ராஜபக்சவினரிடம் அதிகார போட்டி, பிரதமராகும் மகிந்தவின் கனவு தகர்ந்தது
எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பில் ராஜபக்ச சகோதரர்கள் இடையில், ஏற்பட்டுள்ள அதிகார போட்டி குறித்து வெறுப்படைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர், மீண்டும் சுதந்திரக்கட்சியில் இணைந்து வருவதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கம்பஹா அத்தனகல்ல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்துக்கொண்டார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் மகிந்த அமரவீர, ஏற்பட்டுள்ள நிலைமையில், 2020இல் பிரதமராகும் நோக்கில் இருக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் எதிர்பார்ப்பும் இந்த அதிகார போட்டி காரணமாக கனவாகவே மாறிப் போகும்.
நல்லாட்சி அரசாங்கம், உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் காணப்பட்ட தவறுகளை திருத்திக்கொண்டு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதால், தாமரை மொட்டு கருகி போய்விடும் எனக் கூறியுள்ளார்.
Nalla katpanai.
ReplyDelete