"சிங்களவர், இந்துக்களுக்கு முன் இலங்கையில் வாழ்ந்தவர்கள் முஸ்லிம்களே"
இலங்கையில் சிங்களவருக்கு முன் தமிழர் வாழ்ந்தனரா அல்லது சிங்களவர் முதல் வம்சமா என வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன் விலவும் மோதிக்கொள்வது அர்த்தமற்றதாகும். உண்மையில் சிங்களவர், இந்துக்களுக்கு முன் இலங்கையில் வாழ்ந்தவர்கள் முஸ்லிம்களாவர் என உலமா கட்சி தெரிவித்துள்ளது.
சிங்கள மக்களின் வரலாற்று ஆதார நூலாக மகா வம்சம் நூல் கருதப்பட்டு வந்தது. இப்போது சில ஹாமதுருமார் மகா வம்சத்தின் வரலாற்றைகூட பொய் என்பது போல் கூறுவதன் மூலம் மகா வம்சம் மறுக்கப்படுகிறது.
மஹா வம்சம் நூலின் பிரகாரம் சிங்கள மக்களின் பரம்பரை என்பது சுமார் 2700 ஆண்டுக்கு முன் இலங்கைக்கு வந்த விஜயனும், அவன் சகாக்களுடனும் ஆரம்பிக்கிறது. தமிழ் மக்களின் பாரம்பரியம் என்பது விஜயனுக்கும் அவன் தோழர்களுக்கும் தமிழகத்திலிருந்து மனைவிமாரையும் அவர்களின் குடும்பத்தவரையும் வரவழைத்ததிலிருந்து ஆரம்பமாகிறது.
ஆக சிங்களவர், தமிழர் இருவரும் ஒரே கால கட்டத்தில் இலங்கையை வந்தனர் என்பதால் யார் முந்தியது என்பது தேவையற்ற வாதமாகும்.
மேலும் பௌத்த மதம் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு வந்ததாக வரலாறு கூறுகிறது.
ஆனால் விஜயன் வருவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலங்கையில் மனிதர்கள் வாழ்ந்ததாகவும் அவர்கள் ஆதம் நபி மற்றும் நூஹ் நபியின் கப்பலில் தப்பிய முஸ்லிம்களின் வாரிசுகளான முஸ்லிம்கள் என்றும் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக உலமா கட்சி சொல்லிவருவதாலும் அதற்கிணங்க ஆராயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் எலும்புக்கூடுகள் இலங்கையில் கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாலும் மஹா வம்சத்தை பொய்யாக்க வேண்டிய நிர்ப்பந்தம் சில பௌத்த சமய தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் படி அண்மையில் பேசிய ஒரு பௌத்த சமய தலைவர் விஜயனுக்கு முன்பே ஹெல என்ற வம்சம் இலங்கையில் வாழ்ந்ததாக சொல்லியுள்ளார்.
அதே போல் யோனக்க ஹாமதுரு என்பவர் புத்தர் வாழ்ந்த காலத்திலேயே அவரை சந்திக்க சென்றதாகவும் சொல்லியுள்ளார்.
யோனக்க ஹாமதுரு என்பவர் சோனகர் என்பது அவரின் பெயரிலேயே தெரிகிறது. சோனக முஸ்லிம் ஒருவரே யோனக ஹாமதுரு என அழைக்கப்பட்டுள்ளார்.
எது எப்படியிருந்தாலும் சிங்கள மக்களின் தந்தையான விஜயனின் வருகைக்கு முன்பே இலங்கையில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது. அவர்கள் சிங்களவர்களோ இந்துக்களோ அல்ல. ஏனென்றால் இந்து மதம் உருவானது சுமார் இரண்டாயிரம் வருடத்துக்கு முன்பாக என இந்து மத வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆகவே சிங்களவர்களுக்கு முன் இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்ததாக வட மாகாண சபை உறுப்பினர் திரு. விக்ணேஸ்வரன் சொல்வதும் பிழை. சிங்களவர்களே முதல் இலங்கை பூர்வீகம் என உதய கம்மன்வில சொல்வதும் பிழையானதாகும்.
உண்மையில் சிங்களவரும், தமிழரும் இலங்கைக்கு வரு முன் இங்கு ஆதம் வாரிசுகள் என்ற ஆதிவாசி முஸ்லிம்களே வாழ்ந்தார்கள் என்பதே உண்மையாகும். அவர்கள் அரபு மொழி கலந்த சோனக மொழி பேசினார்கள். அவர்களில் பலர் யமன், மக்கா போன்ற இடங்களுக்கு குடி பெயர்ந்து அங்கு அரபுச்சமூகமாக வாழ்ந்தனர் என்பதே உண்மையான வரலாறாகும்.
இப்ராஹீம் நபி தனது மனைவி, மகனை மக்காவில் விட்ட போது அங்கு மனித சம்சாரமே இருக்கவில்லை. அதே போல் மக்காவை சுற்றி அறபுக்களும் வாழவில்லை. அரபிகளான வணிக கூட்டமே மக்காவில் தண்ணீரை கண்டு அங்கு குடியேறினர். அந்த அரபிகள் இலங்கையில் இருந்து சென்ற வணிக அரபிகள் என்ற கருத்தே வலுவாக உள்ளது.
- முபாறக் அப்துல் மஜீத் மௌலவி
கல்முனையிலை 4 வாக்குளை பெற்று பின் வந்து சொல்லுங்க. சும்ம கட்சியாம். எல்லா அமைச்சரிட்டையும் பிச்சை எடுக்கதான்
ReplyDeleteஇது அணு குண்டா அல்லது கிளஸ்டர் குண்டா அல்லது சாதாரண கைக்குண்டா அல்லது உள்ளூர் அணப்பா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ReplyDeleteNot Atomic bomb, not cluster bomb and not hand bomb..this is bushwanam..this guy is a real entertainer..
ReplyDeleteNow problems for Muslims not that who came to island first our living rights in the island peaceful living is a grave problem. Those who dont have any supports and opportunist make various problems and divert attention to real problems
ReplyDeleteஇது எதிர்பார்த்தது தான். நான் உங்களுக்கு சவால் விடுகின்றேன். நீங்கள் வேண்டும் என்றால் அரபு மற்றும் உருது அர்ச்சியாளர்களை கொண்டு இலங்கையிலே ஒரு தொல்ப்பொருள் அதாவது பாழடைந்த பள்ளிவாசலோ அல்லது கல்வெட்டுகளோ அல்லது நீங்கள் பேசிய பாஷைகளோ 1500 வருடங்களுக்கு முன் இருந்தது என்று நிரூபியுங்கள் இன்றிலிருந்து நான் இஸ்லாம் மதத்தை தழுவி கொள்கின்றேன்.
ReplyDeleteகாமெடி பீஸ்
ReplyDeleteWho comes first is not the matter, who lives peacefully in this country is the matter.........
ReplyDelete