வானியலை வைத்து சந்திரகிரகணத்தை கூறும் ஜம்மிய்யத்துல் உலமா, பிறையை ஏற்காதது ன்...?
வானியலின் அறிவிப்பை ஏற்று இன்று -27- சந்திர கிரகணம் ஏற்படும் என்றும் அதன்படி சந்திரகிரகரண தொழுகை தொழும்படியும் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா கூறிவிட்டு பிறை விடயத்தில் மட்டும் வானியல் அறிவிப்பை ஏற்க முடியாது என சொல்வது உலமா சபையின் முரண்பட்ட கொள்கையை காட்டுகிறது என உலமா கட்சி தெரிவித்துள்ளது.
சந்திரன், பிறை போன்ற விடயத்தில் முஸ்லிம்களுக்கு தெளிவான வழிகாட்டலை செய்ய வேண்டிய உலமா சபை தொடர்ந்தும் தாமும் குழம்பி மக்களையும் குழப்பிக்கொண்டிருப்பது கவலையான விடயம்.
சந்திரன் என்பது பிறை என்பதும் முழு உலகுக்கும் ஒன்றுதான். அந்த வகையில் இன்று பிறை 14 பூரண சந்திரனின் நாளாகும் என்பதை முழு உலகும் ஏற்றுக்கொண்டுள்ளது. இதனை உலமா சபையும் ஏற்றுக்கொண்டு இன்றைய பௌர்ணமியில் ஏற்படும் சந்திர கிரகணம் சம்பந்தமாக வானியல் அறிவிப்பை தேவ வாக்காக ஏற்று கிரகரண தொழுகை தொழும்படி அறிவித்தும் உள்ளது. அதே வேளை உலமா சபையால் வெளியிடப்பட்டுள்ள இம்மாதத்துக்கான பிறைக்கலண்டரில் இன்றைய சந்திர திகதி 13 என குறிப்பிட்டுள்ளதன் மூலம் ஜம்மிய்யத்துல் உலமா நகைப்புக்குள்ளாகியுள்ளது.
ஆக இம்மாத பிறை காணுதல் என்பது ஒரு நாள் தாமதித்தே உலமா சபை கண்டுள்ளதே தவிர பிறை தாமதிக்கவில்லை என்பது தெளிவாகிறது.
பிறை தெரியலாம் என வானியல் அறிக்கையை பெரிதும் கணக்கில் எடுக்காமல் சந்திர கிரகண விடயத்தில் மட்டும் வானியலை ஏற்பதற்கு முன் வந்தது ஏன்? நபியவர்கள் சந்திரகிரகணம் ஏற்படுவதை கண்ணால் கண்ட போதுதான் தொழுகைக்கு அறிவித்தார்களே தவிர காணும் முன் கேள்விப்பட்டதன் அடிப்படையில் கிரகணத்தொழுகை தொழவில்லை.
பிறை விடயத்தில் கண்ணால் காண வேண்டும் என பிடிவாதம் பிடிப்போர் கண்ணால் காணும்முன் சந்திர கிரகணத்தை அறிவித்துள்ளமை வேடிக்கையானது.
எனினும் வானியலை வைத்து இன்றைய சந்திரகிரகணத்தை உலமா சபை அறிவித்ததை நாம் தவறாக காணவில்லை. ஆனாலும் இதே அறிவை ஏன் பிறை விடயத்திலும் செயற்படுத்த முடியாது என்றுதான் கேட்கிறோம்.
பிறை என்பது நாட்டுக்கு நாடு வித்தியாசப்படாது. அவ்வாறு வித்தியாசப்படும் என்றிருந்தால் இன்று உலகம் முழுவதும் பௌர்ணமியாக இருக்காது.
ஆகவே பிறை பற்றிய தெளிவான அறிவு ஜம்மிய்யத்துல் உலமாவிடம் இன்னமும் இல்லை என்பதால் இது விடயத்தில் மாதாமாதம் பிறைக்கலண்டரை வெளியிட்டு மக்களை குழப்புவதை தவிர்த்து இது விடயத்தில் உலகளாவின் முஸ்லிம் உம்மத்தின் தலைநகரான மக்காவின் பிறை அறிவித்தலையும் மக்காவின் உம்முல் குறா கலண்டரையும் ஏற்க முன் வர வேண்டும் என உலமா சபை அறை கூவல் விடுக்கின்றது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
உலமா கட்சித் தலைவர் உலமா சபையில் அங்கத்துவம் பெற்று, தம் கருத்துக்களை அவர்களிடம் நேரடியாக முன்வைத்து ஆலோசிப்பது சமூகத்துக்கு நல்லதல்லவா?
ReplyDeleteநியாயமான கேள்வி?
ReplyDeleteHippo-crazy!
ReplyDeleteமௌலவி அப்துல் மஜீத் அவர்கள்தான் ஜம்இய்யாவின் நிலைப்பாட்டை தெளிவாக புரிந்து கொள்ளாமல் உளரிக் கொண்டிருக்கிறார். தயவு செய்து ஏதாவதொன்றை கற்பனை செய்து கொண்டு உளராமல் , ஜம்இய்யதுல் உலமாவிற்கு நேரடியாக சென்று தெளிவு பெறுமாறு வேண்டிக் கொள்கிறேன்.
ReplyDeleteசந்திர கிரகணத்தை கண்ணால் கண்ட பிறகே தொழுகை நடத்தினர்
ReplyDeleteமக்கள் சிந்திக்க வேண்டிய நியாயமான கேள்வி, எங்க மக்கள் சிந்திப்பார்களா? சிந்திக்கத்தான் விட்டு விடுவார்களா இந்த A.M.Musin மற்றும் Mahibal M,Fassy போன்றவர்கள்?
ReplyDeleteஅவர் கூறியது சரி. ஜம்இய்யதுல் உலமாதான் கற்பனையில் பிறை பார்க்கிறார்கள். அப்படியென்றால் தொழுகைக்கான நேரத்தையும் கடிகாரம் கொண்டு கணிக்க கூடாது.
ReplyDeleteஉலமா கட்ச்சியின் தலைவர் என்று கூறிக் கொண்டு 5,6 கிலடுகளுடன் மாத்திரம் கட்ச்சி நடாத்தும் தலைவர் அவர்களே ஜம்இய்யாவின் அறிக்கையை வாசித்துப் பார்த்தீர்களா வாசிக்க தெறிந்திருந்தால் விழங்கிக் கொள்வீர்கள்.
ReplyDeleteவானியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன என்று கூறிய பின்....... கிரகணம் ஏற்படுவதை காணும் போது என்று குறிப்பிட்டதை புறிந்துக் கொள்ளவில்லையா?
முபாரக் மவ்லவி JU வின் அறிக்கையை தவறாக புரிந்து உளருகிறார்.
ReplyDeleteவானியல் அறிக்கையை கொண்டு கிரகணம் குறிப்பிட்ட நேரத்தில் தோன்றலாம் என்று JU கூறுகிறதே தவிர அதை அப்படியே ஏற்க சொல்லவில்லை. சாத்தியப்பாடு இருப்பதை விஞ்சான அடிப்படையில் எதிர்வு கூறுகிறது.
*"கிரகணம் தோன்றுவதை கண்டால் தான் தொழும்படி அறிவிக்கிறது.*
Read the letter again."
பல நாடுகளுக்கு அந்த கிரகணம் தெரியாது. ஏனெனில் அந்நாடுகளுக்கு பகல் பொழுதாக இருக்கும்.
உலகத்துக்கே கிரகணம் ஒன்று என்பதட்காக எல்லா நாடும் கிரகண தொழுகை தொழ தேவை இல்லை. காரணம் கிறகணத்துக்கு அடுத்த திசையில் பகலாக இருக்கும் நாடுகள் தொழ தேவையில்லை. அவர்களுக்கு அது தோன்றாது.
இதே நிலைப்பாடுதான் தலைப்பிறை விடயத்திலும்.
வானியலை ஏற்று தான் தலை பிறை பார்க்க சொல்கிறார்கள். (2015 குளறுபடி பலருக்கு ஞாபகம் இருக்கோ தெரியாது. பிறை கண்டதாக சொன்ன சாட்சியம் வானியல் சொன்ன நேர இடைவெளியில் இல்லை என்று நிராகரிக்க பட்டது. இதிலும் பல சர்ச்சைகள் உண்டு)
கண்ணுக்கு பிறை தென்படும்போதுதான் அங்கீகரிக்க படுகிறது.
அடுத்து தலை பிறையோ பவ்ர்ணமியோ எல்லா நாட்டுக்கும் ஒரே நாளில் தெரியாது.
( இதுவும் வானியல் விஞ்சானம் மூலம் உறுதிப்படுத்த பட்டது.)
அதட்காக இம்முறை தலைப்பிறை கண்ட சாட்சியங்களை மறுதலித்த ACJU வின் நியாயப்படுத்தலையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
"வளர்பிறை என்பதும் தேய் பிறை என்பதும் நிலவுக்கு தெரியாது."
Abu Zalha சிந்திப்பதை நான் தடுக்கவில்லை. ஆனால் சிந்தனைக்காக விடும் துனுக்குகள் அடிப்படை அற்றதாகவோ, அல்லது விளக்கமற்ற குழப்பத்தினால் உருவானதாகவோ இருக்கக் கூடாது. இங்கே முபாரக் மௌலவிக்கு அதுதான் ஏற்பட்டடுள்ளது. உங்களுக்கும் அதன் காற்று பட்டுள்ளதென நினைக்கிறேன்.
ReplyDeleteAbu Zalha சிந்திப்பதை நான் தடுக்கவில்லை . ஆனால் சிந்தனைக்காக விடும் துனுக்குகள் அடிப்படை அற்றதாகவோ, அல்லது விளக்கமற்ற குழப்பத்தினால் உருவானதாகவோ இருக்கக் கூடாது. இங்கே முபாரக் மௌலவிக்கு அதுதான் ஏற்பட்டடுள்ளது. உங்களுக்கும் அதன் காற்று பட்டுள்ளதென நினைக்கிறேன்.
ReplyDeleteசாதித்து புகழ் பெறுவார்கள் வல்லவர்கள்...
ReplyDeleteசாதித்தவர்களை ஏசி புகழ் பெற நினைப்பார்கள் சிறுமை குணம் படைத்தவர்கள்
முபாறக் மொளலவி யின் தடுமாற்றம் தேசம் அறிந்த நகைச்சுவை
ReplyDelete