கொழும்பு பெரிய பள்ளிவாசலின் அசமந்தம் - மாளிகாவத்தை மையவாடி காணி பறிபோகுமா..?
காணியை அபகரித்து சட்டவிரோதமாக மாடிக்கட்டிடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதற்கு ஜயசிங்க என்பவருக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் நீதிமன்றம் மையவாடிக்குச் சொந்தமான காணியை நிலஅளவீடு செய்துள்ளது.
நீதிமன்றின் உத்தரவுக்கமைய நில அளவையாளர் ராசப்பாவினால் கடந்த புதன்கிழமையும், சனிக்கிழமையும் காணி நில அளவீடு செய்யப்பட்டது. இந்த வழக்கினை 2012 ஆம் ஆண்டு முஸ்லிம் மத உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு தாக்கல் செய்திருந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடி காணி அபகரிப்புக்கு எதிராக 2004 ஆம் ஆண்டு வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்ததும் பெரியபள்ளிவாசல் நிர்வாகிகள் வழக்கில் ஆஜராகாத காரணத்தினால் 2008 ஆம் ஆண்டு வழக்கு நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து 2012 ஆம் ஆண்டு முஸ்லிம் மத உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு வழக்கினைத் தாக்கல் செய்ததாக அவ் அமைப்பின் தலைவர் அஸ்லம் ஒத்மான் தெரிவித்தார்.
முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபயவின் அனுமதியுடனே கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் மாளிகாவத்தை மையவாடி காணியில் சட்டவிரோத கட்டிடத்தை ஜயசிங்க என்பவர் நிர்மாணித்ததாக ஏற்கனவே தகவல்கள் வெளியானைமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Post a Comment