Header Ads



"இது போன்ற முட்டாள்தனம், வேறெதுவும் இருக்க மாட்டாது"

இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகள் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டுமே ஒழிய இதற்காக நீதிமன்றங்களில் வழக்குகள் நடத்துவது சுமூகமான தீர்வுகளை ஒருபோதும் பெற்று தரவே மாட்டாது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். ரி. ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

நிந்தவூரில் உள்ள இவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.nதொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகள் பேச்சுவார்த்தைகள் மூலமாகவே தீர்க்கப்பட வேண்டும். மாறாக இதற்காக நீதிமன்றங்களில் வழக்குகள் நடத்துவது சுமூகமான தீர்வுகளை ஒருபோதும் பெற்று தரவே மாட்டாது.

காரைதீவு முச்சந்தியில் அமைந்து உள்ள காணி உரிமை தொடர்பான பிணக்குக்கு அமைதியான முறையில் சுமூகமான தீர்வை அடைய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு ஆகும்.

இதற்காக நானும், மாவை சேனாதிராசாவும் பல தடவைகள் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தி இருந்தோம். அவை நம்பிக்கை ஊட்டுகின்ற விதத்தில் அமைய பெற்று இருந்தன.

அதே போல காரைதீவை சேர்ந்த பிரமுகர்கள் பலரையும் சந்தித்து பல சுற்று பேச்சுகள் நடத்தி இருந்தேன்.

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் இனங்களை சிறுபான்மைகளாக மாற்றுகின்ற வேலை திட்டத்தை மிக நுட்பமான முறையில் திட்டமிட்ட வகையில் இந்நாட்டின் பெரும்பான்மை சமூகம் முன்னெடுத்து வருகின்றது.

இதற்கு இடையில் நீயா? நானா? என்கிற போட்டி மன பான்மையில் தமிழ் பேசும் இனங்கள் பிரிந்து பிளவுபட்டு நிற்கின்றன.

தமிழ் பேசும் இனங்களுக்கு இடையில் உண்மையான, தூய்மையான, இதய சுத்தியுடன் கூடிய நல்லிணக்கம், ஐக்கியம், சமாதானம் ஆகியன எப்போதும் நின்று நிலவுகின்ற பட்சத்தில் மாத்திரமே பெரும்பான்மை சமூகத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து நாம் ஓரளவுக்கேனும் தப்பி பிழைக்க முடியும்.

இதற்கு இரு இனங்களுக்கும் இடையில் புரிந்துணர்வு, சகிப்பு தன்மை, விட்டு கொடுப்பு ஆகியன அத்தியாவசியமானவையாக உள்ளன.

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இரு இனங்களுக்கும் இடையில் ஆங்காங்கு உள்ளன.

இவற்றுக்கு பேச்சுவார்த்தைகள் மூலமே சுமூக தீர்வை பெற்று கொள்ள முடியும் எனது அசைக்க முடியாத நம்பிக்கையும், விசுவாசமும் ஆகும்.

ஆனால் இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை எட்டுவதற்காக வழக்கு நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற முட்டாள்தனம் வேறெதுவும் இருக்க மாட்டாது என குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. பேச்சு வார்த்தைகள் மேம்பட கிழக்கில் சிவில் சமூக வளற்ச்சி ஏற்றதாழ்வாக உள்ள சூழல் மாறவேண்டும்.
    காணிப் பிரச்சினைக்கு பேச்சு வார்த்தைகளின் மூலம் மட்டுமே தீர்வு காணக்கூடிய சூழல் இலங்கையில் எந்த இடங்களிலுமில்லை. அக்கரைபற்று ஆலையடிவேம்பு காணிப்பிரச்சினை நீதிமன்றம்போயிருக்கிற்து. இவற்றையெல்லாம் முட்டாள் தனம் என்றால் அக்கரைபற்று முஸ்லிம் மக்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அதுபோலவே தனது அமைச்சு அதிகாரத்தை பயன் படுத்தி கோவில் காணியை அபகரித்ததாக இணையத்தில் வைரலான காணிப்பிரச்சினை பேசித் தீர்க்க முடியுமா? என்றாவது நீதிமன்றத்துக்குப் போகுமல்லவா? இனங்களுக்கு இடையிலான நில பிரச்சினைகள் குறுங்காலத்தில் பேசி தீர்க்க முடியாமல்தான் நீதிமன்றம் செல்கின்றன. எனவே குறுகாலத்தில் பேசி தீர்கமுடியாத பிரச்சினைகள் இன முறுகல்களாக தொடரவிடாமல் நீதிமன்றத்துக்குப் போவது சரியானதுதான்.

    ReplyDelete
  2. Agreed with mr.Jayapalan

    ReplyDelete

Powered by Blogger.