Header Ads



தமிழ் - முஸ்லிம் உறவு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது

முகவரியற்ற சமூக ஊடகங்கள் வாயிலாக உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வடகிழக்கில் ஒற்றுமையாக வாழ்கின்ற தமிழ் - முஸ்லிம் மக்களின் உறவை பிரிக்க திட்டமிட்ட ரீதியில் சதி மேற்கொள்ளப்படுவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 

அவர் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட விசேட ஊடக அறிக்கையிலேயே பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- 

‘மட்டக்களப்பு, கிரான் பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற பஸ் - வேன் விபத்தொன்று சம்பந்தமாக சில முகவரியற்ற இனவாத தமிழ் இணையதளங்கள் உண்மைக்கு புறம்பான செய்திகளை என்னைத் தொடர்பு படுத்து வெளியிட்டிருந்தன. 

குறித்த செய்தியில் விபத்துக்குள்ளான  பஸ் எனக்குச் சொந்தமானாதாகவும், அதற்கு வீதி போக்குவரத்து அனுமதி பத்திரம் இல்லையென்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. குறித்த பஸ் எனக்குச் சொந்தமானது அல்ல. 

குறித்த பஸ் காத்தான்குடியிலிருந்து சொல்வதற்காக அது எனக்குச் சொந்தமானது என்று அனுமானித்து கூறுவது வேடிக்கையானது. 

இது போன்றே புல்லுமலை போத்தல் தொழிற்சாலை சம்பந்தமாகவும் சிலர் தமது அரசியல் இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்காக என்னைத் தொடர்பு படுத்தி பேசியிருந்தனர். 

வடகிழக்கில் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்ற தமிழ் - முஸ்லிம் மக்களின் உறவை திட்டமிட்ட ரீதியில் பிரிப்பதற்கு சில இனவாதிகள் முயற்சி செய்கின்றனர். குறித்த இனவாதிகளனாலேயே இவ்வாறான இனவாத வலையதளங்கள் இயக்கப்படுகின்றன. இது தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணை செய்ய வேண்டும். 

வெளிநாடுகளில் இருந்தவாரு இயக்கப்படும் இனவாத இணையதளங்கள் வாயிலாக உள்நாட்டில்  வாழ்கின்ற அப்பாவி இளைஞர்கள் பிழையாக வழிநடாத்தப்படுகின்றனர். இதனால் தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு இடையிலான உறவு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலை தொடருமாயின் எதிர்காலத்தில் மேலும் மோசமடையும். எனவே, இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி இனவாத இணையதளங்களை  முடக்கப்படுவதோடு, அதனோடு சம்பந்தப்பட்ட நபர்கள் தொடர்பில் அவதானமாகவும் இருக்க வேண்டும்.

யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியான சூழலை சீர்குலைத்து இனங்களுக்கு இடையில் முறுகளை ஏற்படுத்துவதன் ஊடாக சிலர் தமது சொந்த தேவைகளை அடைந்து கொள்ள முயற்சி செய்கின்றனர். இதற்கு சில அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள் உடந்தையாக இருக்கின்றமை கண்டிக்கத்தக்கது. – என்றார்.

3 comments:

  1. இலங்கையில் தமிழர் முஸ்லிம் உறவு இனி எப்போதும் ஸ்ஸ் செய்ய முடியாதளவு வளர தமிழ் அடிப்படைவாதிகள் காரணம்.

    ReplyDelete
  2. மேலும் பீதியோ, பாதுகாப்பைப் பற்றிய செய்தியோ அவர்களுக்கு எட்டுமானால், உடனே அவர்கள் அதை பரப்பி விடுகிறார்கள்; அவர்கள் அதை (அல்லாஹ்வின்) தூதரிடமோ, அல்லது அவர்களில் நின்றுமுள்ள அதிகாரிகளிடமோ தெரிவித்தால், அவர்களிலிருந்து அதை ஊகித்து அறியக்கூடியவர்கள், அதை நன்கு விசாரித்தறிந்து (தக்க ஏற்பாடுகளைச் செய்து) கொள்வார்கள். அல்லாஹ்வுடைய கிருபையும் அவனுடைய அருளும் உங்கள் மீதில்லாதிருந்தால், உங்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் ஷைத்தானையே பின்பற்றியிருப்பார்கள்.
    (அல்குர்ஆன் : 4:83)
    www.tamililquran.com

    ReplyDelete
  3. 30 வருட காலப் பயங்கரவாதப் பயிற்சி.

    அதற்கு உதவிய இந்திய பயங்கரவாத 'ரோ'

    போலித்தனமான இனப் பிரச்சனை என்ற மாயம்.

    வெளிநாடுகளில் இயங்கும், முகவரியற்ற தமிழ் இணையங்கள்.

    தமிழ் பயங்கரவாதத்தை வளர்த்த டிவி - வெளிநாடுகளில்.

    இனவாதக் கட்டுரைகளைத் தாங்கி வரும், வீரகேசரி, தினக்குரல் பத்திரிகைகள்.

    எந்நேரமும் இனவாதத்தைக் கக்கும், தமிழ் அரசியல்வாதிகள் - (எல்லாரும் அல்ல)

    இடையில் புகுந்து விளையாடிய, உலகப் பயங்கரவாத 'மொஸாட்' அமைப்பு.

    மூட்டி விட்டு, கூத்துப் பார்க்கும் அரசு.

    சமூக வலை தளங்களில் 'சடுகுடு' விளையாடும் தமிழ்ப் பயங்கரவாத எச்சங்கள்.

    இது போன்ற இன்னும் எத்தனையோ அன்றாட நிகழ்ச்சி நிரல்கள் - முஸ்லீம், தமிழ் சமூகங்களின் ஒற்றுமையை எப்போதோ நாசமாக்கி விட்டன.

    முஸ்லீம், தமிழ் மக்களின் ஒற்றுமையைக் குழைக்க என்ன சூழ்ச்சிகளை செய்தாலும், அதில் வெற்றியடைவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

    அவர்கள் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். இருப்பார்கள்.

    இறைவனின் நாட்டம் வேறாக இருக்கிறது.

    ReplyDelete

Powered by Blogger.