கல்முனை அஸ்ரப் வைத்தியசாலையில் இருந்து, ஊசி மருந்துகளை கடத்தியவர் பிடிபட்டார்
அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தீவிரசிகிச்சைப்பிரிவில் பயன்படுத்துகின்ற அரிதான மருந்துவகைகள் வைத்தியசாலைக்கு வெளியே வேறு நோக்கங்களுக்காக கொண்டுசெல்லப்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.
கல்முனை முதலாம் குறிச்சியினை சேர்ந்த ஒருவரிடம் குறித்த வைத்தியசாலையின் தீவிரசிகிச்சப்பிரிவில் கடமையிலிருந்த பொறுப்பான தாதி உத்தியோகத்தர், குறிப்பிட்ட ஊசி மருந்துகளை கையளித்ததை கடமையில் இருந்த தனியார் காவல் உத்தியோகத்தர் ஒருவர் கையும் மெய்யுமாக பிடித்துள்ளார்.
விடயம் போலீசார் வரை சென்று சில உயர்பதவியில் இருக்கும் அதிகாரிகளின் உதவியோடு மூடி மறைக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் பற்றிய விவகாரத்தில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடமைபுரியும் சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவர் தலையிட்டதன் பின்னர் இந்நிகழ்வு மூடி மறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடமையில் இருந்த தாதி உத்தியோகத்தர் தமது பதவியை துஸ்பிரயோகம் செய்த குற்றத்தை நிர்வாகம் மூடிமறைத்திருப்பது இதுபோன்ற குற்றங்கள் இனிமேலும் நடைபெறுவதை ஊக்குவிக்க வாய்ப்புண்டு.
அரச சொத்தை துஸ்பிரயோகம் செய்தமை,மற்றும் அரச சொத்தை திருடியமை,நம்பிக்கைத்துரோகம்,மோசடி போன்ற செயல்களுக்காக குறித்த நபர்கள் குற்றம் சாடப்பட முடியும்.மேலும் இக்குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கு எதிராகவும் பொலீசார் நடவடிக்கை எடுக்க முடியும்.
கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இது விடையமாக இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் வினாத்தொடுக்கின்றனர்.
எனவே குறித்த நபர்கள் நீதிக்கு முன்னர் கொண்டுவரப்பட்டு இதுபோன்ற செயற்பாடுகள் இனிமேல் எந்த அரச வைத்தியசாலைகளிலும் நடைபெறாதவண்ணம் தண்டிக்கப்பட வேண்டும்.பொது மக்களது மருந்துகளை படித்த பட்டங்களில் உள்ளவர்கள் கொள்ளையடிப்பதை நிறுத்தவேண்டும்.சிறு தொழிலாளர்கள் இந்த மாதிரியான செயல்களை செய்து அம்பிட்டிருந்தால் நிருவாகம் கட்டாயம் நடவடிக்கை எடுத்திருக்கும்,உயர் பதவிகளில் இருப்போர் என்றால் வேறு நீதிதான்.
Post a Comment