Header Ads



முஸ்லிம்களின் குடித்தொகை வளர்ச்சி - பூச்சாண்டியும், யதார்த்தமும்...!!

-வ.ஐ.ச.ஜெயபாலன்-

என்னை இனிமேல் விடுதலை செய்வதில்லையெனவும் சிறையில்தான் என் வாழ்வு முடியுமெனவும் தெரிவித்து 2013ல் அன்றைய இலங்கை பாதுகாப்பு செயலாளர் என்னைச் சிறையிட்டார். அந்தச் சூழலில் என்னை சந்தித்த பாதுகாப்பு அதிகாரிகள் சிலர் என்னுடைய முஸ்லிம் ஆதரவு கொள்கை சிங்களவருக்கும் தமிழருக்கும் பாதகமானது என்று எச்சரித்தார்கள். 

ஐரோப்பாவில் நான் அடிக்கடி கேட்பதுபோல சிங்கள பாதுகாப்பு அதிகாரிகளும் பிறப்பு விகித ஏற்றத்தாழ்வுகளையே முன்னிலைப் படுத்திப் பேசினார்கள். அதை நிராகரித்தபோது திருகோணமலையின் 100 வருடப் புள்ளிவிபரங்களைக் காட்டி திருகோணமலை தமிழர்களிடம் இருந்து பறி போனதுபோல முழு இலங்கையும் சிங்களவர்களிடமும் தமிழர்களிடமும் இருந்து பறிபோகிற ஆபத்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் சிங்களவர்களும் தமிழர்களும் இணைந்து போராடி இலங்கையைக் காப்பாற்ற வேண்டுமென சொன்னார்கள். அவர்களை எதிர்ப்பது என் விடுதலைக்கான சாத்தியத்த அருகச்செய்துவிடும் என்பது தெரிந்தும் அவர்கள் கருத்தை நிராகரித்தேன். 
.
இதுபோன்ற பிரச்சாரங்கள் தமிழர் மத்தியில் சில சமூக சக்திகளால் முன்வைக்கபடுகின்றது. இப்ப என்னை எச்சரிக்கும் தமிழர்கள் சிலரும் திருகோணமலையின் 100 வருடப் புள்ளிவிபரங்களை சுட்டிக் காட்டுகின்றனர். இவை பற்றி எல்லாம் தமிழ் முஸ்லிம் அறிஞர்கள் ஆய்வு அடிப்படையில் கருத்துக்களை முன்வைக்க வேண்டும்.  
.
தமிழர் மத்தியிலும் பேரின சக்திகளால் உருவாக்கப் பட்ட அச்சத்தையே மூன்றாவது பிள்ளைக்கு உதவி செய்யும் புலம் பெயர்ந்த தமிழரின் முனைப்பு முனைப்பு வெளிப்படுத்துகிறது. ஆனால் அவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியது கிழக்கு மாகாணத்தில் அநாதரவாகத் தவிக்கும் பெண்கள் தலைமைக் குடும்பங்களும் ஏதிலிகளாய் நலிந்த முன்னைநாள் போராளிகளின் குடும்பங்களும் இந்தியாவில் இருந்தும் இலங்கையின் ஏனைய பகுதிகளில் இருந்தும் கிழக்கு திரும்பும் அகதிக் குடும்பங்களுக்கும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.  
.
நான் சிறையில் சிங்கள அதிகாரிகளுடன் விவாதிக்கும்போது திருகோணமலை மாவட்ட குடிசன புள்ளிவிபரங்கள் நூறு வருடங்களின் முன் 1921ல் தமிழர் 59.98% முஸ்லிம்கள் 20.04%  சிங்களவர் 4.4% இருந்துள்ளார்கள் 1946 திட்ட மிட்ட சிங்களக் குடியேற்றம் திருகோணமலை புள்ளிவிபரங்களை தம்ப வைக்கிறது. யுத்தம் ஆரம்பிக்க முன்னம் 1981ல்  தமிழர் 36.3% முஸ்லிம்கள் 29.3%ம் சிங்களவர் 33.4% பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 
1946ல் சிங்கள குடியேற்ற தளம்பல் வந்ததுபோல 1981ல்    திருகோண மலை குடிசன அமைப்பு யுத்த புலபெயர்வுத் தளம்பலால் பாதிக்கப் படுகிறது. 1987 -1990 இந்திய அமைதிப்படைக் காலக்கட்டத்தில் ஏற்பட்ட சிங்களவர் வெளியேற்றத் தளம்பல் 2001 புள்ளிவிபரங்கள் இல்லாதமையால் பதிவாகவில்லை. ஆனாலும் 2007 புள்ளிவிபரங்கள் சிங்களவர் வெளியேற்ற தளம்பலை ஓரளவு புரிந்துகொள்ள உதவுகிறது. செய்துள்ளது. 1981ல் 33.4% ஆக இருந்த சிங்களவர் தொகை 25,3% ஏறக்குறைய 8% வீழ்ச்சி பதிவாகியுள்ளது. 
.
யுத்தத்துக்கு பின்னர் 1980பதுகளில் ஏறக்குறைய 30000 - 35000 பேர் குடும்பங்களோடு வெளியேறினர். குழந்தைகளோடு இவர்கள் தொகை இன்று 60000 -70000 அளவில் இருக்கும் இவர்களுள் மேல்நாடுகளில் அகதிகளான சில ஆயிரம் பேரைத்தவிர ஏனையோர் இந்திய முகாங்களில் இருந்தும் இலங்கையின் ஏனைய பகுதிகளில் இருந்தும் மெல்ல மெல்ல வர ஆரம்பிடத்துள்ளனர். இந்த வருகை திருகோணமலையின் புள்ளிவிபரங்களில் தளம்பலை ஏற்படுத்தியுள்ளது. 2007ல் 28.7% இருந்த தமிழர் 2012ல் 32.2% ஆக 3.5% அதிகரித்துள்ளனர். முஸ்லிம்களின் குடித்தொகையில் வீழ்ச்சி ஆரம்பித்துள்ளது. 2007ல் 45.4% மாக இருந்த குடித்தொகை 2012ல் 40.4% வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவில் இருந்தும் இலங்கையின் ஏனைய பகுதிகளில் இருந்தும் அகதிகள் மீழ்வரவு ஆரம்பித்தமை ஐந்து வருடங்களில் முஸ்லிம்களின் சனத்தொகை வீதத்தை ஏறக்குறைய 5% களால் வீழ்ச்சி அடையச் செய்துள்ளது. தமிழர் குடித்தொகை 3.5% வீத உயர்வை பதிவு செய்துள்ளது. இக்காலகட்டத்தில் சிங்களவர் தொகை சிறிது அதிகரித்துள்ளது. தொடரும் அகதிகளதும் பிள்ளைகளதும் வரவு அடுத்த ஐந்து வருடங்களில் முஸ்லிம்களதும் தமிழர்களதும் வீதாசாரத்தில் பாரிய மாற்றங்கலை ஏற்படுத்தும். தமிழர் முஸ்லிம்களின் குடித்தொகை விகிதாசாரம் தமிழர் 36% முஸ்லிம்கள் 30% என்கிற  1981 மட்டத்தை நோக்கி வேகமாக நகர்வதை நான் சிங்கள பாதுகாப்பு அதிகாரிகளிடம் 2013ல் சுட்டிக் காட்டினேன்.

அம்பாறை மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் அகதிகள் இன்னும் பெருமளவு வீடு திரும்பவில்லைப்போலும்.  மட்டக் களப்பில் சிங்களவர் தொகையில் வீழ்ச்சி ஏற்படுள்ளது. இதனால் தமிழர் முஸ்லிம்களின் வீதாசாரத்தில் உயர்வு காணப்படுகிறடு. முஸ்லிம்களின் வளற்ச்சி வீதம் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் சிறிய அளவே அதிகரித்துள்ளது. பூச்சாண்டி காட்டுமளவுக்கு பூதாகரமான பிறப்புவிகித தாக்கம் பதிவாகவில்லை.   போர்க்காலத்தில் அம்பாறையில் இருந்து மட்டக்களப்புக்கும் ஏனைய இடங்களுக்கும் அகதியாக புலம் பெயர்ந்தவர்கள் பெருமளவு இன்னும் ஊர் திரும்பவில்லையா? அம்பாறை மாவட்டத்தில் மட்டும்தான் தமிழர்கள் வீதாசாரம் குறைவடைந்துள்ளது. இது ஆய்வுகும் நிவர்த்திக்கும் உரியது.     
.
பெரிய குடும்பங்கள் ஆரோக்கியமான குடும்பகளில்லை என்பது உலகளாவ நிரூபணமாகி உள்ளது. உலகின் பலமான நாடுகள் யாவும் குறைந்த பிறப்பு வீதத்தைக் கொண்ட நாடுகள்தான். உலகின் பலக்கீனமான நாடுகள் பிறப்பு வீதம் அதிகரித்துள்ள நாடுகளாகும். இதையெல்லாம் விஞான ரீதியாக தமிழர்கள் புறக்கணித்துவிட முடியாது. பிறப்பு விகிதத்தைக் குறைக்காமல் ஆரோக்கியமும் பலமுமுள்ள இனமாக மேம்பட முடியாது என்கிற உலக அனுபவத்தை முஸ்லிம்களும் புறக்கணிக்க முடியாது.     . 
.
திருகோணமலை குடித்தொகை விகிதாசார தளம்பல்கள் பற்றிய புள்ளிவிபர பூச்சாண்டிக்கு தமிழர்கள் மிரளவேண்டிய அவசியம் எதுவுமில்லை. புலம் பெயர்ந்த தமிழர்கள் மூன்றாவது குழந்தைக்கு பணம் கொடுப்பதைவிட  திருமலை மாவட்டத்துக்கு திரும்பிவரும்  தமிழ் அகதிகளுக்கு உதவி ஊக்குவிப்பது அவசியம் என வையுறுத்துகிறேன்.

1 comment:

  1. There are arnd 100 000 people to resettle in Muthur, Samboor, Kilivetti,,Kandalai,pankulam and Pulmottai especially from Indian Camps. As far as i kniw around 3000 refugees were returned to Trinco district after 2009.
    But sinhala colognisation is making more shrinkages in Tamil population.
    Because muslim population concentrated on some minor areas with high density

    ReplyDelete

Powered by Blogger.