சர்வதேசப் போட்டியில் இலங்கை, மாணவி சியாமா சாதனை
சிங்கப்பூரில் நடைபெற்ற ஆங்கில மொழிமூல கணித வினாடி வினாப் போட்டியில் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் க.பொ.த.சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவி சியாமா சுஹா மூன்றாமிடத்துக்கு தெரிவாகி வெண்கலப்பதக்கத்தினை தனதாக்கி கொண்டு சாதனை படைத்துள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
பல நாடுளின் போட்டியாளர்கள் கலந்துகொண்ட குறித்த போட்டியில் நாட்டிலுள்ள மாணவர்கள் சிங்கப்பூரில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ள சென்றிருந்தனர். அந்த வகையில் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகாவித்தியாலய மாணவி சியாமா சுஹா சர்வேதேச ரீதியிலும் தன்னுடைய திறமையினை வெளிப்படுத்தி மூன்றாமிடம் பெற்று வெண்கலப்பதக்கத்தினை பெற்றுள்ளார்.
சாதனை படைத்து நாட்டுக்கும், பாடசாலைக்கும், பிரதேசத்துக்கும் பெருமை சேர்த்துத் தந்துள்ள மாணவிக்கு தன்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதோடு குறித்த மாணவி தன்னுடைய திறமையினை வெளிக்காட்ட உதவிய ஆசிரியர்களுக்கும் குறிப்பாக கணிதப்பாட சிரேஷ்ட ஆசிரியர் எம்.ஏ.எம்.மன்சூர் அவர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். என அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தெரிவித்தார்.
(எச்.எம்.எம்.பர்ஸான்)
சிங்கப்பூர் வரை சென்று சாதித்த சாதனையாளர் சியாமா சுஹாவின் முகம் இங்கு JM இல் மட்டும் மறைந்திருப்பதன் மர்மம்தான் என்ன?
ReplyDeleteமார்க்கம் என்று எதையோ வைத்துக்ெகாண்டுள்ளனர் மஹிபால்
ReplyDeleteஇவ்வாறான படத்தைப்போட்டு அந்த மாணவியை அவமானப்படுத்தாமல் செய்தியை மட்டும் போட்டிருக்கலாம்
ReplyDeleteYou better exclude the photo than making a mockery out of her here. SHAME
ReplyDeleteJM Please remove her mask
ReplyDeleteDear admin...pls stop publishing woman's pictures of any religions....don't be double standard......
ReplyDeleteபடத்தை போடாமல் இருக்கனும் அல்லது முழுமையாக போடனும், இது ஒன்றுமில்லாமல் கேவலப்பட்ட வேலை பார்த்திருக்கக்கூடாது.
ReplyDeleteஇங்கு பின்னூட்டம் பதிந்துள்ள, வாசகர்களின் கவனத்திற்கு...!
ReplyDeleteமேற்குறித்த பிரதேசத்திலிருந்து, குறித்த செய்தியை அனுப்பியிருந்த சகோதரர் அந்த மாணவியின் முகத்தை மறைத்தே அனுப்பினார். அதன்படியே உங்கள் ஜப்னா முஸ்லிம் இணையம் அந்த புகைப்படத்தை அப்படியே பதிவேற்றம் செய்தது.
Please do not accept like this potos
ReplyDelete