புலி ஆதரவு, பேச்சு அடங்கியது - தவறை உணர்ந்தார் விஜயகலா
சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சுப்பதவியில் இருந்து தற்காலிகமாக விலகத் தீர்மானித்தள்தாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தான் தனது தவறை உணர்வதாகவும் பொறுப்புள்ள அமைச்சர் என்ற ரீதியில் தமது பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் எனது தவறை ஏற்றுக்கொள்ளுகின்றேன். ஏனெனில் நான் பெற்றுக்கொண்ட சத்தியப்பிரமாணத்திற்கு அமைய நான் தெரிவித்த கருத்து முரணானது.
விடுதலைப்புலிகள் அமைப்பு தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது. எனக்கு கட்சித் தலைவரோ அல்லது அரசாங்கமோ அறிவிக்க முன்னர் இது குறித்து முடிவை எடுத்துள்ளேன்.
என்னுடன் கட்சியின் தலைவர் கடந்த செவ்வாய்க்கிழமை தொடர்புகொண்ட போது, எனக்குத் தெரியும் நான் எந்த இடத்தில் பிழைவிட்டுள்ளேன் என்று. இந்த அரசாங்கத்தில் நான் பொறுப்புள்ள அமைச்சராக இருந்துகொண்டு நான் இப்படியொரு கருத்தை தெரிவித்த வேளை நான் என்ன நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமெனவும் எனக்குத் தெரியும்.
அந்தவகையில் நான் உடனடியாக கட்சியின் தலைவருக்கு கூறியிருந்தேன் நான் என்னுடைய பொறுப்பிலிருந்து மீறிவிட்டேன். ஆகையால் நீங்கள் நடவடிக்கை எடுத்து விசாரணை செய்யும் வரையும் நான் தற்காலிகமாக எனது பொறுப்பிலிருந்து உடனடியாக இராஜிநாமா செய்கின்றேன் என்று.
இந்நிலையில் எனது கட்சியின் தலைமைப்பீடம் நான் உடனடியான இராஜிநாமா செய்வதற்கு இடமளிக்கவில்லை.
இதனால் நான் உடனடியாக கொழும்புக்கு சென்று கட்சித் தலைவருடன் நேரடியாக தொடர்பு கொண்டேன். நேரடியாகவும் எனது நிலைப்பாட்டை அவரிடம் தெரிவித்துள்ளேன்.
நான் அதற்குரிய நடவடிக்கை எடுத்து அவர்களின் செயற்பாடுகளுக்கு இடைஞ்சலேற்படுத்தா வண்ணம் அவர்கள் அரசாங்கத்தை முன்கொண்டு செல்வதற்கு நானும் என் சார்பில் பொறுப்பான முடிவை எடுத்துள்ளேன். அந்த முடிவுக்கு இணங்க இந்த அரசாங்கம் எங்களையும் இதிலிருந்து காப்பாற்ற வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.
போராட்டத்துக்கும் தீவிரவாத்துக்கும் உள்ள வித்தியாசம் தெரியாத அமைச்சர்!!!
ReplyDeleteபோராளி-தனது இனம் அழிவதுக்கும் எதிராகவும் உரிமைக்காகவும் போராடுபவன்
தீவிரவாதி-தனது இனம் அழிக்கப்பட்டதற்காக அப்பாவிகளை கொலை செய்பவன்
அமைச்சருக்கே வித்தியாசம் தெரியவில்லை பொது மக்களின் நிலை கேட்க வேண்டுமா??
I thought she was praising the political wing of LTTE
ReplyDeleteஒரு பொம்புல வீட்டில் இருந்து சோறுகறி ஆக்கி குடும்பத்தை கவணிக்காமல் வீதிக்கு வந்தால் இப்படியும்்தடுமற்றங்க்கள் நடக்கும். இது ரொம்ப அவமானம்கோ.
ReplyDelete@online earning,
ReplyDeleteஉலகெங்கும் கொட்டிக்கிடக்கும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கு கூறுங்கள் போராளி என்றால் யார் முஸ்லீம் என்றால் மன்னிக்கவும தீவிரவாதி என்றால் யார் என. முஸ்லிம்கள் பாடம் எடுக்கும் அளவுக்கு தமிழர்கள் ஒன்றும் கொள்கை மாறிவிடவில்லை.
Anushath பாசிச பயங்கரவாத புலிகளிடம் கொலை செய்வதைவிட என்ன பெரிய கொள்கையிருந்தது? நீர் சொல்வதும் உண்மைதான் தமிழர்கள் இன்னும் கொலைகார சிந்தனையிலிருந்து மாறவில்லை இன்னொருமுறை புனர்வாழ்வளிக்கபட வேண்டும்
ReplyDeleteவிஜயகலா உங்களை போன்ற உத்தமியை, அமைச்சர் பதவியில் இருந்து அப்புறப்படுத்த, தமிழ் அரசியல்வாதிகள் மறைந்திருந்து முயன்றனர் என்று காதில் பலமாக அடிபடுகிறது.
ReplyDeleteடேய் சன்ட்ரலால்................. நீ ரெம்பத்தான் சொறீர..... தேவையில்லாமல முஸ்லிம்கள்ல சொரூர................
ReplyDeleteசெருப்படி வாங்கபபோற...........வேற ஒண்ணுமில்ல........
வடக்கு கிழக்கில் பேரினவாத கட்சிகளை பிரதிநிதிப்படுத்தும் தமிழ் உறுப்பினர்கள் தேவை இல்லை. வெட்கம் மானம் இல்லாமல் வாக்களித்தவர்களுக்கு சிங்கள பேரினவாதிகளின் செருப்படி!.இனியாவது திருந்தினால் சரி.
ReplyDeleteதமிழ் அரசியல்வாதிகள், இலங்கை அரசின் சட்ட, திட்டங்களையும், நாட்டின் இறையாண்மையையும் பிரதிநிதிப்படுத்த வேண்டும்.
ReplyDeleteதமிழ்ப் பயங்கரவாதிகளின் நிகழ்ச்சி நிரலை பிரதிநிதிப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.