும் இன்றி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி ஷம்பா ஜானகி ராஜரத்ன தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் குற்றவாளியான குறித்த பெண்ணிற்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment