Header Ads



சோதனைகளை கடந்து, சாதனைகளை படைத்த லூகா மாட்ரிக்


பிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடரில் ஒட்டு மொத்த இங்கிலாந்தின் கனவை தகர்த்தவர் குரேஷியா அணித்தலைவர் லூகா மாட்ரிக்.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் பிஃபா உலக கிண்ண கால்பந்து தொடர் அதன் இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது.

இங்கிலாந்து மற்றும் குரேஷியா அணிகளுக்கு இடையே நடந்த இரண்டாவது அரையிறுதியில் லூகா மாட்ரிக் தலைமையிலான குரேஷியா அணி அபாரமாக விளையாடி முதன் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

குரேஷியா அணியை திறன்பட வழிநடத்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறச் செய்த லூகா மாட்ரிக் குடும்பம் குரேஷியாவில் பல நெருக்கடிகளை சந்தித்துள்ளது.

லூகா மாட்ரிக் பிறந்த(1985) காலகட்டத்தில் குரேஷியாவில் சுதந்திர போராட்டம் உச்சம் பெற்றிருந்தது.

இதனால் தங்கள் குடியிருந்த பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு அகதிகளாக் குடிபெயரும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.

மட்டுமின்றி லூகாவின் 6-வது வயதில் அவரது தாத்தா உள்ளிட்ட சிலரை பிரிவினைவாதிகள் கைது செய்து துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர். இதனிடையே குடியிருந்த வீடும் தீக்கிரையாக்கப்படவே 7 ஆண்டுகள் அருகாமையில் உள்ள சத்திரம் ஒன்றில் குடியேறியுள்ளனர்.

கால்பந்து விளையாட்டின்மீது தீராத மோகம் கொண்ட சிறுவன் லூகா மாட்ரிக் 1992 ஆம் ஆண்டு கால்பந்து தொழில்முறை பாடசாலை ஒன்றில் சேர்ந்துள்ளார்.

ஆனால் அங்குள்ள பயிற்சியாளர்கள் லூகா மாட்ரிக் கால்பந்து விளையாட மிகவும் தயக்கம் காட்டுவதாகவும் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் கூறி ஒதுக்கி வைத்தனர்.

இருப்பினும் தனது வெறித்தனமான முயற்சியால் ரியல் மாட்ரிட் அணியிலும் குரேஷிய தேசிய அணியிலும் பின்னாளில் இடம்பிடித்தார்.

மட்டுமின்றி 6 முறை குரேஷியாவின் சிறந்த கால்பந்து வீரர் என்ற பட்டத்தையும் தட்டிச்சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

Powered by Blogger.